சுன்னத் (விருத்த சேனம்) – ன் சிறப்பு
‘சுன்னத்’ – ஆண்கள் தங்களது உடலை நோயின் பிடியிலிருந்த தற்காத்துக் கொள்ள இறைவன் வழங்கிய அற்புத நிவாரணம்.
‘சுன்னத்’ என்பதற்கு தமிழில் ‘விருத்த சேனம்’ என்று கூறுவர். ‘விருத்தம்’ என்றால் பழமை, ஒழுக்கம் என்று பொருள். ‘சேதனம்’ என்பது வெட்டுதலையும் குறிக்கும். அறிவுடைப்பொருள் என்றும் ஓர் அருத்தம் உள்ளது.
ஆணின் அக உறுப்பில் இருக்கும் முன் தோலை நீககுவது பழமையான, ஒழுக்கமான, அறிவுடைமையான செயல் என்பதை அறிய முடிகின்றது. இஸ்லாம் வலியுறுத்தும் முஸ்லீம்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கும் ஒரு முறையை மருத்துவ உலகம் பரிந்துறைத்துக் கொண்டிருக்கிறது.
வயிறு வீங்கி உப்புசம் நோயால் அவதிப்படுபவரைப் போல் 15 வயதிற்குள் ஆணின் உறுப்பு, சிறுநீர் பெய்யும்போது உப்பி சிலருக்க சிரமத்தைத் தரும். ஆடவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்யக் கூறுவது, சுன்னத். மேல்நாட்டவர், விஞ்ஞான ரீதியான சிந்தனையாளர்கள் தாமாவே முன்வந்து ‘சுன்னத்’ செய்து நுண்ணுயிர்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு தேடுகின்றனர்.
கணவன், மனைவி இயற்கை தேடலை நிறைவு செய்த பின் தங்கும் அழுக்கு, கிருமி, சிறுநீர் கழித்த பிறகு ஆணின் உறுப்பு முன் தோலுக்குள் தங்கும் கிருமிகளிடமிருந்து தப்பிக்க ‘சுன்னத்’ மிகச்சிந்த சாதனம். ‘சுன்னத்’ செய்யாத ஒருவர் தனது உறுப்பின் தோலுக்குள்ளாக மறைந்திருக்கும் மொட்டை தொட முடியாது. சுறுக்கென்று வலிக்கும், கூசும். இப்பிரச்சனையை ‘சுன்னத்’ தீர்த்து வைக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் என்கிற பெயரில் சுன்னத்துக்கு 25 ஆயிரம் வரை பெறப்படுகிறது. முஸ்லீம் மருத்துவமனைகளில் ஆயிரம் ரூபாய் செலவில் முடித்துக் கொள்ளலாம். தனிநபர்களும் சுன்னத் செய்கின்றனர்.
மனிதன் உயிர்வாழ, ஆரோக்கியம் காக்கப்பட அவன் அகமும் புறமும் சுத்தமடைய சுன்னத் அவசியம். மனித சமூகம் மிகச் சிறப்புற்று உலகில் வாழ அனைத்து நல்வழிகளையும் இஸ்லாம் பேதமற்று கற்பித்திருக்கிறது. நடைமுறைப்படுத்துவதில்தான் பேதம் நிலவுகிறது. (இக்கட்டுரை ‘முஸ்லீம் முரசு’ – ஆகஸ்டு 2010 இதழில்; வெளியானது)