முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.
ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.
முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.
0 முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.
0 ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.
0 மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.
0 வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதேநிலைதான்.
0 இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.
0 முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
0 அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.
0 இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.
0 முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.
எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’
என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.
நன்றி : மீள்பார்வை