Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மலட்டுத் தன்மையை தரத்துடிக்கும் நவீன உலகம்!

Posted on October 5, 2010July 2, 2021 by admin

Reports reveal how economic growth; and subsequent lifestyle changes are creating new medical challenges for India and concerns for the nations health.

தலைப்பை பார்த்தவுடன் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் நாளுக்கு நாள் அது உண்மையாகிக்கொண்டு வருவதை எதார்த்தமான வாழ்க்கையில் கண்டு வருகிறோமே!

அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், இதுதான் நாகரீகக்கலாச்சாரத்தின் பரிசு!

பீஸா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ?

தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை… மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு, இளைஞிக்கு கனவுகள் அதிகம். ஆனால் நிஜவாழ்க்கை அதை தருவதில்லை. மனக்கசப்பு… பாலியல் பிரச்சனைகள்… கனவு வாழ்க்கை நிஜவாழ்வில் பொருந்தாதுப் போதல். டேட்டிங் வாழ்க்கை கானல் நீராகப் போதல் போன்றவை இளைய சமூதாயத்தை மிகவும் பாதிக்கவே செய்கிறது.

திருமண வாழ்க்கையில் ஒவ்வொறு 10 பேருக்கும் ஒருவர் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு தம்மிடம் வருவதாக பாலியல் டாக்டர் நாராயண ரெட்டி கூறுகிறார்.

இருக்கமான ஜீன்ஸ், புகைப்பழக்கம், குடி, மற்ற போதைப்பழக்கம் , மன அழுத்தம் இளைய தலைமுறையினருக்கு மலட்டுத்தன்மையையே பரிசாக கொடுக்கிறது.

சாட்டிங்கில் தொடங்கி

இணையம் இரத்தத்தில் உள்ள அணுக்களோடு கலந்து விட்டு இருக்கிறது. சாட்டிங்கில் தொடங்கி, மின் அஞ்சல், இணையத்தில் மேய்வது கொஞ்சம் உள்ள காலத்தையும் தின்று விடுகிறது. தூக்கம் இணையத்தால் திருடப்படுகிறது. இளைஞிகளுக்கு உருவாகும் கரு முட்டை, இளைஞர்களுக்கு உருவாகும் விந்தணுக்கள் உருவாகும் வித்தத்தை இப்புற காரணிகள் பெறும் பாதிப்பை கொடுக்கிறது.

ஐபாட் டிஜிட்டல் இசை

செல்போன் இல்லாத இளைஞனை காணமுடியாது. ஐ பாட், எம்பி3. எம்பி4 என்று பிளேயர்களின் வகைகள் நீண்டு கொண்டே செல்கிறது. மூக்குப் பொடி சைசில் ஏஆர் ஆர், ராப் இசை மூளையில் உள்ள நியுராண்களை தட்டிக் கொண்டே இருக்கிறது. மன்னிக்கவும் அறைந்து கொண்டே இருக்கிறது. இளைய இரத்தத்தை கொதிநிலையிலேயே வைக்கிறது. நாடித் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதுவும் ஒரு காரணியாக கூறுகிறார்கள்.

டைட் ஜீன்ஸ்

வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் நம் மக்கள் நவீன வாழ்க்கை கனவுகளோடு செல்கிறார்கள். இங்கு வாழ் சூழலே முக்கியம். ஜீன்ஸ் போடாத இளைஞன் அறை மனிதன் என்றாகிவிட்ட்து.

தொடையை இருக்கும் ஜீன்ஸ், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை தடுப்பதாக பாலியல் டாக்டர் ரெட்டி கூறுகிறார்.

சென்னை இளைஞிகளும் டைட் ஜீன்சில் வருவதை கௌரமாகவே கருதும் நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை.

சூடான குளியல்

பிறகு புத்துணர்ச்சித் தரும் சூடான ஆவி பறக்கும் குளியல். “பச்சைத்தண்ணீ”யில் குளிக்கும் வாழ்க்கை நகைப்புக்குள்ளாக்கிவிட்டது. ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை குறைப்பதாக சென்னை டாக்டர் காமராஞ் கூறுகிறார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மருந்து மர்றும் பூச்சிக் கொல்லி கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவு காய்கறி ,பழங்கள் மலட்டுத்தன்மைக்கு பொதுவான காரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.

முடமாகிப்போன வேலை அமைப்பு

கணினி சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் உட்கார்ந்த நிலையிலேயே ( Sedentary) அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள். டேபிலெயே கிடைக்கும் பீசா, பர்கர் துரித உணவு.. என வாழ்கை முடங்கிப்போய்விட்டது.

சென்னை இளைஞர்கள் 50 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இப்பிரச்சனையில் ஆட்பட்டுள்ளார்கள்.

அனைத்தும் கிடைக்கிறது..

உட்கார்ந்த நிலையில் அரட்டை அடிக்க..

சுவைக்கு பீசா, நூடுல்ஸ்..

காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் டிஜிட்டல் இசை…

உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ்…

எல்லாம் கிடைக்கும் எங்கள் இளைஞனுக்கு…

ஆனால் நாளைய சந்ததி உருவாக்கும் திறனை மட்டும் தரப்போவதில்லை இந்த நவீன உலகம்…

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 46 = 55

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb