ஜாவித்
இறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத மூடர்கள் பர்தாவை கண்டதும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். காம வெறியர்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் இந்த பெட்டகம், உடலுக்கு மட்டும் போடவில்லை. பார்வைக்கு நடைக்கு மற்றும் உள்ள அனைத்திற்கும் தான்.
ஏனென்றால் பெண்மை என்ற மென்மை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். சந்தை மாடுகளை போல் அவிழ்த்து, காண்பவர் கண்களுக்கு விருந்து படைக்க அது ஒன்றும் கடையில் விற்கப்படும் காலனா பொருள் அல்ல. கற்பை பாதுகாப்பது அடிமை தனமா?
மேலே கூறிய எந்த உரிமையையும் பெண்களுக்கு கொடுக்காமல் பர்தாவை மட்டும் கொடுத்து மூலையில் முடக்கி உட்கார சொன்னால் தான் அடிமை தனம் எனலாம்…
நபியே, நீர் கூறுவீராக! மூஃமினான பெண்கள், தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்’. (திருக்குர்ஆன் 24: 31)
இப்படி பாதுகாப்புடன் அவள் ஆசிரியை பணி மட்டுமல்ல ஆகாயத்தை எட்டி பிடிக்கும் பணியையும் செய்யலாம். இதை விடுத்து அரை குறை ஆடையுடன் அரை கால் டவுசரும் போடும் உரிமையும் ஆண்களைப்போல் வெளியில் சுற்றி திரியும் உரிமையும் வேண்டும் என்பவர்களுக்கு பர்தா மட்டும் அல்ல, சொல்லப்படும் அனைத்து ஒழுக்க மாண்புகளும் உரிமை பறிப்பாக தான் இருக்க தெரியும்.
விழா கோலம் பூண்டு உலா வரவும் உல்லாசப்பறவை போல் பறந்து காணும் கண்களுக்கெல்லாம் குளிர்ச்சி ஊட்டும் காட்சி பொருளாக இருக்க வேண்டும் என்ற உரிமை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலருக்கு இஸ்லாத்தில் மட்டும் அல்ல கலாச்சாரம் மிக்க எந்த நாட்டிலும் எந்தவொரு வீட்டிலும் இடமிருக்காது.
இன்று நாகரீகத்தின் உச்சியில், சுதந்திரத்தின் உரிமையாளர்கள், பொருளாதாரத்தின் சூத்திரதாரிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாகரீகங்களில் காண்பதென்ன?
பர்தா இல்லாமல் போனதாலே அரைகுறை ஆடையணிந்து உலாவரும் மாதுக்கள், நகரின் அழகான புல்வெளி பூஞ்சோலைகளிலே போவோர் வருவோர் காணும் வண்ணம் தம் ஆட்டங்களை வெட்கமின்றி நிறைவேற்றும் கூட்டங்கள். தந்தை மகளையும், தாய் மகனையும். அண்ணன் தங்கையையும் அறிய முடியாத குடும்ப பாங்கு. விலங்கை விட கேவலமாக களியாட்டங்கள் நிறைவேறுகின்றன. பர்தா இருந்திருந்தால் இந்நிலை தோன்றுமா?
பெரும் போர்களுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் வித்திடும் பெண் கவர்ச்சியை மூடி மறைத்தால்தான் இப்பூமி அழகானதாக இருக்கும்.
பர்தா என்பது ஒரு அடிமைத்தனதான ஆடை, பிற்போக்குதனமான ஆடை, பர்தா அணிந்த பெண்கள் தீவிரவாதிகள், பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக பறிக்கக்கூடிய ஆடை என்று பல்வேறு துவேஷங்களுக்கு உள்ளான இந்த பர்தா முறையை, இன்று உலகில் பல பெண்கள் அதன் அவசியத்தையும், பயனையும் அறியக்கூடியவர்களாக இருகின்றனர். அதனை உணரவும் செய்கின்றனர். இன்று பல மேற்கத்திய நாடுகளை நாம் பார்க்கும்போது கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.
இஸ்லாம் பெண்களை பகட்டுபொருளாக பார்க்கவில்லை. பொக்கிஷமாக பாதுகாக்கிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போது அடிமையாக வாழ்பவர்கள் போல தெரியும் இஸ்லாமிய பெண்களை நெருங்கி பார்த்தால் அல்லாஹ்வின் அருளில் அவள் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் ஒழுக்கத்துடன் நிறைவேற்றி உண்மையான உரிமையுடன் உல்லாசமாக ஆனந்தமாக வாழ்கிறார்கள்.