Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணம் என்பது இரு மன பொருத்தம்!

Posted on November 16, 2010 by admin

திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்தத் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதில் `ஜஸ்ட் மிஸ்’ ஆனாலும் சிக்கல் ஆகிவிடும். இரு மனங்களும் ஒத்து போகாத நிலையில் விரைவில் சலிப்புகளும், பிரச்சினைகளும் தோன்றும். தற்போது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே மணமகனும், மணமகளும் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதன் முலம் திருமணத்துக்கு பிறகு ஏற்படக் கூடிய ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். பொதுவாக, துணையைத் தேர்ந்தெடுப்பதில் அழகும், அந்தஸ்தும்தான் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

ஆனால், அவற்றை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிலர், பார்த்ததும் பிடித்து போய் விட்டால் உடனே திருமணத்துக்குச் சம்மதம் சொல்லி விடுவார்கள். ஆனால் இப்படி அவசரபட வேண்டாம். உங்களுக்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆதலால் திடகாத்திரமான ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்தியம் சிறக்கும்.

திருமணம் செய்து கொள்ள போகும் இருவருமே தனது துணையாக போகிறவரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். உடல் நலம் குன்றியவரை திருமணம் செய்து கொண்டால் தாம்பத்யத்தில் தோல்வி ஏற்படும். இதனால் பிரச்சினை ஏற்படும். நீங்கள் தேர்வு செய்ய போகும் வாழ்க்கைத் துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள்.

இருவரில் யாரேனும் ஒருவர், தேவையில்லாமல், சிறுசிறு செலவுகளை அதிகம் செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும். சிறுகச் சிறுக சேமிப்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்த விஷயத்தில் இருவருமே ஒருமித்த கோணத்தில் சிந்திபவராக இருக்க வேண்டும்.

தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மனக்கோட்டை கட்டியிருப்பான். அதேபோல், பெண்ணும் தனக்கு மாலையிட போகும் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி மனக்கோட்டை கட்டியிருப்பாள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி துணை அமையவில்லை என்றால் என்னவாகும்? ஏமாற்றமும், விரக்திம் மட்டுமே மிஞ்சும். அறுபது வயதானவரை இருபது வயதானவர் திருமணம் செய்து கொள்வது புரட்சிகரமாக இருக்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் இனிமை என்பது இருக்காது. உங்களது துணை, ஏறக்குறைய சம வயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட ஐந்து முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது நல்லது.

வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அது வாழ்க்கையில் சலிப்பையே உருவாக்கும். கணவன், மனைவி இருவரும் இரண்டு விதமான சமுக நிலை உடையவர்களாக இருப்பது சரியானதல்ல. இருவருமே உயர்ந்த சமுக நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். வாழ்க்கைக்கு அதுதான் முக்கியம்.

வருமானம், தொழில், வாழும் இடம், வாழ்க்கைத் தரம் ஆகியவை நமது சமுக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுபவை. வாழ்க்கைத் தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால் அந்த இடத்துக்கு ஏற்பவே நமது சமுக அந்தஸ்து மதிப்பிடப்படும். ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக் கொள்ள விரும்புவார்கள்.

அதே சமயத்தில் நல்ல குணத்தையும் எதிர்பார்பார்கள். பெண்களுக்கும் இதே எதிர்பார்புதான் இருக்கும். உங்களின் துணை அழகாக, வாட்ட சாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, நடத்தை குறைபாடு இல்லாதவராக, குணக்கேடு இல்லாதவராக இருப்பதும் முக்கியம். தனக்குரியவர் நல்ல குணங்களோடு இருக்க வேண்டும் என எதிர்பார்பது நல்லது.

கணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொருவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு அமைய போகும் வாழ்க்கைத் துணை இத்தகைய தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனபான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் காதலை வெளிபடுத்தினால் உறவுகள் ஆழமாகும்

source: http://senthilvayal.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

46 + = 49

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb