Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்!

Posted on November 13, 2010 by admin

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு தெருவுக்குத்தெரு மைக்கை கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.

கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

சில ஊர்களில் நோன்பு காலத்தில் தராவிஹ் தொழுகை மட்டுமின்றி, நோன்பு திறந்து சிறிது நேரத்திற்குள் குர்ஆன் சி.டி.யை மைக்கில் போட்டு நோன்பாளிகளின் நிம்மதியைக் கெடுக்கும் செயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘திருக்குர்ஆன் ஓதக்கேட்டால் அதை செவி தாழ்த்திக் கேளுங்கள்’ என்பது இறைக்கட்டளை. நோன்பாளிகள் நோன்பு திறந்தவுடன் சற்று ஓய்வாக இருக்கும் அந்த நேரத்திலும் குர்ஆனை ஒலிக்கச்செய்வது முறையா ?

இதே பழக்கத்தில் சாதாரண காலங்களிலும் ஃபஜ்ர், மஃரிப், இஷா போன்ற வக்துகளிலும் வெளி மைக்கில் இமாம் தொழ வைப்பதை ஒலிபரப்புவதை சில மஹல்லாக்கள் நடைமுறைக்கே கொண்டு வந்து விட்டன என்றுகூட சொல்லலாம். தொழுகை அல்லாஹ்வுக்காகவா அல்லது மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகவா?!!!

சுன்னத்தையும், ஃபர்ளையும் பேணுவதில் அசட்டையாக இருப்பவர்கள் பித்அத்தை பின்பற்றுவதில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை!

தற்போது நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் போல் மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் தீர்மானம் நிறைவேற்றி எல்லா மஹல்லாக்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவது அவசியம்.  (நிர்வாகி, நீடூர் இன்ஃபோ)

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிறைவேற்றயுள்ள தீர்மானம்:

பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை மற்றும் ஓதுதலை வெளி மைக்கின் மூலமாக ஒலிபரப்பி மஹல்லா முழுவதும் கேட்க வைப்பது கூடாத செயலாகும். மேலும் நமது மக்கள் குர்ஆன் ஓதுதலை அவமதிக்கிற சூழ்நிலை ஏற்படுவதுடன் நாட்டுச் சூழ்நிலையில் பின் விளைவுகள் ஏற்படும் என்று அச்சம் இருப்பதாலும் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று கண்ணியமிக்க ஜமாஅத் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஒலியை உள் வாங்கி தூரத்தில் உள்ளவர்களக்கும் கேட்கும் வண்ணம் செயல்படக் கூடிய நவீன கருவிகளில், ஒலிபெருக்கி மிகவும் பயனள்ள பங்களிப்பை ஆற்றி வருகிறது.

பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பதில் ‘நகராக்கள்’ என்னும் முரசுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு மின்சார ஒலி பெருக்கி வந்த பிறகு அதன் மூலம் பாங்கு சொல்லப்பட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது.

ஆனால் சமீப காலமாக ஐவேளைத் தொழுகையும் சில பள்ளிவாசல்களில் நேரடியாக ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் செயல் நமது சமுதாயத்தினரை மட்டுமின்றி பிறரையும் முகம் சுளிக்க வைக்கிற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் யாருக்குமே எந்த வகையிலும் இடைஞ்சல் செய்யாத மார்க்கம். ஆனால் சில பள்ளிவாசல்களில் ஆர்வக் கோளாறு காரணமாக ஒலி பெருக்கியைத் தங்கள் இஷ்டத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

தொழுது கொண்டிருப்பவர்கள் மட்டுமின்றி தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் அதற்கான ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வீடுகளில் இருக்கும் பெண்கள் வயோதிகர்கள் குர்ஆன் ஓதுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அசிரத்தையாக இருப்பார்களானால் அது அவர்கள் மீது குற்றத்தை ஏற்படுத்தி விடும்.

பிற சமுதாயத்தினர் நம்முடைய தொழுகையினால் ஏற்படும் சப்தங்களை சகித்துக் கொள்ளாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் விமர்சனம் செய்யக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

மேலும் தெருவுக்குத் தெரு குழாய் கட்டி எல்ல மக்களும் எல்லா நேரங்களிலும் குர்ஆன் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது மார்க்க விதிகளுக்கு முரணானது.

மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி (ஜமாஅத்துல் உலமா, நெல்லை மாவட்ட தலைவர்)

நன்றி: முஸ்லிம் முரசு, நவம்பர் 2010

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 18

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb