எச்சரிக்கை! தொழுகைக்கு இடம் கேட்கும் சாக்கில் நூதனத் திருட்டு!
அபூ இபுறாஹிம்
நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப்படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு “தொழுவதற்கு இடம்” கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன.
இந்த நூதனத் திருட்டு எப்படி நடந்தேறுகிறது?
முதலில் யாசகம் கேட்டு வருகிறார்கள் வருபவர்கள் சற்று வயதான பெண்கள். அவர்களின் திட்டம் வீட்டிலிருக்கும் ஆட்கள் நடமாட்டத்தை கவனிப்பது அதாவது அதிகமான தளர்வுடன் இருப்பதுபோல் அயர்ந்து பதற்றம் காட்டி நடித்து வீட்டு வாசல் படியில் அமர்வதும் அங்கே ஆர அமர உட்கார்ந்து வீட்டிலுள்ளவர்களின் பேச்சு புழக்கம் இவைகளை கவனிப்பது.
இச்சமயத்தில் நம் வீட்டுப் பெண்கள் அந்த வயதான பெண்மனியை பார்த்து இறக்கம் கொண்டு உள்ளே வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் காட்டுவார்கள் சரி அந்தப் பெண்ணுக்கு உள் வாசலில் பாய் கொடுத்து படுக்கவும் வைத்து விட்டு இவர்கள் வீட்டுக்குள் வேலைக்கும் சென்று விடுவார்கள்.
இவ்வகையான சம்பவங்கள் ஒரு சில இடங்களில் இப்படி என்றால் வேறு இடங்களில் உள்ளே வரவைக்காமல் வெளியில்தானே இருக்கிறார் அந்தப் பெண்மனி என்று அஜாக்கிரதையாக இருந்து விடுகிறார்கள் இச்சந்தர்ப்பத்திலும் நம் வீட்டுச் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வாசல் தாண்டிச் செல்வதும் வருவதும் அவர்களால் அவதானிக்கவும் படுகிறது இதெல்லாம் அந்தக் கயவர்களின் ஆயத்தம் அதாவது முன்னோட்ட ஏற்பாடுகள் (project study ??).
இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நடுத்தர வயதுடைய பெண் வருவார் இப்படியான பெண்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் தொழுகைக்கான வக்து நிறைவுக்கு வரும் நேரத்தில் வருவதும், தனியாகத்தான் வருவார் கொமர் காரியமென்று யாசகம் கேட்டுவருவார் குறிப்பிட்ட தொகை தோது செய்யனும் வசதியில்லை என்று வசூல் வேட்டைக்கு வருவார் இதில் நம் பெண்கள் வெகு சிலரே உதவிக்கு முன் வருகிறார்கள் அந்தச் சிலரிடம்தான் இவர்களின் கைவரிசை நீள்கிறது.
வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக வர முயற்சிப்பதும் உள்வாசல் வந்து அமர்ந்ததும் “தொழுகை வக்து முடியப் போவுது இங்கே தொழுதிடுறேம்மா” என்று உரிமையுடன் கேட்பது அதற்காக தொழுகைக்கான பாய் கேட்டு உரிமை தேடுவதும் இந்த அந்நியோன்யத்தால் இளகிய மனம் கொண்ட நம் பெண்கள் உருகி இடம் கொடுத்து விடுகிறார்கள் அவரும் சமர்த்தாக தொழுது முடித்து விட்டு சற்று நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறார் (உரியவருக்கு அழைப்பு விடுக்கும் வேலையைச் செய்கிறார் மிஸ்டுகால்) இந்தப் பெண்ணின் தொழுகையை கண்டுவிட்டு சில நல்லுள்ளம் கொண்ட நம் பெண்கள் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.
இது வரை நடந்த இந்த திருட்டுக்களில் நமது செவிக்கு எட்டியதில் இங்கே :
ஒரு பெண் தொழுகைக்கு இடம் கேட்டு வந்து தொழுது கொண்டிருக்கும் போது மயக்கம் போட்டிருக்கிறார் இடம் கொடுத்த நம்மவங்க என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பதறிப்போய் உதவிக்கு தடுமாறியிருக்கிறாங்க மயக்கம் போட்ட பெண்மனி சற்று விழித்துக் கொண்டு தன்னோட மொபைலில் இருக்கும் நம்பருக்கு ஃபோன் செய்து என்னோட சொந்தக் காரங்களை வரச் சொல்லுங்கன்னு சொல்லி நம்பர் கொடுத்து நம் பெண்மணி பேசி அவர்களை வரச் சொல்லியிருக்கிறார் வந்தது பெண்களல்ல நான்கு ஆண்கள் திடுமென்று வந்து தனியாக இருந்தப் பெண்ணை அடித்து மிரட்டி நகை அலமாரியிலிருந்த பணம் இவைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.
மற்றொரு சம்பவம் ஒரு வீட்டில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிருக்கிறார்கள் அவர்கள் செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வந்த யாசகம் கேட்கவந்த பெண்ணிடம் நாங்க அவசரமா வெளியில போயிட்டு இருக்கோம் நீங்க போயீட்டு அப்புறம் வாங்கன்னு சொல்லிட்டு அவர் வெளியில் சென்றாரா அல்லது இருக்கிறார என்றும் பார்க்காமல் வீட்டின் உள்ளே சென்றதும் அந்த யாசகம் கேட்டு வந்தப் பெண் உள்ளே பதுங்கியிருந்து வேண்டியவர்களை வரவழைத்து உள் தாழ்ப்பாள் திறந்து விட்டு இருப்பதை சுருட்டிச் சென்றிருக்கிறார் இது எப்படி நிகழ்ந்திருக்கும்னு சொல்லியா தெரியனும்.
o வீடுகளில் இருக்கும் பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்பின் தெரியாதவர்களை வாசல் படி தாண்டி வீட்டிற்கு உள்ளிழுக்காதீர்கள்.
o அந்நியப் பெண்களில் யாரும் அவர்கள் வைத்திருக்கும் அல்லது உங்களிடம் இருக்கும் கைபேசியிலிருந்து (mobile phone)
o வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் முடிந்த வரை. சிலதை இழந்தால் தாங்க முடியாது அல்லது திரும்பப் பெற முடியாது ஆகவே எல்லை தாண்டி உரிமை கொடுக்காதீர்கள்.
o தற்காலிக பணிக்கு வரும் பெண்களை தனித்து இருத்திட வைக்காதீர்கள் உங்கள் அனுமதியின்றி வீட்டுச் சாதனங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்காதீர்கள்.
o வீட்டில் வேலையாட்களால் அசம்பாவிதம் எது நடந்தாலும் உடனுக்குடன் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு தெரிவித்துடுங்கள், எதனையும் மறைத்து விடாதீர்கள்.
பெருநாள் சந்தர்ப்பத்தில் திருட்டுக் கும்பலின் எண்ணிக்கை நமது சுற்று வட்டாரத் தெருக்களில் அதிகம் தென்படும், நம்முடைய ஈகை குணத்தை ஈனக்குணம் கொண்ட கயவர்கள் சாதகமாக பயண்படுத்திக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுதை தடுத்தே ஆகவேண்டும்.
நம் பெண்கள் வீட்டருகே அல்லது தெருக்களிலோ முன்பின் தெரியாத அல்லது அறிமுகமில்லாத பெண்ணோ / ஆணோ தென்பட்டால் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு தெரிவித்து முன்னெச்சரிக்கையாக இருந்திடுங்கள், வீட்டில் ஆண்கள் இல்லாத பட்சத்தில் பக்கத்து வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்திடுங்கள்.
பள்ளிவாசல் வெளியே பிச்சை எடுக்கும் பெண்களைப்பார்த்தால் தலைதுணியோடு அடக்கமாக இருப்பார்கள். வேறு இடங்களில் பார்த்தால் பிறமதத்தை சேர்ந்தவர்கள்தாம் என்பதை நிருபிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்கள் தங்க வசதியான இடமாக தர்கா இருக்கிறது. நாம் கவனமாக இருப்பது நல்லது. இவர்களின் நடமாட்டம் தெருவில் அதிகமாகத்தான் உள்ளது. ஜமாஅத் மூலம் இதற்கு ஒரு வழி செய்தால் நலமாக இருக்கும்.
Source: http://adirainirubar.blogspot.com/2010/11/blog-post_12.html