Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

செய்கூலி இல்லை! சேதாரம் இல்லை!!

Posted on October 18, 2010 by admin

விழித்துக்கொள்ளுங்கள்!

தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் அடிக்கடி செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய் குறைவு; எடைக்கு மட்டுமே விலை என்றெல்லாம் பல்வேறு விளம்பரங்கள் வருகிறது. ”இந்த செய்கூலி, சேதாரம் கான்செப்டே புரியல..! தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது?” என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கைகளால் தூக்கி எடைபோடும் தராசு இருந்தது. அதில் சிலர் ‘கை’ வித்தை காட்டி எடையை கூட்டியும், குறைத்தும் காண்பிப்பார்கள். இன்னும் சிலர் தராசின் ஒரு தட்டின் கீழ் புளியை ஒட்டி வைத்து, மக்கள் வயிற்றில் புளியை கரைப்பார்கள். நாகரிக வளர்ச்சியில், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் எல்லா கடைகளையும் ஆக்கிரமித்தது. இதில் ஓரளவு எடை சரியாக மக்களுக்கு கிடைத்தது. விடுவார்களா போலிகள்..? இதிலும் புகுந்து விட்டார்கள்.

இந்நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் போலி தராசு தாயாரித்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் தயாரித்துள்ள எலெக்ட்ரானிக் தராசுகளில், ஒரு வகை கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இது, எடைகளை அதிகமாகவோ குறைவாகவோ காட்டும். ஒரு கிலோ எடையை 10 சதவீதம் அதிகமாகவும், குறைவாகவும் காட்டும் வகையில் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையான எடை கொண்ட தராசு ரூ.10 ஆயிரத்திற்கும், தில்லுமுல்லு செய்ய உதவும் தராசை ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து உள்ளனர்.

இந்த வகை எடை எந்திரங்களில் 4 பட்டன்கள் உள்ளன.

ஒரு பட்டனை அழுத்தி எடை போட்டால், சரியான எடையை காட்டும்.

அடுத்த பட்டனை அழுத்தி எடை போட்டால் 50 சதவீத எடையை குறைத்து காட்டும்.

3வது பட்டனை அழுத்தினால் 50 சதவீத எடையை அதிகரித்து காட்டும்.

4வது பட்டன் வேறு ஒரு எடையை காட்டும்.

இவ்வாறு பலவிதமான எடைகளை காட்டும் வகையில் எடை எந்திரங்களை தயாரித்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகள், ரேஷன் கடைகள், பழைய இரும்பு கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவற்றுக்கு கூடுதல் விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இந்த போலி தராசு நகைக்கடை வரை சென்றுள்ளதை பார்க்கும் போது, ரேஷன் பொருள் போல, நாம் வாங்கிய நகையும் எடை குறைவாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.

ஏனெனில் நாம் வாங்கிய நகைகளை சிறிது காலம் கழித்து விற்பதற்காக சென்றால், நகைக்கடைக்காரர் நமது நகையின் எடையை சொல்லும் போது, நாம் வாங்கியபோது உள்ள எடையை விட குறைவாக சொல்வார். அப்போது நாம் ‘தேய்மானம்’ ஆகியிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால் நாம் வாங்கும்போதே எடை குறைய வாய்ப்புண்டு என்ற உண்மையை இந்த போலி தராசுகள் படம்பிடித்துக் காட்டுகிறது.

அதிகாரிகள் போலி தராசு தயாரித்தவர்களை கைது செய்ததோடு நின்று விடாமல், அவர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்து, அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

‘’தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் போலி.

பொதுமக்களின் பர்ஸ் காலி’’

அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,

தொலைக்காட்சியில் அடிக்கடி நகைக்கடைகளின் விளம்பரத்தில், ‘சேதாரம் இல்லை செய்கூலி இல்லை‘ என்று சொல்கிறார்களே… அப்படீன்னா என்ன…?!

பொதுவா ஒரு பொருளுக்கு விலை வைத்து விற்பதுதான் நடைமுறை…!

ஆனால் தங்க நகை வாங்கும்போது மட்டும் ஏன் அதை செய்த்தற்கான கூலியையும், செய்யும்போது ஏற்படும் சேதாரத்தையும் வாங்குபவர் தலையில் கட்டுகிறார்கள்?

செய்கூலியாவது பரவாயில்லை.. அதன் வேலைபாட்டுக்காவது தண்டம் அழுகலாம்.

ஆனால் சேதாரம், சேதாரமான தங்கத்தையும் நம்மிடம் கொடுப்பது இல்லை.. ஆனால் காசை மட்டும் வசூலிக்கிறார்கள்…என்ன கொடுமை சார் இது

இது போக.. வாங்கின கடையிலேயே முன்பு வாங்கின நகையை எக்சேன்ஞ் செய்ய கொடுத்தால் அதற்க்கும் சேதாரத்தை கழித்து விட்டு கொடுக்கிறார்கள்??!!

நமக்கு கிடைக்காத சேதாரத்திற்கு இரு முறை செலவு ??!!” என்று புலம்புகிறீர்களா?

இதை படியுங்கள்:

 சேதாரமும் செய்கூலியும் இல்லாமல் நகைகள் தயாரிக்கப்படுகிறதா?

அல்லது பேஷன் மாறிப்போன துணிகளை தள்ளுபடி என்ற பெயரில் விற்கிறார்களே அது போன்று பழைய டிசைன் நகைகளை அப்படி ஏதும் விற்பனை செய்கிறார்களாஸ? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகைகள் தயார் செய்யப்படுவதே இல்லை.

பட்டறைகளில் தொழிற்சாலைகளில் செய்யப்படும் நகைகளுக்கு கண்டிப்பாக சேதாரம் உண்டு.

மொத்த வியாபாரிகள் வாங்கக்கூடிய நகைகளுக்கு அதாவது 916 க்கு அவர்கள் 920 என்றக் கணக்கில் 4 சதவீதம் சேதாரத்துடன் கொடுத்துதான் வாங்குவார்கள்.இது கல்கள் இல்லாத நகைகளுக்கு மட்டும்.

கல்வைத்த நகைகளுக்கு சேதாரம் இல்லை காரணம் கல்லின் எடை தங்கத்துடன் சேர்ந்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் இல்லாமலேயே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்.

ஆனால் கல்பதித்த நகைகளை செய்யும்போதும் சேதாரம் ஏற்படும்.சேதாரம் இல்லாமல் நகைகள் செய்யப்படுவதில்லை.

பழைய நகைகளாக இருந்தாலும் அதை பாளீஷ் செய்து சூடுபத்திய திரவங்களில் நனைத்து அதிலுள்ள அழுக்குகளைப் போக்கி புதிய நகைப்போல விற்றுவிடுவார்கள்.

 கல் வைத்த ஓரு மோதிரம் செய்வதென்பது

முதலில் மோல்டிங் செய்யப்படவேண்டும் மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.

பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் ராவும் போதும் சேதம் ஏற்படும் . அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க செதுக்க நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்கிறார்களே… தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா…? பொது மக்களை ஏமாற்றுகிறார்களா…?

சேதாரம் செய்கூலி இல்லாத நகைகளில் தரத்தினை சோதனைச் செய்து பாருங்கள். இது ஒருவகையான மோடி வித்தைக்காரனின் மோசடியாகவே இருக்கும்.

 18 கேரட்டின் நகைகள்…

இது 750 என்ற சுத்த தங்கமும் 250 செம்பும் கலந்து செய்யப்படுகிறது.இதன் நிறம் மஞ்சளாக இருக்காது வெழுத்துப்போன நகைகளாக காட்சியளிக்கும்.சிலர் இந்த நிறத்தைக் கண்டுவிட்டு தங்கமே அல்ல என்று சத்தியம் செய்வார்கள்.

சொல்லப்போனால் அதிகமான புதிய வடிவங்களை இந்த 18 கேரட்டில்தான் வடிவமைக்க முடிகிறது. குhரணம் தங்கத்தில் கலவை அதிகமாக கூட்டினால் அதன் தன்மை கெட்டியாகும். நாம் நினைத்தபடி வடிவங்களை உருவாக்க முடியும்.

நம்ம ஊர்களில் காசிமாலை என்ற 22 கேரட் பத்து பவுன் நகையைப் பார்த்தால் பெரிதாக இருக்கும்.அதே பத்து பவுனுக்கு துபாயில் காசிமாலை வாங்கினால் பார்வைக்கு சின்னதாக இருப்பது போலத் தெரியும்ஸ தரம் குறைவுதான் அதற்கு காரணம்.

பணக்காரர்கள் 18 கேரட்டின் நகைகளைதான் அதிகம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதில் வைரங்களை பதிப்பதற்கு ஏற்றமான தரத்தை கொண்டதாக 18 கேரட் இருக்கிறது.

தற்போது 18 கேரட் நகைகள் பல நிறங்களில் செய்கிறார்கள்.வெள்ளை நிறம் ரோஸ்நிறம் பழுப்பு நிறத்திலும் செய்யப்படுகிறது.

தங்கம் விலை உதாரணத்திற்கு ஒரு கிராம் 18 கேரட் 1000 ரூபாய் என்றால் அதன் செய்கூலி ஒரு கிராமுக்கு 200 – 300 என்று பல வேலைப்பாடுகளுக்கு தகுந்தமாதிரி இருக்கிறது.

நம்நாட்டில் பெரிய நகரங்களில் 18 கேரட்டின் டிசைன்கள் விற்பனையாகி வருகிறது. மும்பை சென்னையிலும் சாதாரன 18 கேரட் சங்கிலிகள் வெள்ளைத்தங்கத்தில் விற்கப்படுகிறது.

ஆலோய் என்ற உலோகத்தை தங்கத்தில் கலந்து செய்த நகையை ரோடியம் என்ற அமிலத்தில் நனைத்து எடுத்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இப்போதெல்லாம் 22கேரட்டுகளில் வளையல்களில் வெள்ளை ரோடியம் இடப்படுகிறது. மஞ்சளும் வெள்ளை கலரும் கலந்திருப்பதினால் அழகின் மெருகு கூடுகிறது.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 31

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb