சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்:
97% மக்கள் தங்கள் வாழ்க்கை மாறினால்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
85% மக்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கு முன் தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.
75% மக்கள் சேமிக்க வழியின்றி திண்டாடுகிறார்கள்.
70% மக்கள் வீட்டில் இருக்கும்போது அழகாக தோன்ற முயற்சி எடுப்பதில்லை.
60% மக்கள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளை நேரத்தில் செய்து முடிப்பதில்லை.
நம்மிடம் உள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதை மாற்ற முயல்வதே சிறந்தது,அதைவிட்டு நான் குறையற்றவள் என்பதை நிரூபிக்க நினைப்பது வீண் கவலையை மட்டுமே தரும்!
முக்கிய குறிப்பு:
அனைத்திலும் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மகிழ்ச்சியை குறைத்து, கவலைகளைத்தான் அதிகப்படுத்துகிறது!
மேலே உள்ள குறிப்புகளைப் படித்து விட்டீர்களா? இதோ நீங்கள் வீட்டில் செய்ய ஒரு பயிற்சி:-
ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்து இரண்டு பட்டியல்களைத் தயாரியுங்கள்.
1. முதல் பட்டியலில், நீங்கள் எது கிடைத்தால்/மாறினால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி எழுதுங்கள்.
2. இரண்டாவது பட்டியலில், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரங்களைக் குறிப்பிடுங்கள்.
3. இந்த இரண்டு பட்டியல்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என்ன தேவை என்பது உங்களுக்கே புரியும்!
நன்றி: நிலா முற்றம்