நீங்கள் செய்வதை உலகம் பார்க்கின்றது: கூகிளும் அதன் அபாயகரமான பிரைவசிக் கொள்கையும்
இணையத்தை பயன்படுத்த தெரிந்த ஒவ்வொருவரும் கூகிளையும் பயன்படுத்தி இருப்பார் என்றால் அது மிகையாகாது.
கூகிள் என்பது இன்று அனைவராலும் அறியப்பட்டது ஒன்று. அனால் அனைவராலும் அறியப்படாதது கூகிள் பிரைவசி பாலிசியின் (கொள்கை) உண்மை நிலவரம்.
பிரைவசி என்பதற்கு ஒரு நபரின் அந்தரங்கத் தகவல் – தனித்தகவல் – சுயத்தகவல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
கூகிளின் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதற்க்கான விலை என்ன தெரியுமா ? உங்களின் பிரைவசி.கூகிளில் செய்யும் எதுவும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படியே உள்ளது.
இதைப்பற்றி கூகிள் தலைவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்றல், முதலில் நீங்கள் அதை செய்திருக்கவே கூடாது” (கீழே காணொளியைக் காணவும்).
http://www.huffingtonpost.com/2009/12/07/google-ceo-on-privacy-if_n_383105.html
குகூல் நீங்கள் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறீர்கள், என்னன்ன சொற்க்களைத்தேடுகிறீர்கள், எதை டவுன்லோட் செய்கிறீர்கள் என அனைத்தையும் தனது தளத்தில் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களின் இ–மைல்கள் போன்றவற்றையும் அலசி ஆராயும் தன்மை கொண்டுள்ளதாக பல தன்னார்வ குழுக்கள் குற்றம் சாற்றுகின்றன.
கடந்த வாரம் கூகிளுக்கு எதிரான பிரைவசி தொடர்பான வழக்கு ஒன்றிற்காக 40 கோடி நஷ்டஈடு கொடுக்க முன்வந்துள்ளது கூகிள் MailScanner has detected a possible fraud attempt from “www.tntj.net” claiming to be (http://arstechnica.com/tech-policy/news/2010/09/google-coughs-up-85-million-to-settle-buzz-privacy-suit.ars). அது மட்டுமல்ல மாற்றுமொரு தன்னார்வக்குழு கூகிளுக்கு எதிராக ஒரு விளம்பர பிரசாரத்தயே துவக்கி உள்ளது (காணொளியை கீலே காணலாம்).
http://www.youtube.com/watch?v=Ouof1OzhL8k
கூகிள் குரோம் என்ற கூகிளின் இணையதளச் சுற்றி (browser) நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் (நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தையும் கூட) கூகிளின் தாய்த்தளத்திற்கு அனுப்பி விடுகிறது (காணொளியை கீலே காணலாம்).
இந்த தகவல்கள் அங்கு பதிவு செய்வதுடன், இதை நிறுவனங்களுக்கு விற்பதாகவும் மேலும் இவற்றை அரசு கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பல தன்னார்வக்குழுக்கள் கூகில் மீது குற்றம் சாட்டியுள்ளது.
அதை ஒப்புக்கொள்ளும் முகமாகவே கூகிளின் தலைவரின் கூற்றும் உள்ளது.
http://www.youtube.com/watch?v=ncerhCLi2o0
ஆகவே கூகிளை பயன்படுத்தும் போது இதை அறிந்து பயன்படுத்தவும், உங்களுடைய அந்தரங்க தகவல்கள், வேலை மற்றும் அலுவலக தகவல்கள், நிறுவனத்தின் முக்கிய மற்றும் தனித்தகவல்கள் போன்றவற்றை கூகிளில் பயன்படுத்தும் போது, எந்த வடிவத்தில் இருந்தாலும், சாட்டிங் ஆகவோ, புகைப்படமாகவோ, ஒலியாகவோ, ஒளியாகவோ, இ–மெயில் ஆகவோ, இந்த தகவல்கள் விற்கப்படலாம் அல்லது பகிர்ந்து கொல்லப்படலாம், உங்களது போட்டி நிறுவனங்களுக்குகூட இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
செய்தி– எஸ் ஜாஃபர் அலி Phd (USA)