Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அலட்சியம் செய்யப்பட்டுள்ள அற்புதமான வாழ்வு!

Posted on October 5, 2010 by admin

அலட்சியம் செய்யப்பட்டுள்ள அற்புதமான வாழ்வு!

      ஸைய்யிது நிஜாமிஷாஹ் நூரி, பாக்கவி     

[‘ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் இன்றி யாரும் எந்த பொருளையும் உருவாக்க மாட்டார்கள்’ என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

‘பூமியில் அனைத்தையும் உங்களுக்காகவே படைத்திருக்கிறேன்’ (அல குர்ஆன்: 2:29) என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். இந்த அறிவிப்பின் மூலம் (மனிதர்கள் நீங்கலாக) அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டான்.

மனிதர்கள் தங்களின் உழைப்பின் மூலம் பெற்றிடும்; வெற்றியையும், வருவாயையும் உயிர்வாழ – உலக சுகத்தின் உச்ச நிலை இன்பத்தை அனுபவிக்கவே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘உண்பது உழைப்பதற்காக – உழைப்பது உண்பதற்காக’ என்று இது மீண்டும் மறு சுழற்சியாகவே ஆக்கப்பட்டு விடுகிறது. இது உயிர் வாழ்வதை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான செயல்பாடுகள் மனித ஜீவிதத்தின் பிரத்தியேக அம்சமாக – குறிக்கோளாக இந்த சுழற்சிமுறை செயல்பாடுகள் அமைந்திருக்கவில்லை என்பதை நிதானமாக யோசித்தால் தெளிவாக விளங்கிக்கொண்டுவிடலாம்.]

இறைநம்பிக்கையில் ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்று இருவேறு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். ‘இவ்வுலகின் தோற்றத்தையும் இயக்கத்தையும் செயல்படுத்துபவன் இறைவன்’ என்ற நம்பிக்கையை கொண்டு இருப்பவர்கள் ஆத்திகர்களாகவும், அதனை இயற்கையான தோன்றுதலாகவும் தானாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் எண்ணுபவர்கள் நாத்திகர்களாகவும் அறியப்படுப்படுகிறார்கள்.

படைப்பகளின் பிரம்மாண்டமான அமைப்புகளும் நுணுக்கமான அவைகளின் இயக்கங்களும் எப்படி? ஏன்? என்று கேட்கப்பட்டால் அவை அனைத்தும் இயல்பானது, இயற்கையானது என்று நாத்திகர்கள் வாதிடுகிறார்கள்.

கர்ப்ப அறையில் செலுத்தப்பட்ட விந்தணு இரத்தக்கட்டியாக, சதைக்கட்டியாக மாற்றம் பெற்றுவிடுவது இயற்கையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அதற்குப்பின் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் சதைத்துண்டு போன்று ஒட்ட மொத்த மாற்றமாக ஆகி இருப்பதில்லையே!

மனித வாழ்வு இன்றியமையாத உள், வெளி உறுப்புகளாக அச்சதைத்துண்டு மாற்றம் பெறுவது எப்படி? அவைகளிள் மாறுபட்ட இயக்கங்களுக்கு இரத்த நாளங்களின் தொடர்பு இன்றியமையாதது அல்லவா? இதற்கான இணைப்புகள் இவ்வளவு நுணுக்கமாக பிணைக்கப்படுவது எப்படி? அவைகள் எவ்வித சிக்கலுமின்றி செம்மையாக செயல்படுவது எப்படி? இது ஒருபுறம் இருக்கட்டும்,

மனிதனின் முகத்தில் தோன்றும் உரோமங்களுக்கு ஹார்மோன் சுரப்பிகளே காரணம். அதனை நாம் மறுக்கவில்லை. புருவத்திலும், இமைகளிலும் இந்த ஹார்மோன்கள் தானாகவே திட்டமிட்டு செயல்பட்டு குறிப்பிட்ட அளவில் உரோமங்களை தோற்றம் பெறச் செய்வது எப்படி?

தலையில் உள்ள மூளை-கண்-காது-மூக்கு போன்ற பிரதான உறுப்புகள் தனக்கான அமைப்புகளிலும் இடங்களிலும், ஒரு சிரிதும் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டு விடாமல் தோற்றங்களை பெற்றுக்கொண்டு வருவது எப்படி?

இவை அனைத்தும் இயற்கையின் விளையாட்டு என்று நாத்திகர்கள் கருதினால், அது அவர்களின் உரிமை. இவ்வனைத்தையும் திட்டமிட்டு உருவாக்குபவனும், இயக்கிக் கொண்டிருப்பவனும் உறுதிபட எண்ணுபவர்கள் ஆத்;திகர்கள்.

‘இயற்கை’ என்ற இருள் திரைக்குப் பின் பதுங்கிக் கொள்ளும் பரிதாப நிலைக்கு நாத்திகர்கள் தங்களை உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வனைத்தின் இருப்பிற்கும், இயக்கங்களுக்கும் இறைவனே முழு முதற்காரணம் என்று ஆத்திகர்கள் நம்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடுவதில்லை. ஆகவே ‘படைப்பாளன் இன்றி ஒரு பொருள் உருவாக முடியாது’ என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடாகும்.

அதுபோன்றே ‘ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் இன்றி யாரும் எந்த பொருளையும் உருவாக்க மாட்டார்கள்’ என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ‘அல்லாஹ{ காலி(க்)கு குல்லி ஷைஇன்’ – அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் (அல குர்ஆன்: 39: 62)

மண், தண்ணீர், நெறுப்பு, காற்று ஆகிய மூலப்பொருட்களும் அதைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்-கரடு, உலோக தாது வர்க்கங்கள், தாவர வர்க்கங்கள், உயிரினங்கள், வானில் சஞ்சரிக்கும் கோளங்கள், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றனவோ – எப்படி அவைகள் இயங்க வேண்டும் – எவ்வாறான பலாபலன்களை வெளிப்படுத்த வேண்டும் அல்லாஹ் நிர்ணயித்துள்ளானோ அவ்வாறே இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

‘பூமியில் அனைத்தையும் உங்களுக்காகவே படைத்திருக்கிறேன்’ (அல குர்ஆன்: 2:29) என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். இந்த அறிவிப்பின் மூலம் (மனிதர்கள் நீங்கலாக) அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்திவிட்டான்.

இவ்வளவு பிரம்மாண்டமான ஏற்பாட்டை மனிதர்களுக்காக செய்து இருக்கும் அல்லாஹ், மனிதர்களின் படைப்பிற்கு பிரத்தியேக நோக்கம் ஒன்றை முன் வைத்தே படைத்திருக்க வேண்டும் என்பதை மறக்க முடியாது. உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது, உலகியல் பொருட்களை தனது விருப்பப்படி ஆண்டு அனுபவிப்பது என்பது மனித படைப்பின் நோக்கமாக இருக்க முடியாது. ஏனெனில் இவ்வாறான அனுபவிப்புகள் பிற உயிரினங்களின் வாழ்விலும் இடம் பெற்றிருக்கிறது.

மனிதனைப் பொருத்து சற்று மேம்பாடான முறைகளில் இந்த அனுபவிப்புகளை செய்து கொண்டிருக்கிறான் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகிலுள்ள உயிரினங்கள் உயிர வாழ இந்த அனுபவிப்புகள், இந்த தொடர்புகள் கட்டாயம் தேவை என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

மனிதர்கள் அவரவர்கள் தங்களின் வாழ்வியல் தொடர்புகளுக்காக ஏதேனும் ஒரு துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவே செய்கிறார்கள். அந்தத் துறைகளில் வெற்றியையும், இலபாத்தையும் அடைந்து கொள்ளத் திட்டமிட்டு கலையில் எழுந்தது முதல் இரவில் உறக்கத்திற்குச் செல்லும்வரை அதனையே நோக்கமாக்கிக் கொண்டுதான் இயங்குகிறார்கள், செயல்படவும் செய்கிறார்கள்.

தங்களின் உழைப்பின் மூலம் பெற்றிடும்; வெற்றியையும், வருவாயையும் உயிர்வாழ – உலக சுகத்தின் உச்ச நிலை இன்பத்தை அனுபவிக்கவே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘உண்பது உழைப்பதற்காக – உழைப்பது உண்பதற்காக’ என்று இது மீண்டும் மறு சுழற்சியாகவே ஆக்கப்பட்டு விடுகிறது. இது உயிர் வாழ்வதை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான செயல்பாடுகள் மனித ஜீவிதத்தின் பிரத்தியேக அம்சமாக – குறிக்கோளாக இந்த சுழற்சிமுறை செயல்பாடுகள் அமைந்திருக்கவில்லை என்பதை நிதானமாக யோசித்தால் தெளிவாக விளங்கிக்கொண்டுவிடலாம்.

வானம், பூமி அதற்கு இடையில் உள்ள அனைத்துப் பொருட்களின் இருப்பையும், இயக்கத்தையும் அதனைப்படைத்த அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். அதற்கொப்பவே அவ்வனைத்தும் செயல்படுகின்றன. அதில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை.

சூரியன், சந்திரன் போன்ற கோளங்களின் இயக்கங்கள் ஒரே சீராக இருப்பதால் தான் குறிப்பிட்ட நேரத்தையும், மாதங்களையும், வானிலைகளையும் நம்மால் நிர்ணயிக்க முடிகிறது. சூரிய சந்திர கிரகணங்களின் நிகழ்வுகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மால் கணித்துக் கூறவும் முடிகிறது. தாது – தாவர வர்க்கங்களின் பெயர்களை சொன்ன மாத்திரத்தில் அன்று தொட்டு இன்றுவரை அதன் இயல்புகள், தோற்றங்கள், நிறங்கள், ருசிகள், வாசனைகள் என அனைத்தும் அந்தப் பெயர்களுடன் சேர்ந்தே உணர முடிவதற்கெல்லாம் காரணம் அவைகளை என்ன நோக்கத்திற்காக அல்லாஹ் படைத்திருக்கிறானோ அதில் இம்மியளவு கூட மாற்றங்களை வெளிப்படுத்தாமல் அவை நின்றிலங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே ஆகும்.

(இக்கட்டுரை ‘முஸ்லீம் முரசு’ – ஆகஸ்டு 2010 இதழில் வெளியானது)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

86 + = 90

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb