சகோதரர்களே!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காசிமி அவர்களின் 10-செப் ஜும்ஆ உரையின் மூலம், தமிழகத்து அணைத்து பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு இமாம் அவர்கள் கொடுத்துள்ள செய்தி என்னவென்றால்,
தற்போதுள்ள தடைகளை நீக்கி,
தொப்பி போட்டவர்கள், தொப்பி போடாதவர்கள்,
நெஞ்சில் கை கட்டுபவர்கள் வயிற்றில் கை கட்டுபவர்கள்,
விரல் அசைப்பவர்கள், விரல்நீட்டுபவர்கள் என்று யாதொரு பாகுபாடின்றி
அனைவரையும் எல்லா பள்ளிவாசலிலும் தொழுக அனுமதிப்பது பள்ளிதலைவர் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்பு.
இது நடைமுறை செய்வதன் மூலம் தமிழகத்து முஸ்லிம்களுக்கிடையில் நிலவிலிருக்கும் பிரிவு நீங்கி, பரஸ்பரத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமையும்.’ என்பதாகும்.
அவர்களின் இக்கருத்தை முழுவதுமாக வரவேற்கின்றோம்.
தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், மற்றும் ஷஹீதை விட முக்கியமான ஒரு செயலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஒற்றுமை”யை வலியுறுத்தியிருக்கும்போது தொழுகையில் உள்ள மசாயில்களைக்குறித்து கருத்து வேறுபாடு கொண்டு ஒருவரையொருவர் விமரிசித்து, வெறுத்து, பிளவு பட்டு, சுன்னத்துக்கு மாற்றமாக நடந்துகொள்வதை இனிமேலாவது முஸ்லிம்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆலிம்கள்!
ஆம்! ஆலிம்கள்தான் இந்த சமுதாயத்தை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோன்று இந்த சமுதாயத்தை வழிகெடுப்பவர்களும் அவர்களில் சிலராகவே இருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமான உண்மை.
உண்மையான இறையச்சம் உள்ள எவரும் நிச்சயமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
adm. www.nidur.info