உடலில் இன்சுலின் சுரப்பது மிகக் குறைந்த அளவில் உள்ளவர்களுக்கும், அறவே இன்சுலின் சுரப்பு இல்லாதவர்களுக்கும் இன்சுலின் மருந்தை ஊசியாகப் போடுவதால் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
இன்சுலின் மருந்தில் பல வகைகள் உள்ளன. அவை உடலில் வேலை செய்யும் நேரத்தின் அளவைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம். அல்லது குறுகிய நேரம் வேலை செய்பவை (Short Acting Insulin)
அல்லது நடுத்தரமான நேரம் வேலை செய்பவை (Intermediate Acting Insulin)
அல்லது நீண்ட நேரம் வேலை செய்பவை (Long Acting Insulin)
இவை உடலில் வேலை செய்யும் நேரம் மட்டுமின்றி வேறு சில பண்புகளிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. உடலில் செலுத்தி எவ்வளவு நேரத்தில் அதன் இயக்கம் துவங்குகிறது? (On self of time of action)
உச்சகட்ட அளவு இரத்தத்தில் எப்போது அடைகிறது? (Time of peak Plasma Concentration)
எப்போது முற்றிலுமாக இரத்தத்திலிருந்து மறைகிறது?
இந்தப் பண்புகளின் அடிப்படையில் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப, நோயின் தன்மை,தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் நீங்கள் எந்த வகை இன்சுலினை, எந்த அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
பெரும்பாலான நோயாளிகளுக்கும் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், நடுத்தர நேரம் வேலை செய்யும் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினும் சேர்த்துக் கொடுக்க வேண்டியதிருக்கும். குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலின் அல்லது இதை கரையும் இன்சுலின் என்றும் அழைக்கிறார்கள்.
o நிறமற்ற, தெளிவான திரவமாக இருக்கும்.
o இது விரைவாக வேலை செய்யத் துவங்குவதால் உடனடியாக இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இது வேலை செய்வதால், ஒரு நாளில் குறைந்தது 2 முதல் 3 தடவைகள் இந்த ஊசி போட வேண்டியதிருக்கும். நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலின் சாதாரண கரையும் இன்சுலினுடன் புரோட்டாமின் (PERTAMINA) என்ற ஒரு புரதத்தைச் சேர்த்து இவ்வகை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது. இது கலங்கிய நிலை திரவமாக (Cloudy Liquid) இருக்கும். இதில் இரண்டு வகை முக்கியமானவை. N.P.H.நியூட்ரல் புரோட்டாமின் ஹாகிடிரான் (Natural PERTAMINA Hoedowns)லென்டி இன்சுலின் (Lento Insulin)
o அல்ட்ரா லென்டியுடன் செமிலென்டி-யைச் சேர்த்து லென்டி இன்சுலின் செய்யப்படுகிறது. இந்த இரண்டுவகை இன்சுலினும் வேலை செய்யும் பண்புகளில் ஒரே வகையானவையே. நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலின் புரோட்டாமின் கிங் இன்சுலின், அல்ட்ரா லென்டி இன்சுலின் ஆகிய இருவகைகள் முக்கியமானவை.
o கட்டுப்பாட்டில் இருக்கும் நீரிழிவு நோய்க்கு வழக்கமாக இந்த வகை உபயோகிக்கப்படுவதில்லை. குறுகிய & சுமாரானநேரம் வேலை செய்யும் இன்சுலின் கலவைகள் (Pre Mixed Insulin)
இவ்வகை இன்சுலின்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன.
o குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினும், சுமாரான நேரம் வேலை செய்யும் இன்சுலினும் கலந்த கலவையாக இவை தயாரிக்கப்படுகின்றன. அதனித்தனியே இவற்றை எடுத்துக் கலந்து போடும் போது அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும் சிரமத்தை இவை குறைக்கின்றன.
நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நோயாளிகளுக்கே இவ்வகை இன்சுலின்கள் பரிந்துரைக்கப்படும்.
எந்த நிலையில் இன்சுலின் பரிந்துரைக்கப்படும்?
சிறுவயதினருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய். நோயாளியின் எடை மிகக் குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமாகவும் இருந்தால். இரத்தத்தின் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கோமா நிலை தோன்றும் வாய்ப்பு உள்ள தருணங்களில்.பெரிய அறுவை சிகிச்சைகளுக்குமுன்.
o கர்ப்பகாலத்தில்.
o கோமா நிலையில் உள்ளவர்களுக்கு.
o மருந்து மாத்திரைகள், மருந்தில்லா முறைகள் மூலமாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில் இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறை
இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், தினமும் ஒருமுறை அல்லது இருமுறை, தங்கள் வாழ்நாள் முழுவதும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கலாம். அந்நிலையில் உள்ளவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ள ஒவ்வொரு முறையும் இன்னொருவரைத் தேடுவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே தாங்களே ஊசி போட்டுக் கொள்ளப் பழகிக் கொள்வது நல்லது.
மிகவும் தயக்கமாக இருந்தால், உங்களோடு எப்போதும் இருக்கும் ஒருவரை ஊசிபோட தயார் செய்து கொள்ளுங்கள்.எவ்வாறு போடுவது என்பதை உங்கள் மருத்துவர் தெளிவாக விளக்கிச் சொல்வார். அடிப்படை முறையை இங்கே காணலாம்.
ஒருவகை இன்சுலின் மட்டும் உபயோகித்தல்
உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள். இன்சுலின் பாட்டிலை உங்கள் கைகளுக்கிடையில் வைத்து மெதுவாக உருட்டுங்கள். (வேகமாக குலுக்க வேண்டாம்) இன்சுலின் சிரிஞ்சை எடுத்து, அதன் உட்குழாய் பகுதியை பின்னால் இழுத்து காற்றை சிரிஞ்சினுள் இழுக்கவும் (உங்களுக்கு எத்தனை யூனிட் இன்சுலின் எடுக்க வேண்டுமோ, அந்த அளவு வரை காற்றை இழுக்கவும்).
ஊசியை இன்சுலின் பாட்டிலில் உள்ள ரப்பர் மூடிப்பகுதியில் குத்தி, சிரிஞ்சில் இழுத்த காற்றை பாட்டிலின் உள்ளே செலுத்துங்கள். பாட்டிலை அப்படியே தலைகீழாகத் திருப்பி, மீண்டும் உள்குழாய் பகுதியை மெதுவாக கீழே இழுத்து உங்களுக்கு எத்தனை யூனிட் போட வேண்டுமோ அந்த யூனிட் அளவு வரை இன்சுலினை சிரிஞ்சில் நிரப்புங்கள்.
சிரிஞ்சில் மருந்தோடு காற்று குமிழ்கள் கலந்திருந்தால், சிரிஞ்சை பக்கவாட்டில் மெதுவாக விரல்களால் தட்டுங்கள். குமிழ்கள் சிரிஞ்சின் மேல் பகுதியில் வந்து விடும். கவனமாக அவற்றை வெளியேற்றி விடுங்கள். * இப்போது இன்சுலின் தேவையான யூனிட்டுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஊசியை வெளியே எடுக்கலாம்.
o நீங்கள் உடலின் எந்தப் பகுதியில் ஊசியைப் போட்டுக் கொள்ளப் போகிறீர்களோ, அந்த இடத்தை சிறிது ஸ்பிரிட்டால் சுத்தம் செய்யுங்கள்.
அந்த இடத்தில் உள்ள தோலை ஒரு கையின் கட்டை விரல் – சுட்டு விரல்களால் பிடித்துக் கொண்டு, மறு கையால் ஊசியை மெதுவாக உள்ளே செலுத்துங்கள்.
உள்குழாயை மெதுவாகத் தள்ளி மருந்தை செலுத்திவிட்டு சிரிஞ்சை வெளியே எடுங்கள். ஊசி போட்ட இடத்தை ஸ்பிரிட் தோய்த்த பஞ்சால் தடவி விடுங்கள்.
ஒரு வகைக்கு மேற்பட்ட இன்சுலின் உபயோகித்தால் முதலில் சுமாரான நேரம் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இன்சுலினை மேலே குறிப்பிட்ட முறைப்படி சிரிஞ்சில் எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினை, தேவையான அளவுக்கு எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்டபடி உடலில் குத்திக் கொள்ளலாம்.
இன்சுலின் சிரிஞ்சுகள் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்வதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிரிஞ்சுகள் உள்ளன. இவற்றை இன்சுலின் சிரிஞ்சுகள் என்கிறோம்.* பிற திரவ நிலை மருந்துகளை மி.லிட்டர் அளவில் அளவிடுகிறோம். ஆனால் இன்சுலின் மி.லிட்டர் அளவில் அளவிடப்படுவதில்லை. இன்சுலின் மருந்து `யூனிட்டுகள்’என்ற அலகையால் அளக்கப்படுகிறது.
40 இன்சுலின் யூனிட்டுகள் 1 மி.லி. இன்சுலின் சிரிஞ்சுகள் வெவ்வேறு கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. 30 யூனிட், 40 யூனிட், 50 யூனிட், 100 யூனிட் போன்ற அளவுகளில் மருந்துக் கடைகளில் கிடைக்கும். நீங்கள் ஒருமுறை உபயோகிக்கும் இன்சுலின் மருந்தின் அளவைப் பொறுத்து எத்தனை யூனிட் சிரிஞ்சு வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். * நீங்கள் உபயோகிக்கும் அளவை விட சற்றே அதிகமான கொள்ளளவு உள்ள சிரிஞ்சை வாங்குவது நல்லது.
இன்சுலின் உபயோகிப்போருக்கான குறிப்புகள்:
இன்சுலின் மிகவும் சக்தி வாய்ந்தது. சற்றே அளவு அதிகமானாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக குறைந்து, `சர்க்கரை தாழ்நிலை’ ஏற்பட்டு மயக்கம் வரலாம். எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டாம்.
இரத்தத்தின் சர்க்கரை அளவு, சிறுநீரில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும். குறுகிய நேரம் வேலை செய்யும் இன்சுலினுடன், நடுத்தர நேரம் வேலை செய்யும் இன்சுலினைச் சேர்த்து காலை, மாலை இருவேளையும் போட்டுக் கொள்ள வேண்டியதிருக்கும்.
சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே போட்டுக் கொண்டாலும் நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கலாம். உங்கள் நோயின் தன்மை, தீவிரத்திற்கு ஏற்ப, எந்த அளவிற்கு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் கணக்கிட்டு உங்கள் மருத்துவர் இன்சுலின் ஒரு நாளில் எத்தனை முறை போட வேண்டும். எவ்வளவு அளவு போட வேண்டும் என்பதை முடிவு செய்வார்.
ஆரம்ப காலங்களில் மாடு, பன்றி போன்ற மிருகங்களின் கணையத்திலிருந்து இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இவ்வகை இன்சுலின்களால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பலரது உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை இன்சுலின்கள் எல்லா பண்புகளிலும் ஏறக்குறைய மனித இன்சுலினை ஒத்திருப்பதால் ஒவ்வாமை, இன்சுலின் எதிர்ப்பு நிலை போன்றவை தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு.
சில பாக்டீரியாக்களில் அல்லது ஈஸ்ட் செல்களின் உள்ளே இன்சுலின் சுரக்கச் செய்யும் மரபணுக்களைச் செலுத்தி அவற்றை இன்சுலின் உற்பத்தி செய்ய வைக்கிறார்கள்.இவ்வாறு உற்பத்தியாகும் இன்சுலினைப் பிரித்தெடுத்து, மனித இன்சுலினை ஒத்த நிலையை அடைய பல்வேறு நவீன முறைகளைப் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. எந்த இடத்தில் போடுவது மேல்கையின் வெளிப்புறம், மேல்தொடையின்,வெளிப்புறம் பிட்டங்கள், அல்லது கீழ்வயிறு.
இந்த இடங்களில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடங்களில் குத்திக் கொள்ளலாம்.
நன்றி: குமுதம்