Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

விக்கல் நல்லதா? ஏன் ஏற்படுகிறது?

Posted on October 7, 2010 by admin

விக்கல் நல்லதா? ஏன் ஏற்படுகிறது?

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை’ என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.

ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை இந்த விக்கல் விட்டு விட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், இல்லை’ என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன.

விக்கல் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றையும், மார்புப் பகுதியையும், டயபரம்’ என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல். தன்னிச்சையாக என்றால்…?

உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப் பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.

ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.

உதாரணம்: வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசு கிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப் போத லாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக் கையில் ஈடுபட்டு விடுகிறது.

பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.

விக்கல் எப்படி ஏற்படுகிறது?

விக்கல் என்றால் என்ன? எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.

அதன் தசைநார்கள் திடீரெனவும் தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படும்போதே விக்கல் ஏற்படுகிறது.

தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவையோ இன்றி உங்கள் கட்டுப்பாட்டை மீறி தானகவே இன்றி நடக்கும் செயற்பாடு எனலாம்.

விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.

பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.

அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.

குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.

குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்சலையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படுத்தலாம்.

வீட்டுச் சிகிச்சை

அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக்கக் கூடும்.

உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.

அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.

சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந்துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம். Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide

போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகிக்கக் கூடாது.

மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.

குறுகிய நேர விக்கல்கள் பொதுவாக Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப்படுவதாலேயே ஏற்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு தொடரும் விக்கல்

ஆனால் நீண்ட நாட்களுக்குத் தொடரும் விக்கல்களுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். சில வேளைகளில் சற்று பாரதூரமான நோய்களாலும் ஏற்படுவதுண்டு.

மண்டை ஓட்டுக்குள் அழுத்தம் (Intra cranial Pressure) அதிகரிப்பது, மற்றும் சிறுநீரக நோய்களால் குருதியில் யூறியா (Blood Urea) அதிகரிப்பது ஆகியன காரணமாகலாம்.

எனவே நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் விக்கல் தொடர்ந்தால் மருத்துவரிடம் காட்டி முழுமையான பரிசோதனை செய்வது அவசியமாகும். காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்குவார்.

விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறதாம்.

நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்பதையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சேலைன் ஏற்றுவது உதவலாம்.

எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.

நன்றி: தினக்குரல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb