Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களே! கணவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்!

Posted on October 19, 2010 by admin

பெண்களே, கணவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்!

அன்பு! இறைவன் அளித்துள்ள முக்கியமான, மகத்தான அருட்கொடை. இறைவன் தனது படைப்பினங்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகளை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகின்றான் என்பது நபிமொழி.

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று மனைவியிடம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!! எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

1. உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள். ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2. உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3. வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். (வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4. வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

 5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

 6. கணவனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7. உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விஷயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8. உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு! ஆடம்பரம் வேண்டாம். கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9. சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ, இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.

 10. உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11. நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12. வீட்டை சந்தோஷமான இடமாக வைத்திருங்கள். “ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13. கணவன் சில காகிதங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத் தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.

14. உங்களுடைய சந்தோஷங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோஷமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

 15. உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16. கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விஷயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை, படுக்கையறையில் மட்டும்!!!

www.nidur.info 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

82 − 74 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb