அபரிமிதமான கிளீவேஜ் காட்டி செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம் என்று ஒரு நாடு அறிவித்துள்ளது. தற்போது இச்சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரபு நாட்டிலோ ஆஃப்ரிக்காவிலோ அல்ல. மாறாக குறைவான ஆடைகளை உடுத்துவதுதான் நாகரீகம் என்று கருதும் இத்தாலியில்!
இத்தாலியின் கேஸ்டல்மெரே டி ஸ்டேபியா என்ற நகரில், கவர்ச்சிகரமான குட்டைப் பாவாடை அணிவது, அபரிமிதமான கிளிவேஜ் தெரியும்படியாக டிரஸ் போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும்.
தடையை மீறி இதுபோல உடை அணிந்தால் 695 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பிள் அருகே உள்ளது இந்த நகரம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், செக்ஸியான உடைகளுடன் பெண்கள் நடமாடுவதையும் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவாம்.இது போல ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த நகர நிர்வாகம் யோசித்து வருகிறதாம். மொத்தமாக 41 புதிய உடைக் கட்டு்பபாடுகளை அது தீட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நகர நிர்வாகம் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, நாகரீகமாக உடை அணிவது என்பதை விட மதிப்புக்குரிய வகையிலான உடைகளை அணிவது மிகவும் முக்கியம். இது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளது.
நகர மேயர் லூகி போபியோ கூறுகையில், இந்த நகரில் அநாகரீகம் பெருகி விடாமலும், செக்ஸ் தொடர்பான குற்றங்கள் பெருகி விடாமலும் தடுக்க கவர்ச்சிக்கு அணை போடுவது அவசியம் என்றார்.
இதுபோல பொது இடங்களான பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் கால்பந்து ஆடுவதையும் தடை செய்யப் போகிறார்களாம்.
இப்பொழுதாவது விழித்துக்கொண்டால் சரி. Late better than ever.
இந்த அளவுக்கு பெண்களின் கவர்ச்சியான ஆடைகளால் விளையும் தீமைகளை அறிந்திருக்கும் மேற்கத்தியர்கள் முஸ்லீம் பெண்கள் அணியும் ‘ஹிஜாப் – புர்கா‘வைப்பற்றி எதிர்ப்புத் தெரிவிப்பது இவர்களை வெளி வேஷக்காரர்கள் என்று பறைசாற்றுகிறது.
[ அடுத்து வரும் ‘பெண்களின் ஆடை‘ கட்டுரையை படிக்கத்தவறாதீர்கள்.]