ஒரு பாதிரியாரின் உண்மையை தேடிப்பயணம்! (Road to Makkaah)
யூஸூஃப் ஃபைஜி
அலெக்ஸாந்திரியாவில் இருந்து சூயஸை நோக்கி புறப்பட்ட ரயில் பசுமையான சமவெளியையும் பாசன கால்வாய்களையும் கடந்து சென்று கொண்டிருந்தது. மாலை வேளை: நீலக்கடல் போன்று காட்சி அளித்தது மேகமில்லா வானம்.நைல் நதியின் நீரோ கண்களுக்கு குளுமையைக் கொடுத்து.மிதந்து செல்வது போன்று கால்வாயில் படகுகள் அங்கும் இங்கும் போய் வந்தன.
ஓடும் ரயிலில்இருந்து இந்த இயற்கைக் காட்சிகளை கண்டு களிப்பதே ஒரு தனி இன்பம்தான். இடையிடையே சிறு சிறு கிராமங்கள் தோன்று மறைந்தன. வானளாவிய மினராக்களும் மண்பான்டங்களில் நீரை நிரப்பி வீட்டிற்கு தூக்கிச்சென்ற பெண்களின் எழிலுருவங்களும் கண்ணிற்படுவதற்குள் மறைந்தோடின.
அறுவடையான பருத்தி வயல்கள், தலை நிமிர்ந்தபடி நின்ற கரும்பு தோட்டங்கள், பேரிச்சை மரங்கள், வீடு திரும்பும் உழுவ எருமைகள், அவற்றை ஓட்டிச் செல்லும் அரபிக் குடியானவன்….. எல்லாமே பார்ப்தற்கு புதிதாக தோன்றின.
மணற்பரப்பில் விரிக்கப்பட்டிருந்த தண்டவாளத்தின் மீது ரயிலில் ஆட்டம் அதிகம்.ஆனால் அதைவிட அதிகமாக ஆடிக்கொண்டிருந்தது அந்த ரயிலில் பயணம் செய்த ஐரோப்ப இளைஞன் ஒருவனின் உள்ளம்.
பொழுது சாயும் நேரம். மனோரம்மியமான மாலைக் காட்சிகளில் இலயித்திருந்த இளைஞனுக்கு இதெல்லாம் புதிய அனுபவமே. பிறந்தது முதல் அந்நிய மண்ணில் கால் வைத்திராத அவனுக்கு பாலைவனத்தையும் அதன் மத்தியில் பசுமையையும் அதில் வாழும் பாமர அரபியையும் பார்க்கும் பொழுது எப்படி இருக்கும்?
இருபத்தி ரெண்டே வயது நிரம்பிய அவன் அன்று தான் அரேபிய மண்ணில் கால் வைத்திருக்கிறான். அந்த மக்களே அவனுக்கு புதிராக இருந்தன. அவர்களுடைய வயல்களும் வீடுகளும் விசித்திரமானதாக தோன்றின. உலகில் இப்படியும் ஒரு மக்கள் கூட்டம் இருந்து வருகிறது என்பது இப்பொழுதுதான் அவனுக்கு தெரியவருகிறது. ஒரே ஆச்சரியம்: வைத்த கண் வாங்காது ரயிலின் பலகணி வழியாகப் பார்த்த வண்ணம் இருந்தான்.
ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருந்தான், அந்த இளைஞன்.வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அப்பிரதேச மக்களின் நடையிலுள்ள ஓர் அமைதியும் சாந்தமும், நைல் டெல்டாவின் அணகும் நேரம் தெரியாதப்படிச் செய்தன. சூயஸ் கால்வாய் நிலையத்தை ரயில் அடைந்த பிறகே, வெகு சீக்கிரமாக வந்துவிட்டோமோ என்றொரு நினைப்பு.
அதற்கு ரயில் வடக்கு நோக்கி திரும்பிற்று.அச்சமயம் நிலவு தன் ஒளிக்கதிர்களைப் பரப்ப ஆரம்பித்து விட்டது.மனித நடமாட்டமிருந்தது பாலைவனம்: நிலவொளியோ உள்ளக் கிளர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. வயலில் தேங்கிநிற்கும் நீரில் அவ்வொளி விழுந்து பிரதிபலித்து கண்களைப் பரித்தது.ஓர் ஒட்டகம் அதை நடத்தி செல்லும் பாகன் இரவு வேளையில் இக்காட்சி தோன்றித் தோன்றி மறைந்தது.
செங்கடல் நீர் உப்பு நீர்த்தேக்கத்தின் மூலமாக மத்திய தரைக்கடலில் வந்து கலப்பதை இக்கால்வாய்ப் பகுதியின் வழியே சென்றசமயம் நேரில் கண்ணூற்ற இவ்விளைஞனுக்கு இந்தியப் பெருங்கடஇன் நீரே ஐரோப்பிய மண்ணைத் தொட்டு கொண்டிருப்பது போலத் தோன்றிற்றாம்.
அடுத்ததாக கந்தார நிலையம் வந்தது. பயணிகள் ரயிலை விட்டிறங்கி படகுகளின் மூலம் முக்கிய கால்வாயைக் கடந்தார்கள். பாலஸ்தீன் செல்லும் ரயில் மறுகரையில் காத்து நின்றது. அதில் ஏறத்தான் அந்த ஐரோப்பிய இளைஞன் வந்தான். அந்த ரயில் புறப்பட ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று தெரிந்ததும் நேரத்தைப் போக்க வழி தெரியாமல் நிலையத்தில் அங்கும் இங்கும் சுற்றி வந்தான். பக்கத்தில் ஒரு சந்தை இருக்கிறது என்றும் அங்கு ஸினாய் பகுதியிலிருந்து ஒட்டகக் கூட்டங்கள் வந்திருக்கிறதென்றும் ரயில் நிலைய ஊழியன் ஒருவன் மூலம் அறிந்ததும் அவனை அழைத்துக் கொண்டு அதைப் பார்த்து வரலாமென்று வருத்தப்பட்டான் அந்த இளைஞன்.
ஏராளமான ஒட்டகங்கள் வந்திருந்தன. அவை வளையம் போட்டது போன்று வட்ட வடிவில் படுத்துக் கிடந்தன. இடையிலே மூட்டை முடிச்சுகள் மக்களுக்கும் குறைவில்லை. ஒட்டகத்தை புதுமையாகப் பார்த்தான் இளைஞன். அவை மூச்சு விடுவது எவ்வளவு ஒலியைக் கிளப்புகிறது. காற்றை தனது மூக்கினுள் அது வாங்குவது பெருங்குறட்டை விடுவது போலல்லவா இருக்கிறது. முதல் தமவையாக ஒட்டகத்தின் தும்மலைக் கேட்ட அவன் மூக்கில் கை வைத்துப் பிரம்மித்து நின்றான்.
அவன் வருங்கால வாழ்க்கைக்கும் இந்த ஒட்டகங்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு என்பதை அவன் எப்படி அறிவான்?இவற்றுடன் தன் வாழ்க்கை ஒன்றிப்போய்விடும் என்பதை தெரிந்திருந்தால் இப்படி ஆச்சரியப்பட்டிருக்கவே மாட்டான்.
ரயிலுக்கு நேரமானதும் இருவரும் திரும்பி வந்து ரயிலில் ஏறிக் கொண்டார்கள். ஸினாய் பாலைவெளியை ஊடுருவிக்கொண்டு ரயில் கிளம்பியது. இவனுக்கு எதிரிலுள்ள இருக்கையில் ஓர் அரபி உட்கார்ந்தார். அவர் பழுப்பு நிற நீண்ட மேலங்கி அணிந்திருந்தார். அவரது தலையை சுற்றிலும் ஒரு துணி. கூரிய வாள் ஒன்று அவரது பக்கத்தில் கிடந்தது. இரவு வேகமாக கழிந்து கொண்டிருந்தது. மேலங்கியை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டார் எதிரில் அமர்ந்திருந்த அரபி. ஐரோப்பிய உடையில் இருந்த இளைஞன் குளிரைச் சட்டைச் செய்யவில்லை.
இவ்விதம் இரவு கழிந்தது. பொழுது விடியும் நேரம் சூரியன் கிழக்கில் எழ ஆரம்பித்தது. வலது பக்கம் பார்த்தால் பாலைவனம்: ஒரே மணற்க்கடல் இடது பக்கம் பார்த்தால் பெருங்கடல்: ஒரே நீர்மயம் அதிகாலையில் இவற்றின் கபட்ச்சி கண்ணை கிளறுவதாக இருந்தது. காலைத் தென்றல் முகத்தை வந்து தொடும் போது உள்ளம் கிளுகிளுத்தது.
ஒரு நிலையத்தில் வண்டி நின்றது. தின்பண்டங்களை விற்க்கும் சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்: கூவி அழைத்த வண்ணம் பலகாரங்களை விற்பனை செய்து கொண்டு போனார்கள். எதிரிஇருந்த அரபி எழுந்து ஜன்னல் அருகில் போனார். ரொட்டி ஒன்றை வாங்கினார்.
திரும்பிவந்து உட்கார்ந்து வாயில்வைக்கும் சமயம் தற்செயலாக அவரது பார்வை அந்த ஐரோப்பிய இளைஞன் மீது விழுந்தது.
அவ்வளவுதான் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை.
வாய்திறந்து பேசவுமில்லை. தன் கையிலிருந்த ரொட்டியை இரண்டாகப் பிய்த்தார்.
ஒரு பாதியை அந்த அந்நியனிடம் நீட்டினார்.
அதுவரைக்கும் ஒரு பேச்சுக்கூட அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை.
இளைஞனுக்கு பேராச்சிரியமாக இருந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.
ஆனால் அரபியோ புன்முறுவல் பூத்தவண்ணம் ரொட்டியை நீட்டிய படி நின்றார்.
பின்னர் தபள்ளல் என்றார். என்ன சொன்னார் என்று இளைஞனுக்குப் புரியவில்லை.
எனக்கு இந்த கௌரவத்தை அளிக்கவும் என்பது இதன் பொருள் அவன் எப்படி இதை புரிந்து கொள்ளமுடியும்?அதற்குள் பக்கத்திஇருந்த மற்றொரு அரபி தனக்கு தெரிந்த கொச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.
அவரும் ஒரு வழி போக்கர். உங்களுடைய வழியும் அவருடைய வழியும் ஒன்றாக இருக்கிறது. இப்படி அவர் சொல்கிறார் என்றார் மொழிபெயர்ப்பாளர் ஐரோப்பியனைப் பார்த்து.
இந்த சம்பவம் அந்த யூதனின் … ஆம்:அந்த இளைஞன் ஒரு யூதன்! நினைவிலிருந்து அழியவே இல்லை. இந்த ஐரோப்பியன் எங்கே? அவர் எங்கே? அவன் மதமென்ன? இவன் மதமென்ன? இவனது மதத்தைப் பற்றியோ அல்லது இவனது வாழ்க்கைப் பற்றியோ வேறு விபரங்களைக் கேட்டாரா? இருவருக்கும் இடையில் எவ்வளவு நீண்ட இடைவெளி? ஆனால் ஒரு நிமிடத்தில் இவற்றையெல்லாம் போக்கி விட்டதே இந்த சிறிய சொல்! இந்த நல்லெண்ண சமிக்ஞைகுள்ள மந்திர சக்தியை என்னவென்று சொல்வது! எப்படி மனிதனை இது பிணைத்து விடுகிறது!
ஆம்! இந்த மாதிரி அனுபவங்களை ஐரோப்பிய மண்ணில் அவன் கண்டதில்லை. அனுபவித்ததே இல்லை! தன் வேளையுண்டு என்று அதிலேயே காலத்தைக் கழிக்கும் மக்களுக்கு இம்மாதிரி செயல்களெல்லாம் புதுமைதான்.
காஜா நிலையம் வந்தது. ரொட்டி கொடுத்த அரபி அங்கு இறங்கினார். இறங்கும் பொழுது யூதனுக்கு ஸலாம் சொல்லிவிட்டுப் போனார். அந்த இளைஞன் தொடர்ந்து பயணம் செய்தான். அவன் ஜெருசலமுக்கு போக வேண்டியவன். தாய் மாமா வீட்டிற்கு விருந்திற்காகப் போய் கொண்டிருந்தான்.
தன் வாழ்நாளில் முதன்முதலாக ஓர் அரபு நாட்டில் கால் வைத்ததும் முதல் நாள் ஏற்பட்ட அனுபவம் இது. லியோபால்டு வைஸ் (இதுதான் அந்த இளைஞனின் பெயர்)இப்படி ஒரு அனுபவம் தனக்கு ஏற்படுமென்று நினைக்கவே இல்லை. ஏன் கனவு கூட கண்டதில்லை. ஏனெனில் அரபிகள் பற்றியும் அவர்களின் மார்க்கத்தைப் பற்றியும் இதுவரை தெரிந்திருந்த விஷயங்கள் வேறு விதமானவை. அநாகரிகக் கூட்டம் என்று கருதப்பட்டவர்களிடமிருந்து அன்பு பிறந்த பொழுது அவரால் அதை நம்பவே முடியவில்லை. ஒரே அடியாகத் திகைத்துப் போய்விட்டார்!
பெர்லின் நகரின் வீதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தவருக்கு அராபிய பண்பாடு எப்படி தெரியமுடியும்? கையில் காசில்லாமல் செலவுக்கு திண்டாடிக் கொண்டிருந்த லியோபால்டு வைஸ் அரபிகளைக் கண்டாரா? அல்லது அவர்கள் உபசரிப்பதைத்தான் கண்டாரா? தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சொன்னதையும் எழுதி வைத்திருந்ததையும் தானே தெரிந்து வைத்திருந்தார்: அதுதானே அவருக்கு சாத்தியமானது.
பெர்லின் நகரில் சுற்றிய பொழுது அவர் கையில் காசில்லாமல் இருந்தது உண்மையே என்றாலும், ஒன்று மட்டும் நிறைய இருந்தது. அதுதான் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆசை.
இந்த ஒரே ஆசையால் உந்தப்பட்டுத்தான் அவர் பெர்லின் வந்தார். வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தகப்பனார் பேச்சையும் கேட்காமல் வியன்னா நகரைவிட்டு லியோபால்டு புறப்படும் மொழுது இரண்டு பொருள்கள் அவர் கைவசம் இருந்தன. ஒன்று எழுத்தாளராக வேண்டுமென்ற நினைப்பு, மற்றொன்று வைர மோதிரம். இது அவருடைய தாயாருடையது ஓராண்டுக்கு முன்பு அந்த அம்மாள் இறக்கும் போது தன் அன்பு மகனுக்கு இதை அன்பாகக் கொடுத்துச் சென்றார்.