உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடினால் தானே பார்வையின் அருமை தெரிகிறது.
உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்திருப்போமா? கண்ணில் வரும் நோய்களை அலட்சியப் படுத்துகிறோம். முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை.
அதனால் தானே உலகில் இன்று 4.5 கோடிப் பேர் பார்வையில்லாமலும், 13.5 கோடிப் பேர் பார்வைக் குறைவாலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பார்வையிழப்புக்கு Cataract என்று சொல்லப்படும் கண் புரை தான் முக்கிய காரணம். நாற்பது வயதுக்கு மேல் பார்வைக் குறைவு ஏற்பட்டால் அது பெரும்பாலும் கண் புரையினால் இருக்கலாம். பொதுவாக நம் கண்ணில் உள்ள விழி ஆடி, ஒளி ஊடுருவுந் தன்மையை விழி ஆடி இழந்து விடலாம்.
கண்ணின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருந்து விழி ஆடி மட்டும் கெட்டுப் போய் விடுவதால் கண்ணுக்குள் ஒளிக் கதிர்கள் செல்ல முடியாது. இதனால் தாற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. இது தான் கண்புரை.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் உலக சுகாதார நிறுவனம், பார்வையிழப்பைக் கட்டுப் படுத்துவதற்கான உலகளாவிய அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 2020 – ம் ஆண்டுக்குள் பார்வையிழப்பைக் கட்டுப்படுத்த வேண்டி ‘பார்வைக்கு உரிமை’ என்ற திட்டத்தைச் செயல் படுத்தி வருகிறது.
பார்வையிழப்புக்கான முக்கிய காரணங்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பார்வையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (அக்.10) உலகம் முழுவதும் உலக பார்வை நாள் (World Sight Day) கடைப்பிடிக்கப்படுகிறது. Intra Ocular Lens) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும்.
அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகிவிட்டது. Glaucoma) இருக்கலாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அவ்வளவாக இல்லை.
கண்புரையைச் சொட்டு மருந்தால் கரைக்க இயலாது. இன்றளவில் அறுவை மருத்துவம் ஒன்றே வழி. மருத்துவர் கூறும் உரிய நேரத்தில் அறுவை மருத்துவம் செய்து கண்ணில் விழி உள் ஆடி (Intra Ocular Lens) பொருத்திக் கொண்டு நன்றாகப் பார்க்கலாம். முன்பெல்லாம் கண்புரைக்கு மருத்துவ மனையில் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும். அதன் பின் 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலை 8 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று 8-30 க்கு அறுவை மருத்துவம் செய்து கொண்டு 9 மணிக்கு இல்லம் திரும்பி விடலாம். அந்த அளவுக்கு கண்புரை அறுவை மருத்துவம் நவீனமாகிவிட்டது. Glaucoma) இருக்கலாம். இதை உரிய நேரத்தில் மருத்துவம் செய்து கட்டுப் படுத்த வேண்டும். இல்லையேல் பார்வை நரம்புகள் நசிந்து போய் விடும்.நீரிழிவு நோயினால் கண்ணில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே அவ்வளவாக இல்லை.
கண்ணில் பார்வைக் குறைவோடு பலர் கஷ்டப்படுவதை காணலாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.
கண்ணில் பார்வைக் குறைவோடு பலர் கஷ்டப்படுவதை காணலாம். சாதாரணமாக கண்ணாடி போட்டு சரி செய்யக் கூடியதாக இருக்கலாம்.
பார்வைக் குறைவுக்கு கண்ணாடி நல்ல தீர்வு எனும் போது கண்ணாடி அணிவதற்கு வெட்கப் படக் கூடாது. உரிய நேரத்தில் கண்ணாடி போடாமல் விட்டு விட்டால், ‘பவர்’ அதிகமாகி ஒரு நிலையில், கண்ணாடி போட்டாலும் பார்வை இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே கண் ஆய்வு செய்து கொள்வது நல்லது.
குழந்தைக்கு அடிக்கடி கண்ணில் இமைக் கட்டி ஏற்பட்டாலோ, படிக்கும் போதும் எழுதும் போதும் கண்ணில் நீர் வடிந்தாலோ ஒரு வேளை பார்வைக் குறைவாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று ஆய்வு செய்து கண்ணாடி போட வேண்டும். அடிக்கடி தலைவலி, மின்சார பல்பைச் சுற்றி ஒளி வட்டம், பக்கப் பார்வையில் குறைபாடு இருந்தால் ஒரு வேளை கண் நீர் அழுத்த உயர்வாக (நீரிழிவு நோயினால்) கண்ணின் விழித் திரை பாதிக்கப் பட்டு, அதன் ரத்தக் குழய்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்நிலையில் லேசர் மருத்துவத்தால் மேற் கொண்டு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப் படுத்த முடியுமே ஒழிய, ஏற்பட்ட பாதிப்பைச் சரி செய்ய முடியாது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வதோடு , 6 மாதத்திற்கொரு முறை கட்டாயமாகக் கண்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
கண் கோளாறா? – உடனே கவனியுங்கள்
கிளாகோமா என்பது ஒருவித கண் நோய். இதன் சிறப்பு என்ன? பலருக்கு இந்நோய் இருப்பது தெரியாது. அதன் காரணம், கண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித வலியோ மற்ற அறிகுறிகளோ அதிகமாக இருக்காது. ஆனால் பார்வை, முக்கியமாக பக்கப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பழுதடைந்து கொண்டே இருக்கும்.
இறுதியில் சிறு குழாய் வழியாக பார்ப்பது போல் ஆகி, மேலும் குறைந்து முற்றிலுமாக போய் விடும் என்கிறார் டாக்டர் ஏ.செந்தூர் பாண்டியன். அவர் மேலும் கூறியதாவது:-
சாதாரணமாக நம் கண்கள் காற்றடைத்த பந்து போன்றவை. கண்களுக்கு உருவம் கொடுக்க, காற்றுக்குப்பதிலாக கண்களுக்குள் ஒரு வித திரவம் உள்ளது. அதனால் கண் தன் உருவத்தைப் பெறுகிறது. அதற்கு கண்ணுள் அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த அழுத்ததின் அளவு சாதாரணமாக 15-21 எம்எம்எச்ஜி இருக்கும்.
ஆனால், எந்த காரணத்தாலும் இந்த அழுத்தம் 22 எம்எம்எச்ஜிக்கு மேல் அதிகரித்தால் கண்ணின் நரம்பு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. நரம்பிற்கு இரத்தம் கொடுக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் சரியாக செயல்பட முடியாமல் அதனால் நரம்பு கெட்டுவிடும். இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கப்பார்வை இழப்பு ஏற்படும். பார்வை போனது திரும்பக் கிடைக்காது.
இந்த “கிளாகோமா” நோயில் 40 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சில வகைகளில் வலி இருக்கும். வலியிருந்தால் அதற்காக மக்கள் கண் மருத்துவரை நாடி வருவார்கள். ஆனால் வலி இல்லாத அறிகுறிகள் அற்ற ”குரோனிக் கிளாக்கோமா” என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு, இந்நோய் கண்பார்வையை மிகவும் கெடுத்து விடும்.
இந்த வகை ”கிளாகோமா”தான் மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. எந்தவித வலியோ, உறுத்துதலோ, நேர் பார்வை பாதிப்போ இருக்காது.
பின் எவ்வாறு கண்டுபிடிப்பது?
கண் மருத்துவர் சோதனை செய்தால் ஆரம்பத்திலேயே இந்நோயினை கண்டுபிடித்து, தேவையான சிகிச்சைசெய்து பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
இவர்கள் கண்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சோதனைகள் மூலம் பக்கப்பார்வை பாதிப்பு, மற்றும் கண் நரம்பு மாற்றங்களை கண்டறிந்து, கண் மருந்துவர் இந்நோய் இருப்பதை கண்டுபிடிப்பார். சிலருக்கு அடிக்கடி லேசான தலைவலி, கண்வலி, இருக்கலாம்.
அடிக்கடி கண்ணாடி மாற்றுவது மட்டும் சிலருக்குத் தேவைப்படலாம். ஆனால் நிறைய பேருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. சோதனைகள் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், கிட்டப்பார்வை பாதிப்பு உள்ளவர்களுக்கு மற்றும் குடும்பத்தில் யாருக்காவது “கிளாகோமா” பாதிப்பு இருந்தால், இந்நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
நோயை கண்டு பிடித்ததும் அதற்கு மருத்துவம் செய்தாக வேண்டும். கண் அழுத்தத்தைக் குறைப்பதுதான் பார்வையைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி.
இதற்கு கண் சொட்டு மருந்துகள் உள்ளன. அதை தவறாமல் உபயோகித்துக் கொண்டேயிருந்தால் கண் அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கலாம். இது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும்.
மேலும் சிலருக்கு, சொட்டு மருந்துகள் மட்டும் தேவையான அளவு அழுத்தத்தைக் குறைக்காது. அவர்கள் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதன் வழியாக அழுத்தத்தைக் குறைக்கலாம்.
“லேசர்” சிகிச்சையும் அழுத்ததைக் குறைக்க சிலருக்கு தேவைப்படுகிறது.
மற்றும் பலருக்கு அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உபயோகிப்பது கடினம். செலவும் அதிகம். இவ்வாறு பல வழிகளில் அழுத்தத்தைக் குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தால் மேற்கொண்டு பார்வை கெடாமல் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்களை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த கிளாகோமாவில் நான் முன்பு கூறியதைப் போல் பல வகைகள் உள்ளன. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை பாதிப்பு பல வகையான “கிளாகோமா”வினால் ஏற்படுகிறது. அதனால்தான் கண் சோதனை அனைவருக்கும் அடிக்கடி அவசியம் என்று கண் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கண்ணில் ஏற்படும் எல்லா சிவப்புகளுமே ‘மெட்ராஸ் – ஐ’ – யினால் ஏற்படுவதல்ல. பல வித கண் நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். எனவே நீங்களாகக் கடைக்குப் போய் சொட்டு மருந்து வாங்கி போட்டு கண்களைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கண்ணில் ஏற்பட்ட சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு கண் மருத்துவரால் மட்டுமே கண்டறிந்து மருத்துவம் செய்ய இயலும். சுய மருத்துவம் செய்து கொண்டால், ஆரம்ப நிலையில் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் வாய்ப்பினை இழந்து போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது ஒரு வேளை பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.