MUST READ ALL
0 “எவர் காலை, மாலை பள்ளிக்குச் செல்வாரோ, அவருக்கு சொர்க்கத்தில் விருந்து உபசாரம் செய்ய அல்லாஹ் ஏற்பாடு செய்கிறான். காலையோ, மாலையோ எத்தனை முறை பள்ளிக்குச் செல்கிறாரோ, அத்தனை முறை விருந்து உபசாரத்துக்கு ஏற்பாடு செய்கிறான்’’ என்று ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
0 “எவர் பிரபல்யம் எனும் ஆடையை உலகில் அணிவாரோ, கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா அவருக்கு கேவலம் என்னும் ஆடையை அணிவித்து நெருப்பு மூட்டி விடுவான்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா)
0 “எவரேனும் தன் முஸ்லீம் சகோதரரைப் பார்த்து, ‘காஃபிரே’ (அல்லாஹ்வை நிராகரித்தவரே) எனக் கூறினால் குஃப்ரு அவ்விருவரில் ஒருவரிடம் அவசியம் வந்தே தீரும். இவர் கூறியது போல் அவர் உண்மையிலேயே காஃபிராக இருந்தால் சரி, இல்லையானால், காஃபிர் என்று சொன்னவரிடமே குஃப்ரு (இறை நிராகரிப்பு) திரும்பி வந்துவிடும்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்;)
0 “நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரிய மோசடியாகும்” என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைக் கேட்டேன்” (அறிவிப்பாளர்: ஸுஃப்யானிப்னு அஜீத் ஹளரமீ, நூல்: அபூதாவூது)
0 “மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும், அவனுக்கு நாசம்தான்! அவனுக்கு நாசம் தான்!’’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைக் கேட்டேன். (அறிவிப்பாளர்: முஆவியத்துப்னு ஹைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ;)
0 “மக்கள் நாசமடைந்து விட்டனர்” என்று எவன் கூறுவானோ, மக்கள் அனைவரையும் விட அதிகமாக அவன் தான் நாசமடைந்து போவான். (ஏனெனில் இவ்வாறு சொல்பவன் மற்றவர்களை இழிவாகக் கருதியதால் தற்பெருமை என்னும் பாவத்தில் பீடிக்கப்பட்டுள்ளான்) என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
0 “அடியான் சிந்திக்காமல் ஒரு சொல், சொல்லிவிடுகின்றான். அதன் காரணமாக கிழக்கு – மேற்கிற்கு இடையே உள்ள இடை தூரத்தைவிடவும் அதிக தூரம் நரகத்தில் போய் விழுகிறான்” என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
0″மனிதன் ஒரு வார்த்தையை பேசி விடுகிறான், அதைச் சொல்வதில் எந்த குற்றமும் இல்லை என்று கருதுகிறான். ஆனால் அதன் காரணமாக எழுபது வருட தொலை தூரத்திற்குச் சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்.” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ;)
0 “ஓர் அடியயான் பொய் சொன்னால் அவனுடைய பொய்யின் துர்வாடையினால் மலக்கு அவனை விட்டு ஒரு மைல் தூரம் தூரமாகிவிடுகிறார்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லா ஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ;)
0 “புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக்கொடியது” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, “யா ரஸுலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக்கொடியதாக எப்படி ஆகும்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். “ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டு ‘தவ்பா’ (இனி அப்பாவத்தை ஒருபோதும் செய்வதில்லை என அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டல்) செய்தால் அல்லாஹ் அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான். ஆனால், எவரைப்பற்றி புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து புறம் பேசியவனுககு மன்னிப்பு கிடையாது” என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸஃத் மற்றும் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)
0 ”இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
”ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அளீம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)