[ காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரிடம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.]
//வேலூர் மாணவி கொலை வழக்கில் 10 ஆம் வகுப்பு மாணவன் கைது – உடந்தையாக இருந்த மற்ற மாணவர்களுக்கு வலை வீச்சு…. – செய்தி//
எப்படி இருந்தாலும் இந்த கொடும் செயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான தீர்வு கிடைக்காது என்பது நமது நாட்டுச் சட்டத்தை வைத்தே நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.
Mr. கொலையாளி உங்களுக்குப் பிரச்சனையில்லை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைத்து தங்குமிடத்துடன், உணவும் கொடுத்து நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.
ஆனால் இதுவே வயது கூடியவர்கள்(?) கொலை செய்திருந்தால் அவ்வளவு சுலபத்தில் மரண தண்டனை கொடுக்கமாட்டார்கள்.
”அரிதினும் அரிதான வழக்கு(?)” என்று சட்டத்தில் வரையறுக்கப்படாத ஒன்றைக் கொண்டு முடிவு செய்வார்கள்.
அரிதாக மரண தண்டனை கொடுத்தால் கூட இந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற மனித மூளையில் இருந்து ஒரு மடங்கு கூடுதலாக(?) உள்ள பல சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் Mr குற்றவாளிகளை எப்படியும் மீடியாக்களில் பேசிப் பேசியே காப்பாற்றிவிடுவார்கள்.
இவர்கள் கைவிட்டால் கூட உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.
என்ன குற்றம் என்று தெரியாமலும், குற்றவாளிகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்று கூட தெரியாமலும் நமது நாட்டின் குடியரசுத் தலைவர் கருணை மனுவை ஏற்று குற்றவாளிகளை விடுதலை செய்து விடுவார்.
அப்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எங்கே ???
இது போன்ற சட்டங்களும், சிந்தனை(?)யாளர்களும் இருக்கின்றவரை குற்றங்களை கடுகளவு கூட குறைக்க முடியாது என்பதை முந்தைய காலங்கள் நமக்கு சிறப்பாக உணர்த்துகின்றது.
பள்ளி மாணவிகளை ஏமாற்றும் இளைஞர்கள்
நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர்.
நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா?
இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒருவித பதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூஷன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள்.
பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள்.
அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா…? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள்.
காலையில் பெற்றோர் வந்து பஸ் அனுப்பி வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள்.
உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் சில வக்ககிர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள்.
படிப்பு சுமையே மாணவிகளை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.
அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.
Source: http://mangudigany.blogspot.com/2010/10/blog-post_7271.html