[ அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,645 கோடியாகும். இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்;
ரூ. 1 கோடி வீதம் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்;
ரூ. 5 கோடி வீதம் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்;
ரூ. 100 கோடி கோடி எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்;
11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்;
27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம்.
ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.
ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் – ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் – இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்? அந்த லஞ்சப் பணத்தை எப்படி வசூலிக்கப்போகிறார்கள்?!
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை – ரூ. ஐம்பதாயிரம் கோடி – ரூ. எழுபதாயிரம் கோடி – என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக – அறிக்கையாக அளித்திருக்கிறது.
சிஏஜி-யின் 77 பக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி-யின் 77 பக்க அறிக்கை விவரம் வருமாறு:
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர் ராசா (தற்போது முன்னால் அமைச்சர்) செயல்பட்டுள்ளார்.
ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு 2007-ம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் லைசென்ஸ் வழங்குவதில் ஒளிவு, மறைவற்ற தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். அலைக்கற்றை போதுமான அளவுக்கு இல்லாததாலும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாலும் இதில் வெளிப்படையான தன்மை பின்பற்றப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, சட்ட அமைச்சகம், அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவைக் கூட்டி இது குறித்து விவாதிக்கலாம் என்றும் அதில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தது. இதே கருத்தை நிதி அமைச்சகமும் சுட்டிக் காட்டியிருந்தது.
ஆனால் இவை அனைத்தையும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் புறக்கணித்துவிட்டது. புதிதாக கொள்கை வகுப்பதாயிருந்தால்தான் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும். ஆனால் இப்போது புதிய கொள்கை ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசென்ஸ் (யுஏஎஸ்எஸ்) வழங்குவதில் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டியதில்லை என ராசா தெரிவித்துவிட்டார்.
தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வகுத்தளித்த விதிமுறைகளுக்குக் கூட முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விதிமுறைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
122 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 35 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை தொழில்நுட்பம் (சிடிஎம்ஏ-ஜிஎஸ்எம்) லைசென்ஸன்ம் அடங்கும். இவை அனைத்தும் 2007-08-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,645 கோடியாகும்.
லைசென்ஸ் கோரிய நிறுவனங்களின் விண்ணப்பங்களை தொலைத் தொடர்புத் துறை பரிசீலித்ததில் மொத்தம் விண்ணப்பித்த 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதுமான நிதி மூலதனத்தை உடையனவாக இருக்கவில்லை. இந்த 85 நிறுவனங்களில் 45 நிறுவனங்கள் மிக முக்கியமான நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்களுக்கு இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்குவதில் போதிய வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை. இதேபோல இரட்டைத் தொழில்நுட்பம் தேவை என மனு செய்த நிறுவனங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் 2003 மத்திய அமைச்சரவை எடுத்த முடிவையும் ஆ. ராசா மீறியுள்ளார். அதாவது இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்கும்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என கூறியிருந்தது.
2007-ம் ஆண்டு அக்டோபரில்தான் இரட்டைத் தொழில்நுட்ப முறை அமலுக்கு வந்தது. இதற்கான லைசென்ஸ் வழங்குவது விரைவாகவும், சட்ட விதிமுறைகளையும் மீறி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப முறையிலான சேவை குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூன்று நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது. இது இத்துறையில் மற்ற நிறுவனங்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கை என்றும் சுட்டிக் காட்டியது.
லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களில் சில, சேவையைத் தொடராமல் அதிக விலைக்கு பிற இந்திய அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கு தங்களது பங்குகளை விற்பனை செய்துள்ளன என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
லைசென்ஸ் கோரி விண்ணப்பித்த நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து இதற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. செப்டம்பர் 25,2007-ல் வந்த விண்ணப்பங்களில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு பிராந்தியங்களில் தொலைத் தொடர்பு சேவை தொடங்க மொத்தம் 157 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு நியாயமான விலை நிர்ணயித்திருந்தால் 58 ஆயிரம் கோடியிலிருந்து 1,52,038 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும். 51 வட்டாரங்களில் 13 நிறுவனங்கள் சேவை தொடங்க 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் அளித்த தொகை வெறும் 2,561 கோடி மட்டுமே.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 3-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்பட்டது. இதனால் அரசுக்கு 67 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இத்தகைய வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.
இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட “சஞ்சார் பவ’னில் நடந்த அடிதடியும்… இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.
தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.
தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.
பிரச்னை நீதிமன்றப் படியேறியது. “”நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது” என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.
அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். “”அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?” என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.
ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.
இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்;
ரூ. 1 கோடி வீதம் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்;
ரூ. 5 கோடி வீதம் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்;
ரூ. 100 கோடி கோடி எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்;
11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம்.
ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.
ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் – ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் – இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?
அந்த லஞ்சப் பணத்தை எப்படி வசூலிப்பார்கள்?
2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். ‘வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது’ என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி மலைபோல் எழும்.
அது… இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!
அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!
இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா…?
இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?
விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!
எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம்.
ஆதாரம்: பத்திரிகை செய்திகள்