”உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.” (அல்குர்ஆன் 15 : 92)
”யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.” (அல்குர்ஆன் 7 : 6)
இதைத் தெளிவாக சஹாபாக்கள் விளங்கியிருந்தார்கள். அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சஹாபாக்கள் குறையாகக் கூறிக்கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓரு பொருட்டாக கருதாமல், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்கு கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவாகள் எண்ணியதே இதற்கு காரணம்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.” (அல்குர்ஆன் 2 : 159)
இந்த வசனத்தை அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சுட்டிகாட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஓரு ஹதீஸைக் கூட கூறியிருக்கமாட்டேன் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு)