Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாபர் மசூதி தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது?

Posted on September 25, 2010 by admin

சிராஜ் அப்துல்லாஹ்

மனிதர்களின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது!

200 ஆண்டுகாலமாக அடிமைபட்டு கிடந்த நம் தாய்நாடான இந்தியாவில் ஆங்கிலேய அராஜக அரசாங்கம் கொடுத்த பல பெரிய அரசாங்க பதவிகளைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்திய நாட்டு விடுதலைக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து பின்னிப்பினைந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் தேடிக்கொடுத்த நல்ல சமுதாயம் நம் முஸ்லிம் சமுதாயம்.

 அன்றைய சூழ்நிலையில் நம் சமுதாயத்தை எவரும் தீவிரவாதி என்று பச்சை குத்தவில்லை!

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டு, தரம்தாழத்தப்பட்டு ஒரு சில இடங்களில் இறைவனைக்கூட தொழ இயலாத வண்ணம் தடுக்கப்பட்டோம் இறுதியாக இந்துக்கள் அல்ல; மாறாக இந்துசகோதரர்களில் ஒளிந்து கொண்டுள்ள சில கருப்பு ஆடுகளால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய பாபர் மசூதியை இழந்ந்தோம்.

அதனை மீண்டும் பெற தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது.முஸ்லீம்கள்


இந்திய நாட்டு சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயமாகிய நமக்கு இன்றைய தினம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது மஹ்ஷர்வரை பொறுத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுமா? பொறுத்திருப்போம்!

பாபர் மசூதி தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு அணுகுவது?

பாபர் மசூதி தீர்ப்பு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கு மன வேதனையும் இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் முஸ்லீம்களுக்கு மன வேதனையும் ஏற்படும் இது இனப் பிரிவினைக்காக வகுக்கப்பட்ட 50 ஆண்டுகால பொன்விழா சூழ்ச்சி மட்டுமல்லாது வரலாற்று சதியுமாகும்.

இந்த தீர்ப்பு 2010ல் மட்டுமல்ல 2050ல் வெளியானாலும் இந்திய பாரம்பரியமிக்க இந்துக்கள் இஸ்லாமியர்கள் இனப் பிரிவினைக்கு பாதகமான சூழலே நிழவும். (அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!)

1) தீர்ப்பு முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் முஸ்லீம்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால் நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும்.

ஆரவாரப்படக்கூடாது இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிராக உள்ளவர்களுக்கு மனவேதனை ஏற்படும்.

மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்! எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறலாம்!

2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது ஏனெனில் நாம் முஸ்லீம்கள். அதாவது அமைதியை விரும்புபவர்கள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும்பட்சத்தில் நாம் கீழ்கண்டவாறு நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்! மேலும் கீழ்கண்டவாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்குபவன் மனிதன்; இறைவனல்ல!

அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோரில் உயர்ந்தவன்! அவன் மஹ்ஷர் எனும் மறுமைநாளில் நமக்கு இழைக்கப்படட அநீதிக்கு பகரமாக நன்மையை கொடுப்பான்! மேற்கண்ட இந்த இரண்டு நம்பிக்கைகளையும் கீழ்க்கண்ட ஒரு நபிமொழியின் மூலம் உணர இயலும்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)

மேற்கண்ட நபிமொழியை உணர்ந்த நாம் இனி கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் சுவையையும் உணர வேண்டும்முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)

இங்கு பாபர் மசூதிக்கு தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம் சமுதாயத்திற்கு நன்மையை தேடிக்கொள்ளும் விதமாக அமைதிகாக்க வேண்டும் அவ்வாறு அமைதி காப்பதால் மறுமையில் இவர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு) எதிராக அல்லாஹ்வுக்கு சாட்சி கூறுபவர்களாக நாம் மாறலாம்!

இன்று இவர்கள் நம்மை வென்றுவிடலாம் ஆனால் மறுமையில் நாம் நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்விடம் எடுத்துக்கூறி அல்லாஹ்வுக்காகவே நாம் சாட்சிகளாக மாறிவிடலாம்!

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய மாபெரும் பொறுமைதாயிப் நகரத்தில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்ட்டார்கள் உச்சகட்ட வேதனைக்கு என்று கூறும் அளவுக்கு சொல்லொனா துயரங்களை அனுபவித்தார்கள் அப்படிப்பட்ட நேரத்தில் கூட ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரின் முன் தோன்றி தாயிப் நகரத்தை இருமலைகளுக்கிடையில் வைத்து நசுக்கிவிடவா என்று கேட்க நபிகள் பெருமனாரோ தாயிப் நகர மக்கள் என்றைக்காவது ஒருநாள் மனம் திருந்தலாம் என்று எண்ணி அந்நரக மக்களின் மீது கருணை காட்டினார்கள் மன்னித்து விட்டார்கள் பின்னர் மக்கா மாநகரை அடைந்தார்கள்.

சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே அன்று நம்முடைய அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு எதிராக கொடுமை இழைத்த சமுதாயத்தின் மீது காட்டியை பொறுமையை இன்று முஸ்லிம்களாகிய நாம் இந்துக்கள் மீது காட்டி பாபர் மசூதியின் தீர்ப்பின் போது அமைதிகாக்கலாமே! என்றைக்காவது ஒருநாள் தாங்கள் பாபர் மசூதியை இடித்தது தவறுதான் என்று உணர்ந்து இவர்கள் இஸ்லாத்தை தழுவலாமே இதனால் அல்லாஹ் நமக்கு ஒரு நன்மையை முற்படுத்தி வைக்கலாமே!

அல்லாஹ்வின் மீது ஈமான் வைத்தவன் என்றுமே துன்பப்பட மாட்டான் அதுபோலத்தான் இந்த தீர்ப்பும்!

1) தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் நமக்கு நியாயம் கிடைத்த மகிழ்ச்சி கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்

2) தீர்ப்பு இந்துக்களுக்க சாதகமாக இருக்கும் பட்சத்தில் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்) தீர்ப்பளிப்பவன் சாதாரண மனிதன்தான் அல்லாஹ் கிடையாது என்ற பெறுமிதம் கிடைக்கும்! இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதானே! எனவே முஸ்லிம்களாகிய நாம் அமைதி விரும்பிகள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இது ஓர் உண்ணதமான வாய்ப்பு இதை நலுவவிடாதீர்கள். பாபர் மசூதி தீர்ப்பு நமக்கு பாதகமாக அமைந்துவிட்டதே என்ற எண்ணி பொங்கி எழுந்து உங்கள் குடும்பத்தை நாசப்படுத்திக்கொள்ளாதீர்கள் நாம் பொங்கி எழ வேண்டும் அதனால் சிறை சென்று குடும்பத்தாரை நடுத்தெருவில் நிற்க வைக்க வேண்டும் என்று கருப்பு ஆடுகள் சூழ்ச்சிகள் செய்யலாம் எனவே நாம் உயிர் உள்ள வரை பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டலாம் உயிருடன் இருக்கும் போது நீதி கிடைக்கவில்லை எனில் மரணித்தபிறகாவது மஹ்ஷரில் (மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில்) அல்லாஹ்விடம் நீதியை பெறலாம்!

அல்லாஹ் மன அமைதியை நம் இந்திய நாட்டு முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் கிருத்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினரின் மீதும் பொழிவானாக!

என் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே இந்த இக்கட்டான பாபர் மசூதி தீர்ப்புநாளில் இனக்கலவரத்தை தூண்டும் சக்திகளின் மாய வலையில் சிக்கி நம் சகோதரத்துவத்தை சீர்கெடுத்து நம்மிடையே பகைமையை வளர்த்துக் கொள்வதைவிட தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக!

சிந்திக்க படைக்கப்பட்ட சமுதாயமே இதோ சிந்திக்க சில வசனங்கள்

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்“ (அருள்மறை குர்ஆன் 3:200)

வேறோர் இடத்தில், ‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)

பொறுமைக்கு இலக்கணம் முஸ்லீம்களே என்பதை இந்த உலகிற்கு உணர்த்த இதுவே சிறந்த தருணம்! தவறவிடாதீர்கள்!

இஸ்லாத்தின் கோட்பாடுகளை தவறிவிட்டு விடாதீர்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb