Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நபித்தோழர்கள் வாழ்வும், நமது நிலையும்!

Posted on September 21, 2010 by admin

ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர், அக்கட்சியில் இருக்கும்வரை அக்கட்சியின் தலைவரை வானளாவ புகழ்வதும், அதேபோன்று அந்த தலைவரும் இவரை ‘என்னுடய போர்வாள்’ என்று புகழ்மாலை சூட்டுவதும் பிற்காலத்தில் இவ்விருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரியும்போது, தலைவர் பிரிந்தவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்யும்வகையில் வசைமாரி பொழிவதும், பிரிந்தவர் தலைவர்மீது வசைமாரி பொழிவதும் அரசியல் அரங்கில் நாம் அன்றாடம் காணும் அலங்கோலங்கள்.

துரதிஷ்டவசமாக, முஸ்லீம் அமைப்புகள்/இயக்கங்களில் இது போன்ற தலைவர் – முக்கியஸ்தர் பிரிவின்போது அரசியல்வாதிகளையும் தாண்டி சேற்றைவாரி பூசிக்கொள்வதை பார்க்கிறோம்.

மனிதனுக்கு கோபம் என்ற ஒன்று இருக்கும்வரை மனஸ்தாபங்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுவது இயற்கையே! ஆனால் நமது சமுதாயத்தில் சகோதரர்களுக்குள் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்கள் ஜென்மப்பகை போல தொடர்வதைப் பார்க்கிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற நமது அறிஞர்களுக்கு மத்தியில் சில பிளவுகள் ஏற்பட்டது.

பிரிந்த அந்த அறிஞர்களில் ஒருவர் மற்றவரை சந்தித்து சலாம் கூறியதுண்டா?

உங்களுக்குள் பினங்கிக்கொன்டால் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருக்கவேண்டாம் என்ற நபிமொழி இவர்களுக்கு பொருந்தாதா?


ஆனால், அல்லாஹ்வின் தூதரிடம் பாடம்பயின்ற சத்திய சகாபாக்கள் தமக்குள் பிணக்கு வரும்போது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை பார்ப்போம்;

அபுத் தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்:

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள்.

உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்” என்று கூறினார்கள்.

அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு (நபி – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, ‘‘இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்” என்று கூறினார்கள். உடனே, நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள்.

பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு (அபூ பக்ர் – ரளியல்லாஹு அன்ஹு – அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்குச் சென்று, ‘‘அங்கே அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு இருக்கிறார்களா?’‘ என்று கேட்க வீட்டார்,

‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள்.

எனவே, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று.

எனவே, அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, ‘‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாம் விட்டேன்.” என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். ‘‘பொய் சொல்கிறீர்’‘ என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, ‘‘நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’‘ என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?’‘ என்று இரண்டு முறை கூறினார்கள்.

அதன் பிறகு அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. (நூல்: புகாரி,எண் 3661)

இந்த ஹதீஸ்சில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் சில;

0 இருவரும் சாதாரண நபர்கள் அல்ல. சொர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்கள். சொர்க்கம் உறுதி செய்யப்பட்டவர்கள்.

0 சண்டையிட்டபின் ‘அவன் வீட்டிலையா எனக்கு சாப்பாடு’ என்று திமிராக இருக்காமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க ஒருவரை ஒருவர் தேடி வருதல்.  

0 உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு மன்னிப்பு கேட்டும், உமர் ரளியல்லாஹு அன்ஹு மன்னிக்க மறுத்த பின்னும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மன்னிப்பைவேண்டுவோம் என்று நபியவர்களை தேடிச்சென்ற நற்பண்பு. அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹுமன்னிப்பு கேட்டும் நாம் கோபத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என வருத்தி அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தேடிச்சென்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இறைவனின் திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த மனிதமேதைகள் எங்கே! தவ்ஹீத், தவ்ஹீத் என்று வாய் கிழிய பேசிக்கொண்டு அற்ப பிரச்சினைக்காக ஆயிரம் கூறாக பிரிந்து அதற்காகவே வாழும் நாம் எங்கே! சிந்திப்போமா?

அது சரி! நாமதான் சகாபக்களை பின்பற்றவேண்டியதில்லையே! அப்புறம் அபுபக்கராவது- உமராவது என்கிறீர்களா?

جَزَاكَ اللَّهُ خَيْرًا முகவை எஸ்.அப்பாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb