Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காஸா (GAZA) நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

Posted on September 25, 2010 by admin

ஹமாஸின் ராணுவப்பிரிவு தளபதி கொலை! செய்தி இறுதியில்.

ரஃபா: நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.

காஸா–எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.

ஆனால் காஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது.

இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.

இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும்.

அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது.

ஆனால் அரசியல் நிர்பந்தம் மற்றும் சர்வதேச அளவிலான காஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது.

அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸா மக்களின் கருத்து.

இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை.

ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மொஸாத்–சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

இந்நேரத்தில் வெளியான இந்நேர செய்தி:

பாலஸ்தீன் மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹமாஸின் ராணுவப்பிரிவு தளபதி கொலை செய்யப்பட்டார்.

ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்–கஸ்ஸாம் –ன் தளபதி 37 வயதான லியாத் ஆசாத் அபு ஸில்பயிஹ் இஸ்ரேலிய படைகளால் மிக அருகில் வைத்து மூன்று முறை சுடப்பட்டார் பின்னர் மருத்துவ உதவியும் தாமதப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவத்தைப் பற்றி லியாத் ஆசாத்தின் சகோதரர் முஹம்மத் தெரிவிக்கையில் ஏராளமான இராணுவ ஊர்திகள் 17.09.2010 அதிகாலை 2 மணியளவில் முகாமிற்குள் நுழைந்து முஹம்மதை ஒரு மனித கேடயமாக பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தியிருக்கின்றன,

இறுதியில் லியாதின் படுக்கையறை கதவை உடைத்து சென்று, படுக்கையில் இருக்கும் போதே கழுத்தில் ஒருமுறையும் நெஞ்சில் இருமுறையுமாக, மூன்று முறை சுடப்பட்டுள்ளார், பின்னர் அவரது உடலை முழுதும் சோதனையிட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்சம்பவத்தின் போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினரை சந்திக்க மேற்கு கரையில் ஜெனின் என்ற ஊருக்கு சென்றிருந்தனர்.

மேலும் இஸ்ரேலிய படைகள் முகாமிலிருந்து 15 இக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளது இதில் ஹமாஸ் உறப்பினர்களும், ஆதரவாளர்களும் இருப்பதாக பாலஸ்தீன் தெரிவிகின்றது இதுபற்றி இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறுகையில், இராணுவம் தீவிரவாத தொடர்புடையவர்களை கைது செய்யவே சென்றது, அனால் லியாத் இஸ்ரேலிய வீரர்களை தாக்கும் நோக்கத்தில் அவர்களை நோக்கி வந்துள்ளார், தங்களின் உருக்கு ஆபத்தான நிலையிலேயே தர்க்காப்பிர்காகத்தான் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதாக தெரிவித்தார்

பாலஸ்தீன் பிரதமர் சலம் பாய்யாத் இப்படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளார் அவர் செய்தியாளர்களிடம் “இப்படுகொலை ஆபத்தான சூழ்நிலையை அதிகரித்துள்ளது, இன்னும் ஏற்கனவே இழுபறியில் இருக்கும் அமைதிப்பேச்சு வார்த்தையின் நம்பகத்தன்மையை குழிதோண்டி புதைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் இப்படுகொலையில் பாலஸ்தீனிய பாதுகாப்பு படையினர் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உதவி செய்தனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது, அவர் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அநியாயக்கார ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தொடந்து ரத்தம் சிந்துவோம் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் செய்திப்பொருப்பாளர் ஸாலேஹ் அல் பர்துவில் இந்த படுகொலை பேச்சுவார்த்தையை ஒட்டியே நடத்தப்படுள்ளது, இஸ்ரேல் பாலஸ்தீனுக்கான பேச்சுவார்த்தை பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார், பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஏற்படப்போகும் விளைவுகளை திசைதிருப்பவே இஸ்ரேல் இந்த கொலைக்கான சதிசெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் வாஷிங்டனின் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை, இதுவரை எந்த முடிவையும் எட்டவில்லை, இம்மாத இறுதியில் முடியப்போகும் எல்லைகளின் வரையறையை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்கமுடியாது என்றும் இஸ்ரேல் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றது, இஸ்ரேலிய பிரதமர் இது சம்பந்தமாக தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்

இஸ்ரேலின் 7 முக்கிய காபினெட் அமைச்சர்கள் கொண்ட குழு இந்த வாரம் கூடி எல்லைகளை குறித்த ஒப்பந்தத்தை நீடிக்க மறுக்கும் முடிவை எடுத்துள்ளது என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான இஸ்ரேலிய நாளிதழ் இஸ்ரேல் ஹயோம் கூறியுள்ளது. மேலும் இந்த முடிவு வளைகுடா பகுதியில் அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும், தற்போது வளைகுடாவில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்ட்டனிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.

நன்றி: இந்நேரம்

  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

57 + = 67

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb