இமாம்கள் பலவிதம்!
Jc.M. பிரின்ஸ் ஃபாரகலீத்
(இக்கட்டுரையில் உள்ள பல வரிகளின் அர்த்தத்தை எதிர்மறையாக – தவறாக கொள்ளாமல் நேர்மறையாக எடுத்துக்கொள்வது சிறந்தது)
[ இமாம் என்பதை ஒரு வேலையாக இல்லாமல் அற்புதமான ஆனந்தமான பொறுப்பாக எடுத்து, அதை செவ்வனே செய்யும் சிலரை பார்த்திருக்கிறேன்.
அவர்களைப் பார்க்கும் பொழுது ஒரு சிங்கத்தை பார்க்கும் உணர்வு இருக்கும். நடையில் அத்தனை கம்பீரம். அந்த தாடியின் அழகு கூடியிருக்கும். அவர் கண்ணில் அன்பும், கண்டிப்பும் இருக்கும்.
எந்த ஒரு நிகழ்வும் அவரைக் கேட்காமல் அந்த மஹல்லாவில், அந்த பள்ளியில் நடக்காது. அந்த மஹல்லா பெரியவர்களும், ஏன் இளைஞர்களும் அவரைக் கண்டாலே மிரளுவார்கள். அதே நேரம் அன்போடு இருப்பார்கள்.
அந்த இமாம் பல இளைஞர்களை பெயர் சொல்லி அழைப்பார். அவர்களோடு நிறைய பேசுவார். உரிமையோடு கண்டிப்பார்.
அவருடைய வெள்ளிக்கிழமை பயானுக்காகவே பிற மஹல்லாவில் இருந்து பலர் வருவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பயானும் பல இளைஞர்களின் மனதை மாற்றி நெறிபடுத்தி இருக்கிறது.
அவர் வாய் திறந்து பள்ளிவாசலுக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று சொன்னால் நிதி குவியும். அந்த இமாம் அந்த மஹல்லாவை விட்டு போனால் அந்த இடம் காலியாகிவிடும்.
அதன் பிறகு வரும் பல இமாம்களால் இந்த இடத்தை நிரப்ப முடிவதில்லை. (இதை ‘டைப்’ செய்யும்பொழுது முன்னால் ஜமாஅத்துல் உலமாவின் தலைவர், எஸ்.ஆர்.ஷம்ஸுல்ஹுதா ஹஜ்ரத், ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. – நிர்வாகி, நீடூர்.இன்ஃபோ)
நாம் அன்றாடம் ஒரு பிரச்சனையை சந்திக்கின்றோம். அந்தப் பிரச்சனையை நாம் சமாளிக்கின்றோமா? எதிர் கொள்கிறோமா? பல நேரங்களில் நாம் நமக்காக வாழ்வதைவிட மற்றவர்களுக்காக வாழ்வதே அதிகம். நாம் அன்றாடம் செய்யும் பல வேலைகள் நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ நாம் செய்வோம். கேட்டால், என்ன சொல்றீங்க? எல்லாம் என் குடும்பத்துக்காக! அவருக்காக, இவருக்காக! முக்கியமாக நாம் சொல்லும் ஒரு நல்ல வாக்கியம் ‘சொன்னா எங்கே கேட்கிறார்கள்? சரி, செஞ்சிட்டு போங்கன்னு விட்டுட்டேன்’ நன்றாக புரிந்து கொள்வோம் நாம் மற்றவர்களுக்காக செய்யும் எதுவும் நமக்கு மனநிம்மதியைத் தர வாய்ப்பில்லை.
இன்றைய இளைஞர்கள் கேட்கும் கேள்விகள் பல. அவர்களுக்கு எல்லா செயல்பாடுகளுமே இன்றைய நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். இன்றைய நிகழ்வோடு ஒத்துப்போக வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற ஒவ்வொன்றும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்ற ஒவ்வொன்றும் இன்றைய சூழலுக்கு எப்படி ஒன்றிப்போகிறது என்று சொன்னாலே பலர் அதை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்கு இதைப்பற்றிச் சொல்ல வெகு சிலரே இருக்கிறார்கள்.
நான் சந்தித்த சில உலமாக்கள் ரம்ஜானையும், பக்ரீத்தையும், தொழுகையையும் இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றி அழகாக கூறி பலரை உணர வைத்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் அந்த புதிய சிந்தனை இல்லாமல் பழைய விஷயங்களையே பேசும்பொழுது ஒரு இளைஞன் பயான் என்று சொன்னாலே இறங்கி ஓடுகிறான் அல்லது கொட்டாவி விடுகிறான்.
ஒரு ஆலிமிடம் கேட்போம். நீங்கள் ஏன் ஆலிம் ஆனீர்கள்? சின்ன வயதிலே உங்கள் பாவா மதரஸாவிலே சேர்த்து விட்டதனாலா? நான் ஒரு ஹாபிஸ், நான் ஒரு இமாம் என்று சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு உள்@ர பெருமை இருக்கிறதா? (பெருமை கூடாது என்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றான்) நான் கேட்பது வேறு! மனதளவில் தோன்றும் அந்த சந்தோஷம், அந்த அர்ப்பணிப்பு, ஆர்வம், காதல் நமக்கு இருக்கிறதா?
உங்கள் மஹல்லாவில் பெரிய பணக்காரர் இருக்கலாம். பெரிய வியாபாரி இருக்கலாம். பெரிய அதிகாரி இருக்கலாம். நிறைய படித்தவர் இருக்கலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் அவர்களை எப்படிப் பார்க்கிறோம். அவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள்? ஒரு இமாம், ஒரு ஹஜ்ரத் என்பவர் இவர்கள் எல்லோரையம் விட ஒரு முத்தவல்லியைவிட மேலானவர். இந்த எண்ணமும், இந்த நிகழ்வும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் இமாம் ஆனதினால், வாழ்வதால்.
நான் சொல்வது இமாம் ஆகி வாழ்ந்தால் மரியாதை குறைவாகத்தான் கிடைக்கும். நான் இமாம் ஆகவே பிறந்தேன். நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதி, இவர்கள் எல்லோரையும் பத்திரமாக நல்வழியில் அழைத்துச் செல்லும் பெரும் பொறுப்பில் இருக்கிறேன் என்ற அந்த எண்ணம் பல இமாம்களுக்கு இல்லை. அந்த மஹல்லாவில் மிக முக்கியமானவர் நீங்கள்தான்! அந்த பெருமை, சந்தோஷம், ஈடுபாடு உங்களுக்கு மனநிறைவைத் தரும். ஒருவர் சற்று அதிகமாகப் பேசிவிட்டாலே அவரைக் கட்டம் கட்டி வேறு கூட்டத்தில் சேர்ந்து விட்டதாக அறிவித்துவிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. இருந்தாலும் அந்த ரிஸ்க்கை (Risk) நான் எடுக்கிறேன்.
எனக்குத் தெரிந்து நான் சொன்னது போல் இமாம் என்பதை ஒரு வேலையாக இல்லாமல் அற்புதமான ஆனந்தமான பொறுப்பாக எடுத்து, அதை செவ்வனே செய்யும் சிலரை பார்த்திருக்கிறேன்.
அவர்களைப் பார்க்கும் பொழுது ஒரு சிங்கத்தை பார்க்கும் உணர்வு இருக்கும். நடையில் அத்;தனை கம்பீரம். அந்த தாடியின் அழகு கூடியிருக்கும்.
அவர் கண்ணில் அன்பும், கண்டிப்பும் இருக்கும். எந்த ஒரு நிகழ்வும் அவரைக் கேட்காமல் அந்த முஹல்லாவில், அந்த பள்ளியில் நடக்காது. அந்த மஹல்லா பெரியவர்களும், ஏன் இளைஞர்களும் அவரைக் கண்டாலே மிரளுவார்கள். அதே நேரம் அன்போடு இருப்பார்கள்.
அந்த இமாம் பல இளைஞர்களை பெயர் சொல்லி அழைப்பார். அவர்களோடு நிறைய பேசுவார். உரிமையோடு கண்டிப்பார். அவருடைய வெள்ளிக்கிழமை பயானுக்காகவே பிற மஹல்லாவில் இருந்து பலர் வருவார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பயானும் பல இளைஞர்களின் மனதை மாற்றி நெறிபடுத்தி இருக்கிறது. அவர் வாய் திறந்து பள்ளிவாசலுக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று சொன்னால் நிதி குவியும்.
அந்த இமாம் அந்த மஹல்லாவை விட்டு போனால் அந்த இடம் காலியாகிவிடும். அதன் பிறகு வரும் பல இமாம்களால் இந்த இடத்தை நிரப்ப முடிவதில்லை. (இதை டைப் செய்யும்பொழுது முன்னால் ஜமாஅத்துல் உலமாவின் தலைவர், எஸ்.ஆர்.ஷம்ஸுல்ஹுதா ஹஜ்ரத், ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. – நிர்வாகி, நீடூர்.இன்ஃபோ)
பல இமாம்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு மஹல்லாவில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. தொழுக வைப்பார். வீட்டிற்கு போய் விடுவார். கேட்டால் நானுண்டு என் வேலையுண்டு என்ற இருக்கிறேன் என்பார். எந்த முக்கிய முடிவிலும் இவர் கலந்திருக்க மாட்டார். கேட்டால் அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பார். வெள்ளிக்கிழமை பயான், பண்ணவேண்டுமே என்பதற்காக இருக்கும்! மஹல்லாவில் இருக்கும் இளைஞர்களுக்கு இவர் யாரென்றே தெரியாது. இவருக்கும் அப்படித்தான். அவர் தொழவந்தால் தானே என்பார் இமாம்.
முதலில் நான் சொன்ன இமாம் ஹஜ்ரத் தான் நிச்சயமாக பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதி. இரண்டாவதாக குறிப்பிட்டவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. யாருமே இல்லாத காலத்தில் தனியொருவராக நின்று அல்லாஹ்வின் மீதும் தங்கள் மீதும் உறுதியான நம்பிக்கையோடு அந்த அர்ப்பணிப்பு, ஈடுபாடு, ஆர்வம், பெருமை, நேர்மை, பொறுப்பு, அன்பு, பாசம், அக்கறை இருந்தால்தான் ஓர் அற்புதமான மார்க்கம் நமக்கு கிடைக்கும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதி என்கின்ற வார்த்தையே மிகப்பெரும் அங்கீகாரம் அல்லவா?
இதெல்லாம் சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று எனக்குத் தெரியும்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மார்க்கத்தைத் தர பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது. அப்படிப்பார்த்தால் நாம் இதை செய்யும்போது வரும் இடர்பாடுகளை உடைத்துத்தான் இதை செய்ய வேண்டி இருக்கும். நிச்சயம் சுலபமல்ல! ஆனால் முதலாவதாக சொன்னதுபோல் வாழும் இமாம்களுக்கு அதுவே வாழ்க்கை என்று ஆனதால் வெற்றி பெற்றார்கள்.
இப்படி செய்யத்துணியும் இமாம்களே நம் சமுதாயத்தின் முதல் தலைவர்கள். ஒரு தலைவர் என்பவர் மாற்றங்களை ஏற்படுத்துபவர். அதற்காக தன்னையே தருபவர். தலைமை என்பது பிறக்கும்போதே கூடவே பிறப்பது அல்ல. அது நாமே கற்றுக்கொள்கிறோம்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் ‘இறைவா! எனக்கு அபஜஹில், உமர் ரளியல்லாஹு அன்ஹு இருவரில் ஒருவரை கொடுத்து இஸ்வாத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்’ என்று கேட்டார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை இறைவன் கொடுத்தான். அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீரிய தலைமையிலே பல விஷயங்களை கற்று தங்கள் தலைமைத்துவத்தை மெருகேற்றி தலைசிறந்த தலைவராக மாறினார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கீழ் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எத்துனை பாடம் படித்திருப்பார்கள்? எவ்வாறெல்லாம் தங்களை தயார் செய்திருப்பார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.
நன்றி: சிந்தனை சரம்