முஹைதீன் உலவி
பள்ளிவாசலுக்கு பெண்கள் வரலாமா? கூடாதா? என்பது ஏதோ மார்க்க சட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல! சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பாடம்.
பள்ளிவாசலுக்கு பெண்கள் வந்தே ஆகவேண்டும என்போர் முன்வைக்கின்ற காரணங்களையும் பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கவே மாட்டோம் என்போர் சுட்டுகின்ற வாதங்களையும் இந்தக் கட்டுரை அலசுகின்றது.
கூடுமா? கூடாதா? என்னும் ரீதியில் சடங்குப் போக்கில் எப்பிரச்சனையையும் ஆராயாமல் அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கி ஷரீஅத்தின் தீர்வை எட்டுவதற்கு இக்கட்டுரை பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
எதிர்பார்ப்புகளும், யாதார்த்தங்களும்
முஸ்லிம் பெண்களில் பலர் பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வதை சர்வ சாதாரணமாக காண்கிறோம். குறிப்பாக, குழந்தைச் செல்வமற்ற பெண்கள் கோவில்-சர்ச் போன்ற பகுதிகளில் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை செய்திகள் மூலம் அறிகிறோம்.
இஸ்லாம் தடை செய்துள்ள வழிபாடுகளில் துவங்கி கோவில் வழிபாடு என்ற அளவுக்கு பெண்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் அதிகம் இருப்பது ஆண்களிடமா? பெண்களிடமா? என பட்டிமன்றம் வைத்தால் “பெண்களிடம்தான்’ என தீர்ப்பு கூற வேண்டியிருக்கும்.
இணைவைத்தல் என்பதில் மட்டுமல்ல, குடும் பத்தில் குழப்பம், நிம்மதி இல்லா வாழ்க்கை, குழந்தை வளர்ப்பில் கோளாறு, உற்றார் உறவி னரை ஆதரிப்பதில் தடுமாற்றம் என பெண்கள் பெருந்தோல்வியில் சிக்கி உள்ளனர்.
பள்ளிவாசலில் அத்துமீறல்கள்
பள்ளிவாசலுக்கு பெண்கள் வரக்கூடாது என்போர் முன்வைக்கும் காரணங்களில் “ஆண்களும் பெண்களும் “கலப்பதால்’ பல்வேறு அத்து மீறல்கள் நடக்க வாய்ப்புண்டு’ என்பதும் ஒன்று.
அத்துமீறல்கள் நடக்குமென்றால் அவை பள்ளிவாசலில் மட்டும்தானா நடக்கும்? என கேள்வி எழுப்புகிறார் சமூக ஆர்வலரும் முஸ்லிம் கைதிகளுடைய வழக்குகளை நடத்தி வருபவருமான உமர் ஷாஹ்.
“இறையச்சமும் இஸ்லாமிய பண்பாடும் முறையாக கற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில் அத்துமீறல்களும் ஆரீஅத்தை மீறுவதும் எல்லா இடங்களிலும் தொடரத்தான் செய்யும்.
“இஃக்லாஸோடும் தூயஉள்ளத்தோடும் இருந்தால் பள்ளிவாசல் மட்டு மல்ல, வணிக வளாகங்களிலும் இறைவழிபாடு தொடரும். இவை காணப் படவில்லை என்றால் பள்ளிவாசல்களிலும் முறைகேடுகள் உருவாகும்’ என்கிறார் அவர்.
இதற்கு பல காரணங்களை சிலர் கூறலாம். ஆனால், பிரதான காரணம் ஒன்றே ஒன்று மட்டும்தான். ஆம், பெண்களுக்கு இஸ்லாமிய நெறியை போதிக்கத் தவறியதுதான்.
குழந்தைகளாக இருந்தபோது காலை-மாலை வேளைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் ஆரம்ப மதரஸாக்களுக்கு சென்றபோது படித்தது மட்டுமே பெரும்பாலான பெண்களிடம் உள்ள இஸ்லாமிய அறிவாகும். அதன்பின் அவர்களுக்கு இஸ்லாமை அறியும் வாய்ப்புகளே அமைவதில்லை.
பெண்களின் சூழல், அவர்களுக்கு செய்யவேண் டிய சில வசதிகள், பாதுகாப்புக் காரணங்கள் போன்றவற்றால் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வி நிலையங்களை உருவாக்குவதில் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதையும் மீறி “ஆலிமா’க்களாகும் பெண்கள் திருமணத்திற்கு பின் கணவன்- குழந்தைகளுக்கான சேவைகளில் மூழ்கி பிரச்சாரம் செய்ய இயலாத நிலை!
ஆண்களை பொருத்தவரை குழந்தைகளாக இருக்கும் போது மதரஸாக்களில் படித்தாலும் பின்னர் பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் உரைகள், ஜும்ஆ பயான்கள், தெருமுனைக் கூட்டங்கள் என பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள் கிறார்கள்.
இதுபோல், பெண்கள் கலந்து கொள்வது குறைவுதான். ஜும்ஆ உரைகளையேனும் பெண்கள் கேட்கலாம்தானே? அதற்கும் வசதியில்லாமல் போய்விட்டது.
ஆண்கள் பள்ளிவாசலுக்கு வந்தாகவேண்டும் என சட்டம் உள்ளது போல, பெண்கள் விரும்பினால் பள்ளிவாசலுக்கு வரலாம் என அனுமதி உள்ளது.
ஆனால், பெண்கள் பள்ளிவாசலுக்கு வரவே கூடாது எனக் கூறி தடை போடுவதில் முன்னணியில் இருப்பவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள்தாம். பெண்களும் பள்ளிவாசலுக்கு வரலாம் எனக் கூறி இருந்தால் அவர்கள் “பயான்’களைக் கேட்டு திருந்தி, இஸ்லாமிற்கு மாற்றமான செயல்களை செய்யாமல் இருக்க வாய்ப்புள்ளது.
ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழு கைக்கு வர தாமதமாகிவிட்டது. பெண்களும் குழந்தைகளும் (தொழுகைக்காக வந்து தொழு கையை எதிர்பார்த்து) காத்திருக்கிறார்கள் என உமர் ரளியல்லாஹு அன்ஹு அண்ணலாரிடம் கூறி தொழவைக்க வரும்படி அழைத்தார்கள். பின்பு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தொழவைத்து விட்டு “இப்போது இந்த பூமியில் உங்களைத்தவிர வேறு எவரும் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இல்லை!’ எனக் கூறினார்கள். (பதிவு: புகாரி)
இந்த ஹதீஸ், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் என்னும் தகவலைத் தருகின்றது.
ஆனால், ஒருசிலர் “பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வந்தார்கள் என்பதென்னவோ உண்மைதான். அது அவர் களுடைய காலத்தில் சரி. இப்போது சரி வராது’ என்கிறார்கள். பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்தால் விபரீதம் விளையும் என்றெல்லாம் இவர்கள் காரணம் கூறுகிறார்கள்.
அதேசமயம், பொதுவாக நம்முடைய வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்?
வெளியில் சென்று கல்வி கற் கிறார்கள்; வேலை பார்க்கிறார் கள்; கல்லூரிகளுக்கு கற்பதற் காகவும் கற்றுக்கொடுப்பதற் காகவும் செல்கிறார்கள்; ஷாப் பிங் செல்கிறார்கள்; மருத்துவம் பார்க்க அந்நிய ஆண்களிடமும் செல்கிறார்கள்; உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு செல்கிறார்கள்.
மேற்கண்ட காரணங்களுக்கு எல்லாம் பெண் களை வெளியே செல்ல அனுமதிக்கும் நாம் பள்ளிவாசலுக்கு மட்டும் அனு மதிக்க மறுக்கிறோம்.
அல்லாஹ்வின் அடிமைகளான பெண்கள் அல்லாஹ்வின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதை தடுக்காதீர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய தாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (பதிவு: புகாரி)
இந்த ஹதீஸின் காரணமாகத் தான் நபித்ட தாழர்களின் காலத் திலும்கூட பெண்கள் பள்ளிவா சலுக்கு வந்தனர். இதை பின் வரும் நிகழ்வின் மூலம் அறிய முடிகின்றது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி ஆதிக்கா சுப்ஹு தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் வந்து ஜமஅத்தோடு கலந்து கொள்வார்கள். (பதிவு: புகாரி) பள்ளிவாசலுக்கு பெண்கள் வருவதை தடுக்காதீர்கள் என் னும் செய்தியை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தபோது அவர் களுடைய மகனார் பிலால் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுப்பேன்’ என்றார்.இதைக்கேட்ட அவருடைய தந்தையார் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் கூறியதாக சொல்கிறேன். நீ உன் விருப்பத்தை சொல்கிறாயே!’ எனக் கூறிவிட்டு அவர்களுடன் பேசாமல் இருந்து விட்டார்கள். (பதிவு: முஸ்லிம், அஹ்மத்)
பள்ளிவாசலுக்கு தொழ வரும் பெண்கள் இவைகளைத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் முக்கியமாக கீழ்வரும் நபி மொழியை மனதில் பதிய வைக்க வேண்டும்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். (பதிவு: இப்னு குசைமா, அஹ்மது 5211)
பெண்கள் தொழுகையாளி களாக, இஸ்லா மிய அறிவு படைத்தவர்களாக மாற வேண்டு மானால் பெண்களுக்கு என பள்ளிவாசல்களில் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த உண்மையை இஸ்லா மிய அறிஞர்களும் தலைவர் களும் உணர்வார்கள் என நம்புவோம்.
பள்ளிவாசலில் பெண்கள்: இன்றைய அவசியத்தேவை
சகோதரி நஜ்முன்னிஸா, கோயமுத்தூர்
நம்முடைய பெண்கள் கல்வி கற்பதற்கும் வேலைக்கும் வெளியே செல்கிறார்களே? பள்ளிவாசலுக்கு மட்டும் ஏன் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது? என்னும் ஒரு கேள்விக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவைச் சேர்ந்த ஆலிம் ஒருவர் பதில் அளிக்கையில்,
“நம்முடைய பெண்கள் வெளியே பல காரணங்களுக்காக செல்வது என்னவோ உண்மைதான். ஆனால், அவற்றையும் நாம் தடை செய்துதான் ஆகவேண்டும். அதற்கு வழியில்லை என்பதற்காகவோ, அது இயலவில்லை என்பதற்காகவோ பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதிக்க முடியாது’ என்றார்.
அவருடைய இந்தக் கருத்து சரியா?
“சரியா, சரியில்லையா? என ஒற்றைவரியில் பதில் சொல்வதற்கு முன்னால் உண்மை நிலை என்ன? அதை மேலும் இஸ்லாமியமாக மாற்றுவது எப்படி? என்பதை பார்க்கவேண்டும்’ என்கிறார் தமிழகத்தின் முன்னணி உலமாக்களில் ஒருவர்.
“பிரசவம் பார்ப்பதற்காக நமது பெண்களை மருத்துவமனைகளில் சேர்க்கிறோம். அங்கெல்லாம் பெண் மருத்துவர்கள் தாம் பணிபுரிகிறார்களா? அப்படியே பெண் மருத்துவர்கள் இருந்தாலும் உதவிக்காகவும் மேற்பார் வைக்காகவும் ஆண் மருத்துவர்கள் வருவதில்லையா?
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதால் விளையும் நன்மைகளையும். தீமைகளையும் பட்டியலிட்டு அத்தீமைகளைகளையும் முயற்சிகளில் ஈடுபடவேண்டுமே அன்றி மார்க்கம் அனுமதித்த வாசலை ஒட்டுமொத்தமாக அடைக்கக்கூடாது.
இந்த வாசலை பெண்களுக்காக விட்டுவிட்டால் (நன்றாக இருக்குமே) என்ற செய்தியை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (பதிவு: அபூ தாவூத்)
அதுபோன்று “பள்ளிவாசலுக்கு பெண்கள் வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தவோ வருவதை கட்டாயமாக்கவோ இயலாது. இன்னும் கூற வேண்டுமானால் பெண்கள் பள்ளிக்கு வருவதை ஆர்வமூட்டுவதைக் கூட தவிர்க்க வேண்டும். வீட்டில் தொழுவது தான் பெண்களுக்குச் சிறந்தது என ஹதீஸ்கள் உள்ளன. இருப்பினும் அவர்கள் பள்ளிக்கு வர மார்க்கம் அனுமதித்ததை எவரும் மறுக்கக் கூடாது என்பது தான் நமது நிலைபாடு. பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாட்டை முறையாகச் செய்துவிட வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வருவதால் இஸ்லாமிய ஞானம் கிடைப்பதோடு இஸ்லாமிய அறிவு படைத்த பெண்களின் அறிமுகமும் பரிச்சயமும் கிடைக்க பெருவாய்ப்பு உள்ளது.
ஒரு பள்ளியில் ஜும்ஆ தொழ அனுமதிக்கப்படும் போது அந்த மஹல்லாவைச் சார்ந்த போதிய அடிப்படை அறிவு கூட இல்லாத பெண்களும் வருவார்கள். ஜும்ஆவுக்காகவே பர்தா அணிந்து வருகின்ற பெண்களும் இருக்கிறார்கள். அப்போது தொழவரும் பிற பெண்களோடு பரிச்சயமும் தொடர்பும் ஏற்படும். அத்தொடர்பு அவர்களுடைய வீடுகளிலும் முறையான முழுமையான இஸ்லாமை பின்பற்ற தூண்டுகோலாக அமையும்’ என தமது கருத்தைத் தெரிவிக்கிறார்
source: www.samuthayaotrumai.com