கள்ளக் கணவனின் நெருக்கமும்! கட்டிய கணவனின் மரணமும்!…
சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாடு தான் ஓரளவு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அந்த நாட்டில் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஈரான் ஷரியத் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. அதுவும் பொது மக்கள் முன்னிலையில் கல்லால் எரிந்து கொள்ளப்படவேண்டும் என்று.
இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் நாடுகளும், அதன் அபிமானிகளும், எதற்க்கெடுத்தாலும் மனித உரிமை பேசும் அதன் ஆர்வலர்களும், இந்த தண்டனையை விமர்சனம் செய்தனர். அது மட்டுமல்லாமல் இந்த தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என்று கொக்கரித்தனர். இது தொடர்பான ஒரு செய்தி நாளிதழ் ஒன்றில் 07 -09 -2010 அன்று வெளியானது.
அதில் “உலகநாடுகள் கண்டித்த, இந்த செயலை ரமளான் மாதத்தில் அந்த நாடு நிறைவேற்ற இருந்தது. ரமளான் மாதத்தில் இப்படி செய்வதற்கு அரபு நாடுகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பரபரப்பான தகவலாக பரப்பியது அதன் உண்மை நிலையை அறிந்துக்கொண்டு விஷயத்திற்கு வருவோம்.
ஈரானை சார்ந்த அஷ்டியானி என்ற பெண்ணுக்கு, வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவரும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து இவருடைய கணவரை கொடூராமான முறையில் கொலை செய்துள்ளனர். எப்படி தெரியுமா? இவருடைய கணவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவருடைய இரண்டு கால்களிலும் மின்சார வயர்க்ளை சுற்றி மின்சாரத்தை செலுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இது நடந்தது 2006 ஆம் ஆண்டு.
அப்பொழுதே இந்த பெண்ணின் கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவிட்டது. இந்த பெண்ணிற்க்கும் அப்பொழுதே (4 வருடங்களுக்கு முன்பு) மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவருடைய தண்டனை தள்ளி வைக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு இப்போது 2010 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இந்த உண்மையை மீடியாக்கள் மறைத்து, அப்பெண் செய்த கொடூரத்தை மறைத்து, கொடுத்த தண்டனையை மட்டும் கொடூரமானதாக சித்தரிக்கின்றனர்.
99 கசையடி :
அடுத்து முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக இந்த பெண்னுக்கு 99 கசையடி கொடுக்கப்பட்டதாகவும், இதை அவரோடு சிறையிலிருந்து தண்டனை அனுபவித்து, வெளியில் வந்த ஒரு பெண் உறுதி செய்ததாகவும் அந்த பெண்ணின் (அஷ்டியானி) வழ்க்கறிஞர் கூறியதாக கூடுதலாக செய்தியை பரப்பியது.
மேலும் இதனால் ஈரானில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை காரணம், இன்னொரு வழ்க்கறிஞர் கசையடி கொடுக்கப்பட்டது சரியாக தெரியலை என்று கூறியுள்ளார் என்ற தகவலையும் அதே பத்திரிக்கை கூறுகிறது. எனவே முகத்தை காட்டியதற்காக 99 கசையடி கொடுத்தது சரியா? தவறா? என்று, கருத்து சொல்லமுடியாது. ஆனால் முகம் தெரியும் வகையில் அப்பெண்ணின் புகைப்படம் வெளியானது மட்டும் உண்மை.
காட்டு மிராண்டித்தனமான சட்டம்:
செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள் எதற்காக தண்டனை வழங்கப்பட்டது? என்ற அதன் உண்மை நிலையையும் சேர்த்தே வெளியிட்டு இருந்தால், இந்த இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரியாக இருந்தாலும், அதை பார்ப்பவர்களின் உள்ளம்,தண்டனை வழங்கியது சரிதான் என்றே சொல்லும். நடுநிலையாளர்களின் உள்ளத்தில் இஸ்லாத்திற்கு சாதகமாக இப்படிப்பட்ட எண்ணங்கள் உதித்து விடக்கூடாது என்பதற்காக தான் பாதியை மறைத்து, பாதியை சொல்லும் தந்திரத்தை கையாளுகின்றன ஊடகங்கள்.
சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்ட விஷமிகளுக்கு இந்தமாதிரியான மொட்டை தகவல்கள் ஒரு வரப்ப்ரசாதம். இவர்கள் தான் இந்த தண்டனையை காட்டு மிராண்டித்தனமான தண்டனை என்றும், அறியாமைகால பழக்கம் என்றும் பேசி முற்றிலும் தாங்கள் மூடர்களே என்று பறைசாற்றுகின்றனர்.
இதில், ஒன்றிரண்டு மூடர்கள் சொல்வதை, ஒட்டு மொத்த மக்களும் சொல்வதுபோல் காட்டுவது தான் மீடியாவின் மேஜிக். இதை புரிந்துக்கொல்வோமேயானால் அவர்களுக்கு நாம் காட்டலாம் மேஜிக்.
இன்றைக்கும் மிருகங்களாய் வாழ வித்திடுபவர்கள், அன்று மிருகங்களாய் வாழ்ந்து வந்தவர்களை மனிதர்களாக வாழவைத்த அற்புதமான சட்டத்தை பார்த்து, காட்டு மிராண்டித்தனமான சட்டம் என்று வானத்துக்கும்- பூமிக்கும் குதிக்கின்றனர். இப்படிப்பட்ட சட்டம் இல்லாததால் தான் அறிவியலில் வளர்ச்சி அடைந்த இன்றைய அறிவுள்ள மனிதனும் மிருக வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். இப்படிப்பட்ட மனிதனை, கட்டுப்படுத்தி, இந்த அசிங்கத்தை தடுக்கும்,சட்டங்களை, கொண்டுவந்து, அதை குறைத்து விட்டு அதன் பிறகு விமர்சனம் செய்யட்டும். இல்லையேல் மூடிகிட்டு இருக்கட்டும்… வாயை! அது வரைக்கும் யாராக இருந்தாலும், எந்தநாடாக இருந்தாலும் இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள். என்பது தான் இதற்குப் பதிலாகும்.
குறிப்பிட்ட நாடுகளில் அதிகமாக நடக்கின்ற, நமது நாட்டில் (தமிழகத்தில்)மட்டும் வெளிச்சத்திற்கு வந்த, இன்னும் வரவிருக்கிற, இந்த நாகரீக[!] உறவு குறித்த,பல சம்பவங்களில் இரண்டே, இரண்டு மட்டும் நடு நிலையாளர் போர்வையில், சிறிதும் தெரியாமல் ஒளிந்து, ஒளமிடும் இஸ்லாமிய விரோத விஷமிகளுக்கு தருகிறோம்.
கள்ளக் காதலால், கட்டிய கணவனை கொன்றது:
பொதுவாகவே கள்ளக் காதலை வாழ வைத்து, கள்ள உறவை பேணுவதற்காக, கட்டிய கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவதும்,பிரிந்து வாழ்வதும்,கொடூரமான முறையில் கொலைசெய்வதும் அதிகரித்து வருவதை தினசரி நாளேடுகளின் வாயிலாக நாம் அறிந்து வரும் செய்தி தான்.
குறிப்பாக நம்ம தமிழகம் இந்த மாதிரியான கூத்துக்களுக்கு, பிறப்பிடமாகவும், புகலிடமாகவும்,இருப்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? மற்ற மாநிலங்களிலோ, மற்ற நாடுகளிலோ, இந்த கூத்து இல்லையா?என்றால் நிச்சயம் இருக்கும். ஆனாலும் அது சந்திக்கு வருவது கிடையாது. காரணம், அங்கெல்லாம், ஒரு ஆண்,பெண்ணோடு கைகுலுக்குவதும்,பெண் ஆணோடு கைகுலுக்குவதும், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும், டேடிங் தருவதும், ஊர் சுற்றுவதும் நாகரீகமாக கருதுகின்றனர். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் வெள்ளையர்களின் கலாச்சாரம் வேரூன்றி வருவதால்.
தமிழகத்திலும்,வெள்ளையர்களின் கலாச்சாரம் வேகமாக வேருன்றி வந்தாலும்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரிய கலாச்சாரத்தின் தாக்கம் எஞ்சி உள்ளதால், கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ, துரோகம் செய்யும் பொழுது அந்த தவறை, கண்டிப்பதற்காக பாதிக்கப்பட்டவர் முற்படும் பொழுதோ, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கண்டு பிடித்து உண்மை வெளியில் வரும் பொழுதோ, விவாகரத்திலோ, கொலையிலோ போய் முடிந்துவிடுகிறது.
விவாகரத்தில் முடிந்தால், பெரும்பாலும் இந்த அசிங்கம் வெளிவராது. கொலையில் போய் முடிவதால் தான், காவல்துறை விசாரித்து உண்மை நிலையை அறிய வேண்டிய நிப்பந்தம் உண்டாவதால் தான் வெளிச்சத்திற்கு வருகிறது. இப்படி வெளிச்சத்திற்கு வந்தவைகளை இனி பார்ப்போம்.
சம்பவம்: 1
மதுரையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 42). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் குடியேறியவர். இவர் அங்கு மருந்து கடை நடத்தி . வந்துள்ளார். வியாபாரத்தை கவனிக்கும் பொருட்டு 2 மகன்களையும் மதுரையில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார் மகள் தரணியை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் இவர் மனைவி சத்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்ப்பட்டு உள்ளது. அவரது கணவர் வீட்டில் இல்லாத பொழுது, அந்த பெண்ணை பர்ர்க்க வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனாலும் இந்த கள்ளத்தொடர்பு அவரது மனைவி பேணியே வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் கணவர், வாலிபர்களோடு அவரது மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கோபத்தை காட்ட, அங்கிருந்த வாலிபர்களின் உதவியோடு அந்தப்பெண் தனது கணவரை கொன்று விட்டாள்.
சம்பவம்: 2
இந்த சம்பவம் ஒரு சிறைக்காவலர் பற்றியதாகும்.சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (33). கோவையை சேர்ந்தவர்.காயத்ரி மாலாவும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர் . தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, கோவையில் இருந்து சேலத்திற்கு வந்து அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் . கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்த வீடு உள்ளது.
காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம். தனது மகளை பார்க்கப்போவதாக தனது கணவனிடம் போய் சொல்லி விட்டு, கள்ளக்காதலனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தாங்கள் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்லிவுள்ளார்.
கள்ளக் காதலன் யாரென்றால்,அவன் ஒரு தண்டனைக்கைதி(ஆயுள் தன்டனை)இந்த தொடர்பு ,முன்னதாக கோவையில் பணியாற்றியபோது ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவனும் திருமணம் ஆனவன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன் எப்படி வெளியில் வந்தான் என்றால் நன்னடத்தையின் காரணமாக “பரோலில்”வெளியில் வந்து, தனது மனைவியையும், பிள்ளையையும் அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம்.
அந்த சந்தர்ப்பத்தை அந்த பெண் காவல் அதிகாரி தனது கள்ளக்காதலை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டார். இந்நிலையில் தொலைபேசியில் பேசி வரவழைத்து ஜாலியாக இருந்துவுள்ளார்.பிறகு ரொக்க பணம் ரூ :5000 /- கேட்டுள்ளான்.வாரம் ஒரு முறை நீ என்னை சந்தித்து (கள்ள உறவால்) மகிழ்விக்க வேண்டும் என்று நிர்பந்திதுள்ளார்.
அதற்கு அவன் எனது மனைவி கர்பமாக உள்ளார் எனவே வாரம் ஒரு முறை வரமுடியாது.என்று கூற, பரோலில் வெளிவந்த நீ இதுவரை சிறைக்குத் திரும்பவில்லை நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள் என்று மிரட்டியுள்ளார். பயந்து போன அவன் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு அந்த பெண்ணை கொன்றுவிட்டான்.
முதல் சம்பவத்தில்,
தந்தையை இழந்து பிள்ளைகள் அநாதை ஆனது.
அந்த குடும்பம் சமூதாயத்தில் மதிப்பும், மரியாதையும், இழந்தது.
பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
அந்த பெண்ணின் வாழ்க்கையும் வீணானது.
இரண்டாவது சம்பவத்தில்,
காவல் துறை அதிகாரியின்,மதிப்பும்,மரியாதையும் பறிபோனது.
அவரது பிள்ளைகள் தாய் அரவணைப்பு இல்லாமல் அநாதை ஆனது.
அந்த பிள்ளைகளின் எதிர்காலமும்,கேள்விக்குறிதான்? ஏனெனில் மாற்று தாய் நிச்சயம் பெற்ற தாய் போல் நடந்துக்கொள்ள மாட்டாள்.
“கள்ள உறவு” விளைவிக்கும் என்றும் காயாத இப்படிப்பட்ட சமூக காயங்களுக்கு தீர்வுகளை வழங்கி விட்டு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை எதிர்ப்பவர் எதிர்க்கட்டும்.
இது இப்படி இருக்க,
“தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,” என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்த, செய்தி செப்டம்பர் 09, அன்று தினமலரில் வெளியாகிவுள்ளது.
“கள்ளக் உறவும்” அதனால் பறிபோகும் உயிர்களும் எந்த அளவிற்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை காவல் துறை (ஆவணங்கள்)மூலம் நாம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.அதனைத் தொடர்ந்து ஏற்ப்படும் மோசமான, பாரதூரமான விளைவுகளும், காணமுடிகிறது.
இத்தகைய சமூக கேடுகளை தவிர்க்க இஸ்லாம் அழகான வழிமுறைகளை வகுத்துள்ளது;
தனி மனிதன் பேணவேண்டிய சட்டம் :
ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும், தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
கணவன்- மனைவி மற்றும் மகரமான உறவினர்கள் அன்றி, ஆணும்- பெண்ணும் தனித்து இருக்கக் கூடாது.
அந்நிய ஆணிடம் பேசும் சூழ்நிலை ஏற்படுமேயானால் குழைந்தும், வழிந்தும் பேசக்கூடாது.
ஆடைகள் உடல் தெரியும் விதத்தில் இருக்கக் கூடாது. (சுறுக்கம்)
இந்த சிறு,சிறு சட்டங்களை, ஆணும், பெண்ணும் மீறும் பொழுது தான் பெருங்குற்றமான விபச்சாரம் நிகழ்ந்து விடுகிறது. இதை மீறாமல் இருப்பதற்கு உளவியல் ரீதியாக இறையச்சத்தை உண்டாக்கி தவறுகளை தடுக்கிறது இஸ்லாம்
சமூதாயத்தில் அதிகாரம் படைத்தவர்கள் பேணவேண்டிய சட்டம் :
இந்த சிறு,சிறு சட்டங்களையும் மீறியும் விபச்சாரம் புரிந்து விடுவார்களேயானால் அவர்களை கண்டுபிடித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமூதாயத்தில் அதிகாரம் படைத்தவர்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று அற்புதமான சட்டத்தை கொடுத்து, இந்த மாபெருங் குற்றத்தை இரு நிலைகளில் தடுக்கிறது இஸ்லாம். எனவே தான் அரபு நாடுகளில்
இப்படிப்பட்ட குற்றங்கள் குறைவு. அதை ஒட்டியே ஈரானும் தீர்ப்பளித்திருக்கிறது
பாவத்தில் பங்கு இருவருக்கும் :
ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும், தவறு செய்த இருவருக்கும் தண்டிக்கச் சொல்கிறது இஸ்லாம். இதில் திருமணமாகதவர்கள் தவறு செய்வார்களேயானால், அவர்களுக்கு மட்டும், தண்டனையை தளர்த்துகிறது. அதாவது நூறு கைசையடி வழங்குமாறு கட்டளையிடுகிறது. காரணம், திருமணமாகாத, பருவ வயதை அடைந்தவர்கள் பாலுறவு என்றால் என்ன? என்ற இனம் புரியாத மோகத்தில் ,தவறிழைத்து விடுகின்றனர். திருமணம் ஆனவர்களோ, பாலுறவு குறித்து அறிந்து அனுபவித்து விட்டு, பிறகு தவறிழைப்பதால் அவர்களுக்கு தண்டனையை கடுமையாக்குகிறது. அதாவது கல்லால் எரிந்து கொல்லச்சொல்கிறது.
பாமரர்களை விடுங்கள், தவறுகளை தடுக்க வேண்டிய காக்கி உடையே கள்ள உறவுக்கு பலியாவது எதை காட்டுகிறது என்றால்? இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் தப்புவது கடினமே! என்பதைத் தான். எனவே தான் இப்படிப்பட்ட கடினமான ஒன்றை தடுக்க கடுமையான சட்டம் தேவை. இந்த சட்டம் நமது நாட்டில் இல்லாததால் தான் இந்த தவறு தாறுமாறாக பரவிவருகிறது. இப்படிப்பட்ட பெருங்குற்றங்களை தடுக்கத்தான் இஸ்லாம், இத்தகைய சட்டங்களை வழங்குகிறது.
இறைவேதம் கூறுவதை மெய்ப்பிக்கும் பழமையான வேதங்கள் :
இந்தியாவின் பழமையான வேதங்கள் என்று சொல்லக்கூடிய ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள், ஆணின் மத்தியில் ஒரு பெண் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று உலக வேதம் திரு குரான் கூறுகிறதோ அதைஅப்படியே மெய்ப்பிக்கிறது. இதில் ரிக் வேத வரிகளில்ஒன்றை மட்டும் மட்டும் இங்கே தருகிறோம்.
(பெண்ணே) பார்வையை தாழ்த்திக்கொள்!தனது பாதங்களை இறுக்கிக் கொள்.!(ரிக் வேதம்)
இந்த வேதவரியில் பார்வையை தாழ்த்திக்கொள் என்பது எல்லோர்க்கும் தெரியும். ஆனால் பாதங்களை இறுக்கிக்கொள் என்றால் என்ன அர்த்தம்? விபச்சாரத்தின் வாசலை அடைத்துக்கொள் என்பதுதான். இன்னும் விபச்சாரத்திற்கு எதிரான பல வசனங்கள் இந்து மத வேதங்களில் உள்ளன.
இப்படி அவர்களின் வேதங்களே அவர்களுக்கு எதிராக சாட்சி அறியாதாதால்தான் இந்த கூப்பாடுகள். எனவே இஸ்லாமிய சட்டத்திலும் எவ்வித குறையுமில்லை. அதை நிறைவேற்ற முனைந்த ஈரானின் செயலிலும் எவ்வித குற்றமுமில்லை.
ஆக்கம்:முபாரக், துணைச்செயலாளர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.