”அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும், வரும் பொது (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் பொது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்பு தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்ப்பவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 30 : 1,2,3)
”அல்லாஹ்வை அன்றி பாதுகாவலர்களை ஏற்ப்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலகீனமானது (அதை) அவர்கள் அறியக் கூடாதா? அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்”. (அல்குர் ஆன் 29:41,42)
”கொசுவையோ, அதைவிட அற்பமானதையோ உதாரணமாக கூற அல்லாஹ் வெட்கப் படமாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை” என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரனத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான் இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. (அல் குர்ஆன் 2:26)
“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (அல் குர்ஆன் 13:11)
”அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான் எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள். (அல் குர்ஆன் 2:22)
“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் அல்குர் ஆன் சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்ச்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது” எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன் 2:25)
”அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்” (அல் குர்ஆன் 6:88)
”நபியே கூறுவிராக” எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக“. (அல் குர்ஆன் 6:162,163)