நரகப் பாதையை வலம் வரும் பிரபலங்கள்!
அரசியல்வாதிகள், நடிக, நடிகையர் போன்ற பிரபலங்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து அதன் மூலம் பிரபலமடைவது வழக்கம். அதற்காக கோவில், சர்ச் என்று வித்தியாசம் பார்க்காமல் செல்வதுண்டு. ஆனால் பள்ளிவாசல்களுக்கு செல்வதில்லை.
ஆனால் இவர்கள் ஏன் வராமலிருக்கிறார்கள் என நம்மவர்கள் கவலை கொண்டதாலோ ஏனோ நோன்பு நேரத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விட்டனர். அந்நிகழ்ச்சியில் கஞ்சி குடிப்பதும் தொப்பி போடுவதும் சேலைத் தலைப்பை தலையில் போடுவதும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது.
இன்னொரு புறம் தர்ஹா எனும் பெயரில் ஏதேனும் சவக்குழியின் மீது பட்டுத்துணி போர்த்தி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்தனை செய்வதும் இருந்து வருகின்றது. அங்கும் இந்த பிரபலங்கள் சுற்றி வருகின்றன. கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தில் இருக்கும் இச்செயல்கள் இஸ்லாத்தில் இல்லை என்பது அந்த பிரபலங்களுக்கு மட்டுமல்ல சில முஸ்லீம்களுக்கே தெரிவதில்லை.
மனித வரலாற்றில் போதிக்கப்படும் மார்க்கம், மதங்கள், கடவுள்கோட்பாடுகளில் வித்தியாசமான, பகுத்தறிவுக்குட்பட்ட, அறிவுபூர்வமான கடவுள் கோட்பாட்டைவழங்கும், விளங்கப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இதனை ஒவ்வொரு தனிமனிதனும் விரும்பியோ, விரும்பாமலோஏற்றுக் கொள்கின்றார்கள்.
‘அல்லாஹ்’ என்று தனதுதனித்துவமிக்க பெயரையும் ஆற்றலையும் தன்னகத்துக்கொண்டு பேசும் அல்லாஹ்” வணக்கத்திற்கு தகுதியானவன் இப்பூமியில் யாருமில்லை, அல்லாஹ்வாகிய ஒருவனைத்தவிர’ என்ற தனிச்சிறப்புமிக்க, துணைகற்பிக்க முடியாத, இணைதுணையை சேர்த்துப் பார்க்க முடியாத விதத்தில் உலகிற்குபிரகடனப்படுத்துகின்றான்.
அவன் வாழ வழிகாட்டி இருக்கும் ‘இஸ்லாம்’ என்கின்ற சாந்தி, சமாதானம் நிறைந்த மார்க்கத்தை பின்பற்றி வெற்றி பெறுவதாக இருந்தால் இந்த கலிமாவை உள்ளத்தால் ஏற்று நாவால் மொழிந்து, நடத்தையால் செயற்படுத்திக் காட்டுவதைமட்டுமே அங்கீகரிக்கின்றான்.
சிறு குழந்தையின் கையில் ஒருகோப்பை தூய வெண்நிறபாலைக் கொடுத்து வெள்ளைஎன்றால் இப்படித்தான் இருக்கும் என்று விளங்கப்படுத்துவது போல் தான் அல்லாஹ் தனது இணை துணையற்ற பேராற்றலை உலக மக்களுக்கு விளங்க வழி செய்கின்றான்.
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகனுக்குஇந்த தொனியில் தகுந்த விளக்கத்தைக்கொடுத்தார்கள்.
“மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு அவர் அவருக்கு உபதேசம் செய்தவராக, என் அருமை மைந்தனே! அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) (அல்குர்ஆன் 31 : 13)
ஆனால் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு கூட்டம் தங்களது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ள ‘தர்ஹா வழிபாடு’ என்கின்ற இணைவைப்புக் கொள்கையை உருவாக்கி பாமர மக்களையும் சேர்த்து பாதாளக் குழியில் தள்ளிக்கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
வாழும் போது முகவரியற்ற மனிதன், மரணித்த பின்னர் மாமனிதராகி, கடவுள் நேசராகி, அவ்லியாக் குஞ்சாகி வாழும் மனிதர்களுக்கு உதவி செய்வதாக இந்த அறிவற்ற, சிந்தனையற்ற சமூகம் நம்பி வணங்கி வருகின்றது. ஏனெனில் சவக்குழிக்குள் இருப்பது மனிதப் பிணமா அல்லது மிருகத்தின் பிணமா என்பது கூட அதை வணங்குபவர்களுக்கு தெரியாது.
இந்நிலையால் பெரும்பாலான மக்கள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் நஷ்டவாளிகளாக, நிரந்தர மன்னிப்புக் கிடைக்காததுர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவது கவலைக்கிடமானதாகும்.
அதிலும் குறிப்பாக இந்த அப்பாவி முஸ்லிம் பெயர்தாங்கிகளின் அறிவற்ற வழிகாட்டல்களை ஏற்று பிறமத பிரபலங்களும் இந்த தர்ஹாக்களை வலம் வருவது கேலியானதாகும்.
தர்ஹாக்களை புனிதத்தலங்களாகவும் அதில் அடக்கப்பட்டவர்களை அவ்லியாக்களாகவும் பார்க்கும், மதிக்கும் மக்களை அவர்களது நிலைமைகளையும் தரங்களையும் கவனத்தில் கொள்ளும் போது நோக்கங்கள் வேறுபடுவதைஅவதானிக்கமுடியும்.
1. படித்தவர்கள், உலமாக்கள் தர்ஹாக்களை வழிநடத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் காரணம் அங்குள்ள உண்டியல்களை தன் வசப்படுத்திக் கொள்வதற்காக.
2. முஸ்லிம், முஸ்லிமல்லாத பிரபலங்கள் தர்ஹாக்களை வலம்வரக் காரணம், மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக.
3. பாமர மக்கள் தர்ஹாக்களை வலம் வருவது சில உலமாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலேயாகும்.
4. பதவி படைத்தவர்கள் பலதரப்பட்ட மக்களையும் தன்வசப் படுத்துவதற்காக.
இது போன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
உலகில் படைக்கப்பட்டிருப்பது அல்லாஹ்வை அவன் சொல்லும் விதத்தில் வணங்கி வழிப்படத்தான் என்பதை கவனத்தில் கொண்டு இணை துணையற்றவன் அவன் என்பதை நமது வாழ்வில் உறுதிப்படுத்தி, நிலைநாட்டி, இந்த தர்ஹா வழிபாடு இஸ்லாத்தில் இல்லாதது என்பதை இந்த பிரபலங்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது அவசியம்.