யாசர் அரஃபாத்
குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட பார்வைக்கு
எச்சில் துப்பி எதிர்ப்பேன்!
அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை காட்டி வந்தால்
முழுக்கோபம் எதற்கு!
மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை பூட்டிவைக்கிறாய் எதற்கு!
போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!
மானம் காக்க மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன் ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்; தப்பிப்பதற்கு!
யாசர் அரஃபாத் http://itzyasa.blogspot.com