[ வயதானவர்களுக்கு செக்ஸ் தேவை இல்லை என்று நினைப்பதோ அல்லது ஈடுபட மாட்டார்கள் என்று கருதுவதோ யூகத்தின் அடிப்படையிலான விஷயமாகவே இருக்கும். கணவனும் மனைவியும் சம்மதப்பட்டு எந்த வயதிலும் உறவில் ஈடுபடலாம் என்பதுதான் யதார்த்தம், உண்மையுங்கூட!
இதை எந்த மதமும் தடை செய்யவில்லை. ‘வயதாகிவிட்டது, ஆகவே இனி நீங்களெல்லாம் இறைவணக்கத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும்’ என்று எம்மதமும் தடை விதிக்கவில்லை, அதை தவறு என்றுகூட சொன்னதில்லை!
இவ்விஷயத்தில் முழு சுதந்திரமும் மனிதனுக்கு இறைவன் அளித்திருப்பது அவனது மாபெரும் கருணை என்றே சொல்ல வேண்டும்.
வயதானவர்களெல்லாம் தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் இறங்கியிருந்தால் மனிதனின் கதி என்னவென்று நினைத்துப் பாருங்கள், இறைவனின் கருணை புரியும்.
ஒருவர் ஆரோக்கிமாக இருந்தால் அவரது இறுதி மூச்சு வரைக்கும் உடம்பு செக்ஸுக்கு ரெடியாகவே இருக்கும்.]
என் நண்பர் ஒருவர் ஆச்சர்யமாக ஒரு கேள்வி கேட்டார். ‘சார், 86 வயசான மனிதர் செக்ஸில் ஈடுபட முடியுமா? இந்த வயசுலே இதெல்லாம் சாத்தியமா?
வயதான பிறகு செக்ஸ் உணர்வு குறைந்துவிடும், ஈடுபடவும் மாட்டார்கள் என்பது பலரது நினைப்பு. 1950 – ல் முதன்முதலில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 40 வயது. பெண்ணுக்கு 38. 2001 – ல் ஆண்களின் சராசரி ஆயட்காலம் 63. பெண்களுக்கு 65.
2011 – ல் ஆண் – பெண் இருவரது சராசரி ஆயட்காலமும் 75 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மனிதனின் ஆயட்காலம் நீண்டு கொண்டே போகும்போது எந்த வயதை வைத்து வயதானவர்கள் என்று சொல்வது.
ஒரு மனிதனின் உணர்ச்சி, கிளர்ச்சி (ளநஒரயட சநளிழளெந) உடம்பு, மனசு இரண்டையும் பொருத்தது. ஆனால், நடைமுறையில் வயதானால் செக்ஸ் உணர்வு குறைந்துவிடும் என்று நம்பிக் கொண்டு இருப்பவர்கள் உடம்பை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். ‘வயசாயிடுச்சி, பேரன் பேத்தி பார்த்தாச்சு, இனிமேல் இதெல்லாம் எதற்கு?’ என்று வயதானவர்களுக்கு செக்ஸ் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்குபவர்களும் இருக்கிறார்கள்.
பெரும்பாலும், வயதானவர்களுக்கென்று தனி அறை, பிள்ளைகள் ஒதுக்குவதில்லை.
‘வளர்ந்த பிள்ளைகள்
இருக்கிற வீட்டில்
கனவாகிறது
அம்மா – அப்பாவின் காதல்!’
என்பது யதார்த்தம். சூழ்நிலை தான் காரணம் என்று சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.
இன்றைய பொழுதுபோக்குச் சாதனங்கள், சூழல் எல்லாமே உணர்ச்சி கிளர்ச்சி அடைய வைப்பதாகவே இருக்கிறது. ஒருவர் ஆரோக்கிமாக இருந்தால் அவரது இறுதி மூச்சு வரைக்கும் உடம்பு செக்ஸுக்கு ரெடியாகவே இருக்கும். ஒரே வித்தியாசம், இளமையில் இருந்த வேகமோ, துடிப்போ இருக்காது என்பதுதான்.
ஒரு பிரபல செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர் கூறுகிறார், ‘சமீபத்தில் 50 வயது முதல் 91 வயது வரை உள்ள 2070 பேர்களை ஆய்வு செய்ததில் 50-59 வயதுக்குள் இருப்பவர்கள் மாதத்திற்கு 10 முறை உறவில் ஈடுபடுவதாகச் சொன்னார்கள். 60-29 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 முறையும், 70-79 வயதுக்குட்பட்டவர்கள் 3 முறையும், 80-89 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 முறையும், 90 வயதுக்கு மேலானவர்கள் 1 முறையும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்கள்.’ என்கிறார்.
இன்பத்துக்கு மனசு தாழ்ப்பால் போடலாமே தவிர, உடம்பு தாழ் போடுவதே இல்லை.
வயதானவர்களுக்கு செக்ஸ் தேவை இல்லை என்று நினைப்பதோ அல்லது ஈடுபட மாட்டார்கள் என்று கருதுவதோ யூகத்தின் அடிப்படையிலான விஷயமாகவே இருக்கும். கணவனும் மனைவியும் சம்மதப்பட்டு எந்த வயதிலும் உறவில் ஈடுபடலாம் என்பதுதான் யதார்த்தம், உண்மையும்கூட.
இதை எந்த மதமும் தடை செய்யவில்லை.‘வயதாகிவிட்டது, ஆகவே இனி நீங்களெல்லாம் இறைவணக்கத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும்’ என்று எம்மதமும் தடை விதிக்கவில்லை, அதை தவறு என்றுகூட சொன்னதில்லை!
இவ்விஷயத்தில் முழு சுதந்திரமும் மனிதனுக்கு இறைவன் அளித்திருப்பது அவனது மாபெரும் கருணை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் வயதானவர்களெல்லாம் இறைவணக்கத்தில் தான் மூழ்கியிருக்க வேண்டும், தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது! என்று சட்டம் இறங்கியிருந்தால் மனிதனின் கதி என்னவென்று நினைத்துப் பாருங்கள், இறைவனின் கருணை புரியும்.
இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 80 வயதுக்கு மேல் தான் ஏக இறைவன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இரு மழலைச் செல்வங்களை அளித்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.