[ கேள்வி பதில் இணைக்கப்பட்டுள்ளது ]
ஆண் பெண் – தகாத உறவுககளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதோடு கடுமையான தண்டனையையும் அளிக்கிறது. அதே சமயம் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க வழிவகைகளையும்சொல்லித்தருகிறது.
ஆம்! இல்லற வாழ்வில் உடன்பாடு இல்லையென்றால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விவாகரத்து செய்து கொள்ளும் வழிகளை எளிதாக்கியிருக்கிறது. அதன் மூலம் ஆணோ அல்லது பெண்ணொ தனக்கு பிடித்தவரை மருமணம் செய்யும் உரிமையை வழங்குகிறது.
தவறான பாதைக்கு வழிகாட்டும் அத்ததை வாசல்களையும் இஸ்லாம் தடுக்கிறது.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன…?
0 தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.
அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
0திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
0திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
0வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட வழி வகுத்து விடுவதும் உண்டு.
0தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
0பெரும்பாலான குடும்பங்களில் மனைவி சோரம்போவதற்கு கணவனே காரணமாகிறான். இதில் முக்கிய காரணாம் மனைவியை விட்டு வெகு காலங்கள் பிரிந்திருப்பது!
மறுபடியும் நினைவில் கொள்ளவும்: ஆண் பெண் – தகாத உறவுககளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதோடு கடுமையான தண்டனையையும் அளிக்கிறது. அதே சமயம் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க வழிவகைகளையும்சொல்லித்தருகிறது.
ஆம்! இல்லற வாழ்வில் உடன்பாடு இல்லையென்றால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விவாகரத்து செய்து கொள்ளும் வழிகளை எளிதாக்கியிருக்கிறது. அதன் மூலம் ஆணோ அல்லது பெண்ணொ தனக்கு பிடித்தவரை மருமணம் செய்யும் உரிமையை வழங்குகிறது. தவறான பாதைக்குவழிகாட்டும் அத்ததை வாசல்களையும் இஸ்லாம் தடுக்கிறது
ஒரு பெண்ணிற்கு திருமணத்திற்குப் பின்னும் தகாத நட்பும், உறவும்ஏற்பட காரணம் என்ன?
ஆண்களும் இத்தகைய உறவுகளுக்கு ஆளாவது விதிவிலக்கல்ல என்றாலும், பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ?
குடும்ப நண்பரான மனோத்தத்துவ மருத்துவரிடம் இது குறித்து நான் கேட்டபோது, அவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்ட கருத்துக்கள் இங்கே:
கேள்வி: மனைவியான ஒரு பெண் ஏன் இத்தகைய தவறான நட்பு வலையில் சிக்குகிறாள்? அதற்கான காரணங்கள் என்ன?
மருத்துவர்:பெண்ணின் மனதில் ஏற்படும் தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஒரு முக்கிய காரணம்.
திருமணமான புதிதில் தன்னிடம் அதிக அக்கரை காட்டிய தன் வாழ்க்கை துணை, வருடங்கள் ஓட ஓட, தன்னிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது என்பதை ஒரு மனைவி திருமணம் ஆகி 8 அல்லது 10 வருடங்கள் கழித்து, அதாவது குழந்தைகளை பெற்று வளர்த்து முழுநேர பள்ளிக்கு அனுப்பிய போதுதான் உணர்கிறாள்.
அதுவரை தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று இருந்தவளுக்கு இந்த தனிமையுணர்வு அப்போதுதான் தலைத்தூக்குகிறது.
கேள்வி:தனிமையுணர்வு பெரும்பாலும் அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் கடந்து வரும் ஒன்று, அவ்வுணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியுமா?
மருத்துவர்: பெரும்பான்மையான பெண்கள் இந்த தனிமை உணர்வுகளின் தாக்கத்துக்குள்ளாகும் போது முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள்ளிருப்பார்கள்,
எப்படி 15 வயதில் ஒரு பெண்ணிற்க்கு ஒத்த வயது பையனின் பார்வை கிரங்கடித்ததோஸ
எப்படி 20 வயதில் காதலும், தொடுதலும் அவளுக்கு கிளர்ச்சியை கொடுத்ததோ..
அப்படி இந்த 30 -40 வயதிலும் ஒரு ஆண் துணையின் கரிசனமான வார்த்தையும், அரவணைப்பும் ஒரு இன்பத்தை கொடுக்கிறது.
ஆனால் அந்த அரவனைப்பு அவளுக்கு தன் கணவனிடமிருந்து கிடைக்காத பட்சத்தில் அவளுடன் அன்போடு பேசும் மற்றொரு ஆணிடம் வசியப்படுத்துகிறது.
கேள்வி:கணவனின் கவனக் குறைவும், அக்கரையின்மையும் இதற்கு காரணமா?
மருத்துவர்: ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணம். தன் மனைவி தன் அன்பிற்காக ஏங்குகிறாள் என்று உணராமல் போவதற்கு காரணம்ஸஸ.தாயான பின் பெரும்பான்மையான பெண்கள் தன் கணவனிடம் அதிக நேரத்தை செலவழிப்பதில்லை. கணவனுக்கும் வருடங்கள் செல்ல செல்ல , இனி இதுதான் குடும்ப வாழ்க்கை போலிருக்கிறது என்று, தன் தொழில், அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்து விடுகிறான்.
பத்து வருடம் தன் கணவனுக்கு, தன் குழந்தைகளுக்கும் சமைப்பதும், உழைப்பதும் மட்டுமே கடமை என்று இருந்த மனைவிக்கு, காலம் தாழ்த்தி கணவன் மேல வரும் காதலை வெளிக்காட்ட தெரிவதில்லை.
சில விஷயங்கள் ஆண்களுக்கு வெளிப்படையாக சொன்னால் மட்டுமே புரியும், அச்சில விஷயங்களை பெண்கள் வெளிப்படுத்த தவறுவதுதான் அடிப்படை காரணம்.
கேள்வி: படுக்கை அறை விரிசல் இதற்கு முக்கிய காரணமென்று சொல்கிறீர்களா?
மருத்துவர்: அதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டுமே காரணமில்லை. சக ஆண்களிடம் பேசி பழகும் இக்காலக்கட்டத்தில், ஒரு பெண் ‘ அந்த ‘ உறவுக்காக என்ற எண்ணத்தோடு பழகுவதில்லை. இயல்பான நட்பே நாளடைவில் அரவனைப்பாக, ஆறுதலாக, இதமாக மாறும்போது தான், ஒரு பெண் எல்லை மீறுகிறாள், தன் உணர்வுகளுக்கு அடிபணிகிறாள். ஆண் நட்பில் அவளது முதல் நோக்கம் இதுவல்ல.
கேள்வி: தாம்பத்திய வாழ்வில் நாளடைவில் ஏற்படும் தொய்வினை போக்க ஏதேனும் அறிவுரைகள் தர இயலுமா??
மருத்துவர்: மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் ரகசியமே மனம்விட்டு பேசுவதும், அதிக நேரம் தனித்து செலவழிப்பதும் தான்.
‘மோகம் முப்பது நாள், காதல் அறுபது நாள்’ என்பது “மோகம் முப்பது வருஷம், காதல் அறுபது வருஷம்‘ என இருக்க இதோ சில டிப்ஸ்..
1. ‘தேன் நிலவில்’ எப்படி ஒரு தனிமை தம்பதியர்க்கு புரிதலையும், இன்பத்தையும் அளித்ததோ, அதே மாதிரியான ஒரு தனிமையை திருமணமாகி பல வருடங்கள் சென்றபின்பும் ஏற்படுத்திக் கொள்வது கணவன் மனைவிக்கு ஒரு புது உற்ச்சாகத்தையும், அந்நியோனத்தையும் அளிக்கும்.
(குழந்தைகளை உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டு, ஒரு இரண்டு நாள் கணவன் மனைவிதனியாக இருக்கலாம்.
2.முப்பது வயதில் உங்கள் மனைவிக்கு தன் அழகும், இளமையும் மறைந்துப்போனதோ என்ற உணர்வு மேலோங்கி இருக்கும், அதனால் அடிக்கடி அவர்களை வர்னிக்கவும், பாராட்டவும், உற்ச்சாகப்படுத்தவும் தவற வேண்டாம். ”நான் உன்னை பொண்ணுபார்க்க வந்தபோஇருந்ததைவிட இன்னும் அழகா, நசுன்னு இருக்கிற? உன்னைப்பார்த்தா இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மாதிரியா இருக்கு, காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான்டா இருக்கிற” – இப்படி அள்ளி விடுங்க)