ஐ.நா. சபை: நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், ”2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்–கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.
ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.
அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.
இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.
தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.
அஹமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய அஹமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.
அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.
சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.
சில மாதங்களுக்கு முன்பாக ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் அமெரிக்காவை ஒரு அணுஆயுத கிரிமினல் நாடு” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் மீது போர் தொடுக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் அகமது நிஜாம் எச்சரித்திருந்தார். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டதின் பலனை அமெரிக்கா அனுபவித்து வருவதாகவும் அஹமதிநிஜாத் தெரிவித்திருந்தார்..
”உலகம் முழுவதும் குழப்பங்களை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி ஆயூத வியாபாரம் செய்யும் அமெரிக்க ஈரானை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அமெரிக்கா என்ற தனி ஒரு நாடு உலக மக்களை கொன்று குவித்தது போல் உலகில் ஹிட்லர் முதற்கொண்டு எந்த சர்வாதிகாரியும் செய்யவில்லை.
ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ராயில் என்ற கள்ள குழந்தை மூலம் பாலஸ்தீன, பாகிஸ்தானுக்கு ஆயூதம் கொடுத்து இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, ஸ்ரீ லங்காவில் புலிகளுக்கு உதவி ராஜீவ் காந்தி கொலை, தங்களுக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களை கொல்வதற்கு பிளக் வாட்டர் கூலிப்படை, தங்களது சி.ஐ.எ. உளவுபிரிவின் மூலம் உலகம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்துவது, வடக்கு கொரியா தெற்கு கொரியா பிரச்னை, கியூபாவில் பிரச்னை, உலகம் முழுவது உள்ள நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது.
தனது ராணுவ தளத்தை நிறுவ இடம்தாராத நாட்டின் மீது தீவிரவாதிகள் இருக்கிறார்கள் பேரழிவு ஆயூதம் இருக்கிறது என்று போர்தொடுப்பது. இல்லை பக்கத்துக்கு நாட்டுக்கு ஆயூதம் கொடுத்து சண்டையை மூட்டிவிட்டு சமாதானம் செய்வது போல்வந்து தனது ராணுவ தளத்தை நிறுவுவது , உலகில் ஏதாவது பெரிய இயற்க்கை பேரழிவுகள் ஏற்ப்பட்டால் அதற்க்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று தனது ராணுவத்தை அனுப்புவது உதவி பணிகள் முடிந்தது அங்கு உள்ளநாட்டு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி தனது ராணுவத்தை அங்கே நிறுத்துவது.இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
தன்னை கண்டு இந்த உலகம் பயப்பட வேண்டும் தான் தான் இந்த உலகின் நம்பர் ஒன் வல்லரசாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா உலகில் ஏற்படுத்திய அழிவுகள் தான் எத்தனை? எத்தனை? கொன்ற உயிர்கள் தான் எத்தனை? எத்தனை? ஹிரோஷிமா, நாகஷாகியில் போட்ட அணுகுண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லபட்டர்கள். அதன் பாதிப்புகள் இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் ஊனமாக மற்றும் புற்றுநோய் இப்படியாக தொடர்கிறது.
அடுத்து வியட்நாம் 35 வருட போரில் அமெரிக்கா பயன்படுத்திய பேரழிவு ஆயூதங்கள் மூலம் அந்த நாடு உருத்தெரியாமல் போகியது. அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இல் விதவிதமான குண்டுகளை பயன்படுத்தி லட்ச கணக்கான மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தது. ஈராக் இல் பொருளாதார தடை ஏற்படுத்தி அத்தியாவாசிய மருந்து பொருட்கள் கிடைக்காமல் 1 .5 லட்சம் குழந்தைகள் செத்துமடிந்தது.
முன்பு ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆயிரகணக்கான மக்களை கொன்றது இமாம் கொமைனி ஒரு இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தி இவர்களை விரட்டியது இப்ப திரும்ப ஈரானின் வளர்ச்சி பிடிக்காமல் திரும்பவும் இரானை அழிக்க முற்படுவது. உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இது போல் ஆக்கிரமிப்புகளும், அந்நிய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க நடத்தும் போர்களும் தான் காரணம். அமெரிக்கா தனது அயல்நாட்டு கொள்கையில் மாற்றம் கொண்டுவருமா? தனது தீவிரவாத போக்கை மாற்றி உலகில் அமைதியை ஏற்படுத்துமா? உலகம் எதிர்பார்கிறது. என்று தனியுமோ இவர்கள் இரத்ததாகம். என்று உலகம் அமைதி பெறுமோ!”