Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இத்தனை தலைவலிகளா?

Posted on September 18, 2010 by admin

அடிக்கடி மாத்திரை விழுங்காதீங்க : தலைவலி – இது இல்லாதவர்கள் வெகு குறைவு தான். அப்படி தலைவலி வந்தால், மாத்திரை விழுங்காதவர்கள் குறைவு; ஆண்டுக்கணக்கில் மாத்திரை விழுங்குவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

உடல் கோளாறினால் ஏற்படும் தலைவலி முதல், டென்ஷன் மூலம் வரும் தலைவலி வரை பல தலைவலிகள் உள்ளன. இதைப் போக்கிக்கொள்ள இரண்டு வழிகள்; சாதாரண தலைவலி என்றால் அடிக்கடி வராது; அடிக்கடி வரும் தலைவலி என்றால் டாக்டரிடம் காட்டிவிடுவதே நல்லது. அசட் டையாக இருந்தால், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவது உறுதி.

என்ன காரணம்? : தலைவலி வரக்காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. மூளையை சுற்றிய நரம்புகளில் ஒரு வித எரிச்சல் மற்றும் தலை, கழுத்தை சுற்றிய நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்பு தான் தலைவலி. மூளையில் ரத்தக்குழாயில் விரிவு ஏற்படுவது தான் “மைக்ரேன்’ தலைவலிக்கு முக்கிய காரணம். ஒற்றைத் தலைவலியான இது வந்தால் காலம் பூராவும் நீடிக்கும்.

எத்தனை வகைகள்? : தலைவலிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று; உடலில் ஏதாவது ஒரு கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி. இரண்டாவது; மற்ற கோளாறு காரணமாக இல்லாமல், நேரடியாக ஏற்படும் தலைவலிகள்.

மைக்ரேன், டென்ஷன் உட் பட பல காரணங்களால் அடிக்கடி வரும் தலைவலியை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு வெறும் மாத்திரை போதாது. மூளையில் ஏற்படும் அழுத்தம், நரம்புகளில் தளர்வு போன்ற காரணங்களால் நேரடியாக ஏற்படும் தலைவலிகளால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படாது.

மைக்ரேன் வகை : மைக்ரேன் தலைவலியில் இரண்டு வகை உண்டு. ஒன்று; தலைமுழுக்க வலிக்கும்; கண் பார்வை மங்கலாக இருக்கும். கண்களையே திறக்க முடியாது. தலை சுற்றும். இது, வாரத்துக்கு மூன்று முறை வரும்; மாதத்தக்கும் தொடர்ந்தும் இருக்கும். ஜலதோஷம், வாந்தி , மயக்கம் சேர்ந்து இந்த தலைவலி வரும். டாக்டர் ஆலோசனைப்படி, வலி நிவாரணியை விழுங்கலாம்.

ஒற்றைத் தலைவலி : மைக்ரேனின் இன்னொரு வகை இது. சிலருக்கு சில வகை உணவு அலர்ஜியாக இருக்கும். ஒவ்வாமை காரணமாக அவர்களுக்கு உணவு சாப்பிட்டால் மட்டுமல்ல, சில உணவுகளை முகர்ந்தாலே இந்த தலைவலி வந்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வரும். முதல் வகை மைக்ரேன் போலவே இதற்கும் டாக்டரிடம் மருந்து வாங்கி சாப்பிட வேண் டும். சொந்தமாக வாங்கி சாப்பிடக்கூடாது.

டென்ஷன் தலைவலி : தசைப்பிடிப்பால் ஏற்படும் தலைவலி இது. தலை, கழுத்து பகுதிகளில் உள்ள தசைகள் பிடிப்பால் தான் ஏற்படுகிறது. இரண்டு பக்கமும் வலிக்கும்; மன அழுத்தம், குறிப் பிட்ட மருந்துகள் சாப்பிடுவது, சோர்வு போன்ற காரணங்களால் இந்த தலைவலி ஏற்படுகிறது.

கிளஸ்டர் தலைவலி : மைக்ரேன் போலவே வரும் தலைவலி இது. ஆண்களுக்கு தான் அதிகம் வரும். தலையில், கண்ணை சுற்றி ஒரு பக்கம் மட்டும் வலிக்கும். தினமும் சிலருக்கு வரும்; சிலருக்கு இரண்டு, மூன்று மணி நேரம் நீடிக்கும். சிலருக்கு வாந்தியும் வரும். இந்த தலைவலி வரும் போது, கண் சிவந்துவிடும். சிலருக்கு கண்ணில் கண்ணீர் வந்தபடி இருக்கும். மூக்கு சிவக்கும்; வீக்கமும் ஏற்படும்.

ரீபவுண்ட் தலைவலி : வலி நிவாரணிகளை அதிகம் விழுங்குவோருக்கு தான் இந்த தலைவலி வரும். தலைவலிக்காகவே அடிக்கடி மாத்திரைகளை விழுங்கும் பழக்கம் இருந்தால், அதுவே தலைவலியை தூண்டிவிடும். ஒரு முறை வந்த தலைவலி நிற்பது போல தோன்றும். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தலைவலி ஆரம்பமாகும். இதுதான் “ரீபவுண்ட்’ தலைவலி.

சைனஸ் தலைவலி : சைனஸ் காரணமாக மூக்கு மட்டும் பாதிப்பதில்லை; தலைவலியும் வரும். மூக்கில் இருந்து சளி ஒழுகுவதுடன், தலையை முன்பக்கமாக சாய்த்தால் மிக அதிகமாக வலிக்கும். மூக்கு அடைப்பை சரி செய்ய மாத்திரை விழுங்கலாம்; ஸ்ப்ரே , ட்ராப் விடலாம். அலர்ஜி காரணமாகவும் இந்த தலைவலி ஏற்படும். சுவாசக்குழாயின் மேல் பக்கம் ஏற்படும் தொற்றுக்கிருமிகளால் மூக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தலைவலியும் ஆரம்பிக்கும்.

தலைகாயத்தால் : தலையில் எப்போதோ அடிபட்டிருக்கும். அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டிருந்தால் காரணமில்லாமல் திடீரென தலைவலி ஏற்படும். அது நீடித்தும் நிற்கும். அப்போது விழித்துக்கொள்வது நல்லது. கண்பார்வை மங்கலாகும்; காது மந்தமாகும்; உடனே டாக்டரிடம் போவது நல்லது.

ஐஸ்கிரீம் தலைவலி : ஐஸ்கிரீம் தலைவலி தெரியுமா? ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் போன்ற மிகுந்த குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் ஏற்படும் தலைவலி இது. ஜலதோஷதத்துடன் ஏற்படுவதால் சற்று எரிச் சலை ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு, கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருப்பதாலும் தலைவலி வரும்.

அறிகுறி என்ன? : தலைவலிகளுக்கு அறிகுறி என்பது அடிக்கடி வருகிறதா, சாதாரணமாக சமாளிக்கும் வகையில் ஏற்பட் டதா என்பது தான். அடிக்கடி வந்தால் உஷாராகி விடுவது தான் சரி. அலட்சியப்படுத்தவே கூடாது. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எடுத்தால் தெரிந்துவிடும்.

source: http://senthilvayal.wordpress.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

53 + = 59

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb