Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களின் ஆடை (1)

Posted on October 27, 2010 by admin

ஃபாத்திமா

பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன.

பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள ‘ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது.

ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.

1. அவ்ரத்

பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை அணிதல் வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

“மேலும் (நபியே!) முஃமினான பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்;; தங்களது வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும்.” (அந்நூர்:31)

மேலே குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘வெளியில் தெரிவன’ என்பதன் விளக்கம் என்ன என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இது வெளியே தெரியும் ஆடைகள் முதலான தவிர்க்க முடியாமல் வெளியே தெரியக் கூடியவற்றைக் குறிக்கும் என இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கருதுகின்றார்கள்.

இமாம்களான ஹஸன் அல்பஸரி, இப்னு ஸீரின், நஸாஈ போன்றோரும் இக்கருத்தையே கொண்டுள்ளார்கள். இங்கு ‘வெளியே தெரிவன’ என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் சிலர், இது வெளியே தெரியக்கூடிய மோதிரம், கழுத்துச் சங்கிலி போன்றவற்றைக் குறிக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றனர்.

பொதுவாக ஓர் இஸ்லாமியப் பெண் முகத்தையும் இரு கைகளையும் மூடாமல் திறந்துவிடுவது தொடர்பான சட்டப்பிரச்சினை மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘வெளியே தெரிவன தவிர’ என்ற சொற்றொடரை வைத்தே எழுந்துள்ளது. சுருங்கக் கூறின் இது விடயத்தில் இரு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.

1. முகமும் கரங்களும் கூட தெரியலாகாது. அதனால் முகத்தையும் கரங்களையும் மறைக்க வேண்டும். 

2. முகத்தையும் கரங்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை.

பெரும்பாலான ஆரம்பகால இமாம்கள் இரண்டாம் கருத்தையே கொண்டுள்ளனர். இவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு முன்வைக்கும் சான்றுகளில் ஒரு ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு:

ஒரு முறை அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு மெல்லிய ஆடை அணிந்து ரஸூலுல்லாஹ்விடம் வந்திருந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் உடன் தனது திருமுகத்தைத் திருப்பிக்கொண்டு பின்வருமாறு கூறினார்கள்:

‘அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது’ என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.

ஆயினும் முகமும், கரங்களும் கூட ‘அவ்ரத்’ எனக் கூறும் உலமாக்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டி இதனை ஒரு பலவீனமான ஹதீஸ் எனக் கூறுகின்றனர்.

பொதுவாக ஒரு பெண் தனக்கோ தன் மூலம் பிறருக்கோ ‘பித்னா’ ஏற்படாது என்று காண்கின்றபோது தனது முகத்தையும் கைகளையும் மூடாமல் திறந்துவிட அனுமதி பெறுகிறாள். ஆனால் கவர்ச்சியும் அழகும் உள்ள ஒரு பெண் ஒரு பக்குவமற்ற சமூகத்தில் முகத்தையும் கைகளையும் கூட மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான அறிஞர்கள் கொண்டுள்ளார்கள். இங்கு கைகள் என்பது மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியையே குறிக்கும். அதற்குமேல் உள்ள பகுதி அவ்ரத் ஆகும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

2. கனமான ஆடை

பெண்களின் ஆடைக்குரிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். மேனியை – உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக அது இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்திருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்;சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.)’(அத்தபரானி)

மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம் ஸுயூத்தி கூறுகின்றார்கள்.

இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

‘இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.’ (முஸ்லிம்) 

3. இறுக்கமற்ற உடை

பெண்களின் ஆடைக்குரிய மூன்றாம் நிபந்தனை அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.

‘பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்’ என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா  அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், ‘அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்’ என்றார்கள். இந்த ஹதீஸை இமாம்களான அஹ்மத், அத்தபரானி, அல்பைஹகி, இப்னு ஸஅத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த ஹதீஸ் பலவீனமான ஒன்று என சிலர் கூறியபோதும் இமாம் தஹபி போன்றவர்கள் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளனர்.

4. மணம் பூசாமை

பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்கு நறுமணம் பூசக்கூடாது என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்:

‘ஒரு பெண் மணம் பூசி, அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தினர் நுகரும் வகையில் அவர்களைக் கடந்து செல்வாளாயின் அவள் ஒரு விபசாரியாவாள்.’

ஆயினும் ஒரு பெண் வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை. அவ்வாறே வெளியிலும் துர்நாற்றம் வீசும் நிலையில் அதனைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு மாத்திரம் இலேசாக நறுமணம் பூசிக்கொள்ளவும் அனுமதி உண்டு.

5. ஆண்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும். இதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரங்களாக உள்ளன:

‘ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.’ (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.’ (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

‘மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.’ (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

6. காஃபிர்களுக்கு ஒப்பாகாதிருத்தல்

காஃபிரான பெண்களின் ஆடைகளை ஒத்ததாகவும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை அமைதல் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

‘நான் மஞ்சள் நிறத்திலான இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவை காபிர்களுடைய ஆடைகள். எனவே இவற்றை அணியாதீர்!’ என்றார்கள். (முஸ்லிம்) 

7. எளிமையானவை

சமூகத்தில் புகழையும் பிரபல்யத்தையும் நாடி காலத்திற்குக் காலம் வரும் நவீன வடிவமைப்புக்களில் ஆடை அணிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். அணியும் ஆடை பல வர்ணங்களிலும், நிறங்களிலும் வேலைப்பாடு களுடனும் கூடியதாக அமையாமல் எளிமையானதாகவும் கவர்ச்சியற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

இதுவரை நாம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்ட ஆடையே ஒரு பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.

ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டும். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கான மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் பெறப்பட்டவையாகும்.

தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்“ செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb