பெண்ணொரு பெட்ரோல்!
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
பெண்ணே, நீ
முக்காட்டிற்குள்
மூடிவைக்கப்படுகிறாயாம்!
சாட்டை ஆடையைச்
சட்டென்று உறுவி
பம்பரத்தை
பரத்தையாக்கிடுவோர்
பரிகசிக்கின்றனர்!
பெண்ணும் பெட்ரோலும் ஒன்று!
மூடி கூடாதென்போர் முட்டாள்கள்!
பெண் முன்னேற்றம் பின்னுக்குத்
தள்ளப்படுகிறதாம்
முக்காடால்!
அட பேடிகளே!
முகமும் உடலும் முழுதாய் மறைக்கும்
உடையுடுத்தாமல் பெண் ராக்கெட்டில்
ரவுண்டு வர முடியுமா?
அழகிப் போட்டியில் அரை நிர்வாணம் காட்டி
உலக அழகியான ‘யுக்தாமுகி’களைவிட
முக்காடணிந்த அன்னைகளின்
முன்னேற்றம் என்ன
முடங்கியா போனது?
இவ்விருவரில்
பெண்ணுலகம் யாரால்
பெருமைப்படுகிறது?
பெண்ணும்
பேனாவும் ஒன்று!
இரண்டும் முக்காடென்னும்
மூடியில்லாமல் பத்திரமாகப்
பாதுகாக்க முடியாது!
‘மாடர்ன்’ பெண்ணாகவும்
‘மாடலிங்’ பெண்ணாகவும் திரிய விடுவது – பாலைத்
திரிய விடுவதாகும்!
பெண் என்பவள்
பேரின்பப் புத்தகம்
முக்காடென்னும்
அதன் முன்பின் அட்டை
காப்புக்கும்
கவுரவத்திற்கும் உரியது!
இஸ்லாம் பெண்களை
பெட்டக நகையாய்ப்
பேணுகிறது!
பெண்ணை ஆணாக்குவது பேதமை
ஆணைப் பெண்ணாக்குவது அசிங்கம்!
பெண், பெண்ணாகவே
இருக்க இஸ்லாம் பிரியப்படுகிறது!
பூ, பூவாகத்தானே இருப்பது பொருந்தும்!