38. இறை கொடுத்த மறை வழி அல்லாத வேறு வழி இல்லை
மனிதனைப் படைத்த இறைவனையன்றி வேறு யார் அப்படிப்பட்ட உயரிய வழியைக் காட்டித்தந்துவிட முடியும்? மனித இனத்திலுள்ள ஒருவன் படைத்த ஒரு கருவியை முறையாக இயக்க கருவியைப் படைத்த மனிதனின் வழிகாட்டல் தேவைப்படுகிறது.
இந்நிலையில் குறைமதி படைத்த மனிதன், இறைவன் படைத்த மனிதக்கருவியை இயக்க, படைத்த இறை கொடுத்த மறைவழி விட்டு அதே குறை மதியைக் கொண்டு நாஸ்திக வழியையோ அல்லது மதவழியையோ அமைத்துக் கொண்டால் இந்த மனிதக் கருவி உருப்படுமா? என்பதைச் சிந்திக்க வேண்டுகிறோம்.
மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள சீரழிவிற்கு இந்த மனித அபிப்பிராயங்கள்தான் காரணமாகும். மனிதன் தனது மனித அபிப்பிராயங்களை நீக்கி இறை ஆணைக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழ்வது கொண்டே இங்கும், மறுமையிலும் வெற்றி பெறமுடியும். இப்போது நாஸ்திகர்கள் அவர்கள் வெகுவாக முக்கியத்தும் கொடுக்கும் இவ்வுலக வாழ்க்கையையும் முழுச்சுவையோடு, மனமகிழ்வோடு அனுபவிக்கும் நிலையில் இல்லை. அவர்களின் மனோநிலை அதற்கு இடம் தருவதில்லை என்பதை விரிவாக ஆராய்வோம்.
39 ந.ம்பிக்கை
மனித வாழ்வில் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கின்றது என்பதனை நாஸ்திக நண்பர்கள் உணரவேண்டும். நம்பிக்கையில்லாது மனிதன் இயங்க முடியாது. மனிதனது அசைவு ஒவ்வொன்றும் அவன் பெற்றுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகின்றது. நம்பிக்கை சம்பந்தப்படாத எந்த ஒரு முயற்சியும், மனிதனிலிருந்து வெளிப்படுவதில்லை அந்த அளவு மனித இரத்தத்தோடு ஊறியதாக நம்பிக்கை திகழ்கிறது. மனித வெற்றியும், தோல்வியும் அவனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகிறது. நம்பிக்கை மனித வாழ்வின் அடிப்படையாக இருப்பதனால்தான் அவன் எளிதாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகிறான்.
பெரும் செல்வந்தன் ஒருவன் ஒரு ஏழையைப் பார்த்து உனது மகன் படிப்பு விஷயத்தில் நான் பண உதவி செய்கிறேன் என்று வாக்களித்து விட்டாலே போதும், இன்னும் அவன் வாக்களித்த படி உதவி அளிக்கவில்லை, ஆயினும் அந்த ஏழைக்கு அந்த உறுதிமொழியிலுள்ள நம்பிக்கை எவ்வளவோ மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. நோயால் துன்பப்படும் ஒரு நோயாளி, டாக்டரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவனில் ஏற்படும் நம்பிக்கை பாதி நோயை குணப்படுத்திவிடுகிறது.
ஒரு கல்லை, மனித கரங்களால் செதுக்கப்பட்ட ஒரு சிலையை தெய்வமாக நம்பி அதனிடம் வேண்டுதல் செய்வது கொண்டு எவ்வளவோ மன ஆறுதலையும், அமைதியையும் அடைகிறான் மனிதன். மூடநம்பிக்கைகளில் மூழ்குவதற்கும், அவற்றை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும் அடிப்படைக் காரணமே அவனது மன அமைதியேயாகும். ஆக மனிதன் கொள்ளும் நம்பிக்கை அது நன்னம்பிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி அவனது பிரச்சினைகள், அல்லது நோய்கள் தீர்ந்து போகும் என்று உள்ள ஆறுதலைப் பெற்றுத்தந்து மனநிம்தியை அளிக்கிறது. தனது துன்பங்களிலும், நோய்களிலும் இன்னும் இது போன்ற பிரச்சினைகளிலும், தனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறதென்ற நம்பிக்கையானது ஆஸ்திகர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் மன ஆறுதலையும், நிம்மிதியையும் தருவதை யாரும் மறுக்க முடியாது.
ஆஸ்திகர்களாக இருந்தாலும், நாஸ்திகர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுதான். வறுமை, நோய் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான நெருக்கடிககள் இவை அனைத்தும் ஒன்றேதான். ஆஸ்திகர்களுக்கு இவை அனைத்திலும் தமக்கு உதவி செய்யக்கூடிய தெய்வீக சக்திகள் இருக்கின்றன என்ற நம்பிக்கiயானது அவர்களது பிரச்சனைகளில் பாதி தீர்ந்து விட்டது போன்ற மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது.
நாஸ்திகர்களைப் பொறுத்தமட்டில் அப்படிப்பட்ட சக்திகளில் நம்பிக்கை இல்லாததால், அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற மன உறுத்தல், அதேசமயம் அவர்கள் அடுத்தடுத்து ஊக்கத்துடன் உழைத்தாலும், மனித சக்திகளை மீறிய பிரச்சினைகளில் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது தோல்வி ஏற்படும். இதனால் மன நிம்மதியும், அமைதியும் இல்லாதது அவஸ்தைப்படும் நிலை. இதுவே உண்மையாகும், ஆக நாஸ்திகர்களைவிட ஆஸ்திகர்களே இவ்வுலக வாழ்க்கையை நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் அனுபவிக்க முடிகிறதென்ற உண்மையை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது.
40. நல்ல நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் சமமாகா
நம்பிக்கை நன்னம்பிக்கையாக இருந்தாலும், மூட நம்பிக்கையாக இருந்தாலும் மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் அந்த நம்பிக்கை நல்ல விளைவை ஏற்பத்தினாலும் நன்னம்பிக்கையும், மூட நம்பிக்கையும் சமமாக மாட்டா. நன்னம்பிக்கை மனிதனைப் படைத்த ஒரே ஒரு இறைவனை மட்டும் தெய்வமாக நம்புவதாகும். மூட நம்பிக்கைகள் கல்லையும், மண்ணையும், தன் கைகளால் செதுக்கிய சிலைகளையும், இறந்துபோன நல்லடியார்களையும், மிருகங்களையும், பட்சிகளையும் தெய்வசக்திகள் பெற்றவையாக–பெற்றவர்களாக நம்புவதாகும்.
இந்த மூடநம்பிக்கைகள் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும்பெரும் குற்றங்களாக இருப்பதால் அவை கொண்டு இவ்வுலகில் மனிதனது பல பிரச்சனைகளில் அவனுக்கு மன நிம்மதியையும், ஆறுதலையும் தந்தாலும் மறுமையில் அதனால் அவன் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறான். இதனை நாம் இவ்வாறு விளக்கலாம். திருடுவது குற்றம் என்பதை ஆஸ்திகர்களும் மறுக்கமாட்டார்கள், நாஸ்திகர்களும் மறுக்கமாட்டார்கள்.
ஆயினும் ஒரு மனிதன் ஒரு பத்து ரூபாயைத் திருடிப் பெற்றுக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சொன்று சாப்பிட்டால் அவனது பசி நீங்கத்தான் செய்யும். கஷ்டப்பட்டு உழைத்து பெறும் ரூபாயைக் கொண்டு பெறும் அனைத்து பலன்களையும் திருடிப் பெற்ற ரூபாயைக் கொண்டு அடைந்து கொள்ள முடியும். அதனால் திருடுவதை யாரும் நியாப்படுத்த மாட்டார்கள். இங்கே இவ்வுலகில் உழைத்துப் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டாலும் அந்த பத்து ரூபாய்களில் வித்தியாசமில்லை. ஆனால் திருடிய குற்றத்திற்காக பின்னால் பிடிபட்டாலோ, அல்லது மறுமையிலோ துன்பத்தை அனுபவிக்கப் போகிறான்.
எனவே நாஸ்திகர்கள் மக்களுக்கு திருட்டு மூலம் பணம் சேர்க்க முயல வேண்டாம், கஷ்டப்பட்டு உழைத்து பணம் சேர்க்க முயலுங்கள் என்று அறிவுரை கூற வேண்டுமேயல்லாது. ரூபாய் இருப்பதால் தானே மனிதன் திருடுகிறான், ரூபாய் நோட்டுக்களை எரித்து இல்லாமல் ஆக்கிவிட்டால் மனிதன் திருட்டு என்ற தீங்கில் ஈடுபட மாட்டான் என அறிவுரை பகர்வது அறிவுடைமையாகாது என்பதை நாஸ்திகர்கள் நிச்சயமாக மறுக்க முடியாது.
40. மூட நம்பிக்கை மன அமைதி தந்தாலும் அகற்றப்பட வேண்டும்
இதேபோல் மனிதன் நன்னம்பிக்கை கொண்டாலும், மூட நம்பிக்கை கொண்டாலும் அந்த நம்பிக்கையானது பல விஷயங்களில் அவனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தரத்தான் செய்கிறது. கடும் காய்ச்சலாக இருக்கும் நோயாளியை ராகு காலம் கழித்துதான் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற மூட நம்பிக்கை. இன்னும் பல நோய்களில் மக்களிலிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக சிகிச்கை செய்யாமல் உயிரிழைப்பை ஏற்படுத்துவது, மூட நம்பிக்கைகள் காரணமாக இவ்வுலகில் பொருள் நஷ்டத்தையும், உயிர் நஷ்டத்தையும் ஏற்படுத்துவது போன்ற மூட நம்பிக்கைளைச் சுட்டிக்காட்டி நாஸ்திகர்கள் நமது கூற்றை மறுக்கலாம், ஆயினும் அந்த நிலைகளிலும் தெய்வ சித்தப்படியே காரியங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை அவர்களுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்கின்றது. எனவே தனது கஷ்ட நஷ்டங்களில் தனக்கு உதவி செய்யும் தெய்வீக சக்திகள் உண்டு என்ற நம்பிக்கை மனிதனுக்கு மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது என்பது நாஸ்திகர்களும் மறுக்க முடியாத உண்மையேயாகும்.
ஆயினும் மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை மக்களது உள்ளங்களில் இருந்து அகற்றி நன்னம்பிக்கையாளர்களாக அவர்கள் வாழ அவர்களுக்கு அறிவுரை பகர வேண்டும். இதுவே அறிவுடைமையாகும் திருடிச் சாப்பிட்டாலும் பசி அடங்குகிறது என்பதால் திருடுவதை நியாயப்படுத்த முடியாது. பின்னால் அதன் விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது போல், படைத்த இறைவன் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை, படைக்கப்பட்ட படைப்புகள் மீது– கல்லிலும், மண்ணிலும், இறந்து மண்ணில் அடக்கப்பட்டவர்கள் மீதும் மற்றும் பிராணி பட்சிகளிலும் வைப்பது குற்றம்.
அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இவ்வுலக வாழ்க்கையில் மனநிம்தியும் ஆறதலையும் அளித்தாலும் படைத்த இறைவனது கோபத்திற்கு ஆளாகி மறுமையில் மாபெரும் நஷ்டவாளி ஆகி நரகில் புக நேரிடும் எனபதை உணர்த்தவேண்டும். மூட நம்பிக்கைகளை முற்றாக நீக்கிடப்பாடுபடும் அதே வேளை படைத்த அந்த ஒரே இறைவன் மீது நன்னம்பிக்கை வைக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
41. ஆஸ்திகர்களே நிம்மதியடைகிறார்கள்
இதுவரை நாம் விளக்கியதிலிருந்து மனிதனில் ஏற்படும் நம்பிக்கை காரணமாக இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாஸ்திகர்களை விட, இறைவனையும், மறுமையையும் நம்;பும் ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன ஆறுதலுடனும், நிம்மதியுடனும் வாழ முடிகின்றது. ஆயினும் அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் மன நிம்மதி கிடைத்தாலும் மறுமையில் பெரும் நஷ்டமே ஏற்படும்.
அந்த நம்பிக்கை படைத்த இறைவன் மீது மட்டும் வைக்கும் நன்னம்பிக்கையாக இருந்தால் இவ்வுலகில் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை அளிப்பதோடு மறுமையிலும் ஈடில்லா வெற்றியையும், இணையில்லா உன்னத வாழ்க்கையையும் அளிக்கிறது. ஆக இறைவனைப் பற்றிய, மறுமையைப் பற்றிய நம்பிக்கை என்ற அடிப்படையில் இவ்வுலகில் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே அதிஷ்டசாலிகள் என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்.