Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தீங்கிழைக்கப்படும், துன்புறுத்தப்படும் பெண்ணினம்

Posted on September 12, 2010 by admin

தீங்கிழைக்கப்படும், துன்புறுத்தப்படும் பெண்ணினம்

பெண்மை…

பெண்மை என்றாலே ஒரு மென்மை..,

அதை அடக்கி ஆழ நினைக்கும் ஆண்மை..,

என்று ஓயும் இந்த கொடுமை..,

அன்று தான் கிடைக்கும் பெண் உரிமை… பெண்களுக்கு.,

பெண்மை அழகூட்டும் அணிகலன்களே தவிர

அடிமை படுத்தும் விலங்கு அல்ல…. 

     பெண்களை உதாசீனம் செய்யும் போக்கு      

ஆண், பெண் இருவருமே மனித இனத்தைச் சார்ந்தவர்கள் எனினும் அவர்கள் உடலியலால் வேறுபட்டவர்கள். இயற்கையின் கொடையில் ஆண் பலசாலியாகவும், கடினமான தொழில்களைச் செய்யும் வலிமை கொண்ட உடலமைப்பை உடையவனாகவும், பெண் மென்மையான உடலமைப்பினைக் கொண்டதோடுமட்டுமல்லாமல் இனவிருத்திக்கான மூலமாகவும் விளங்குகின்றாள்.

பிள்ளையைத் தனது வயிற்றில் சுமத்தல், பெற்றெடுத்தல், பால் கொடுத்தல் போன்ற செயல்களோடு உடலமைப்பிலும் மாறுபட்டவளாகக் காணப்படுகின்றாள்.

ஆண் தனக்கு உள்ள உடல் வலிமையினால் வெளியே சென்று கடின உழைப்பினை மேற்கொள்ள பெண் வீட்டில் இருந்து வீட்டுப் பணிகளோடு பிள்ளைகளையும் வளர்த்து வரும் பெரும் சேவையினை ஆற்றி வருவது நாமறிந்ததே. பெண்கள் குடும்ப வன்முறை, வேலைத்தள துன்புறுத்துதல், பாலியல் துன்புறுத்துதல் அல்லது கற்பழிப்பு, பாலியல் ரீதியாகத் தொல்லைப் படுத்துதல் போன்றனவும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் தீங்கிழைப்புக்களாகும்.

சுர்லொட் பஞ் என்னும் ஆய்வாளர் பெண்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகள் உலகின் மனித உரிமை மீறல்களில் மிகவேகமாகப் பரவிவரும் வன்முறையாகும். இதன் வடிவங்கள் முனைப்பானதும் தெளிவற்றதுமானதும் இதன் விருத்தியின் ஆழ்தடங்களின் விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஆனால் இது உலகிலுள்ள பண்பாடுகளில் வெளிப்படாத அளவிற்கு ஆழப்பதிந்துள்ளது. இன்னும் இந்த கொடூரச்செயல் அகற்ற முடியாததாகவுள்ளது. இதன் என்ன என்பதன் தன்மையை ஒருமுறை அறிந்து கொண்டால் – ஒரு அதிகார அமைப்பும் தொடர்ந்து பேணப்படுகின்ற ஒரு வழியின் தராதரத்தின் அம்சமாகும்.-இதனை இல்லாது அழித் தொழிக்க முடியம்||

உடலியல் வேறுபாடுகள் காரணமாக ஆண்கள் அதிகாரம் செலுத்தப் பிறந்த வர்கள் பெண்கள் அடங்கிப் போக வேண்டியவர்கள் என்னும் கருத்து மிக நீண்ட நெடுங்காலமாக எமது சமுதாயத்தில் நிலை கொண்டு விட்டது. ஆனாலும் தாயைத் தெய்வமாக மதிக்கும் பண்பினைக் கொண்டது எமது சமுதாயம். முனைவியைப் பெண் பிள்ளைகளை ஏன் சகோதரிகளைக் கூட சமத்துவமானவர்களாக மதியாத நிலை இன்றும் காணப்படுகின்றது. தாயிடம் அளவிலாப் பாசத்தினைக் கொண்டுள்ள ஆண் ஏனைய பெண்களை தாயின் தானத்திலிருத்திப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.

குடும்பத்தில் பெண்கள் தமக்குப் பாரமானவர்கள் என்ற எண்ணம் தந்தை, சகோதரங்களிடையே நிலவுவதனையும் காணக் கூடியதாகவுள்ளது. தாய்க்குப்பின் தாரம் என்னும் முதுமொழி எமது பண்பாட்டோடு இரண்டறக் கலந்தவொன்று,

ஆனால் நம்மில் பலர் தாய்க்கு அடுத்த நிலையில் வைத்து தாரத்தைப் பார்க்கத் தவறுகின்றோம். அதன் விளைவாக பல குடும்பங்களில் பிணக்குக்கள் ஏற்படுகின்றன.

இவை குடும்ப வன்முறைகளாகவும் வெடிக்கின்றன. தாயைக் கை நீட்டித் தீண்டப் பயப்படும் நிலை தாரத்திற்கு கை நீட்ட முற்படும் போது அல்லது உதாசீனம் செய்யும் போது, அல்லது துன்புறுத்த முற்படும் போது வருவ தில்லை என்பதனை நாம் சற்று உணர வேண்டும்.

குடும்ப வன்முறை என்பது பல வேறு வகைப்பட்ட தன்மைகளைக் கொண்ட தீமை செய்யம் தன்மையைக் கொண்ட பதமாகும்.

தவறாக நடத்துதல்,

கவனியாது விடுதல்,

தவறான உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுத் தீங்கிழைத்தல்,

தாக்குதல் அல்லது அடித்தல்,

உடலுக்கு ஊறு விளைக்கக் கூடிய வகையில் தாக்குதல்,

உடன்பாடற்ற பாலியல் வல்லுறவு,

உடன்பாடற்ற பாலுறவினால் உடலுக்குத் தீங்கு விளைத்தல்,

ஒரு பொருளை அல்லது ஆயுத மொன்றைப் பயன்படுத்தி பாலுறவு கொள்ளுதல்,

குற்றவியல் சார்ந்த பாதகமான துன்புறுத்துதல்,

போலிக் குற்றம் சுமத்தித் துன்புறுத்தல்,

ஏசி, அல்லது மிரட்டிப் பயமுறுத்துதல்,

தொல்லை கொடுத்தல்,

தொந்தரவு செய்தல்,

வேடிக்கை செய்தல்,

கேலி செய்தல்,

வசை மொழிதல்,

அடக்குதல்,

பணிய வைத்தல்,

கொலை முயற்சி,

கொலை போன்றனவற்றை உள்ளடக்கியதாகும்.

குடும்ப வன்முறை என்பது பொதுவாக வெளியே தெரிவதில்லை. கணவனுக்கம், மனைவிக்குமிடையே இடம் பெறுவதாக அல்லது ஒன்றாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படுவதாகவும் அமைந்து விடுகின்றது. இதனால் இவை முறையீடு செய்யாத நிலையில்; வெளியே வருவதில்லை.

குடும்ப நிலை கருதி பெரும்பாலான குடும்ப வன்முறைகள் மூடி மறைக்கப் படுகின்றன. குடும்ப அங்கத்தவர்களிடையே உள்ள தொடர்புகளின் காரணமாக இவை வெயியே தெரிவதில்லை. குடும்ப வன்முறை என்பது சட்டத்திற்கு முரணானது என்றாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள சட்ட அமைப்புக்களுக்கும், இறுக்கமான நடைமுறைகளுக்கும் கீழை நாடுகளில் உள்ள சட்ட அமைப்புக்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சட்டத்திற்கு எதிரானதாக குடும்ப வன்முறை காணப்பட்ட போதிலும் அவை நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. 1999ம் ஆண்டு கனடாவில் மேற்கொள்ளப்பட்ட பொதுச் சமூக கணிப்பீட்டின் படி திருமணமான, அல்லது பொது உடன்பாட்டில் சேர்ந்து வாழுகின்ற சோடிகளிடையே 1999க்கு முந்திய ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கனடாவில் 690,000 பெண்களும், 549,000 ஆண்களும் ஏதோ ஒருவகையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதனை ஆய்வு காட்டுகின்றது.

கனடாவில் இன்று குடும்ப வன்முறைகள் மிகப்பாரதூரமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. 2002ம் ஆண்டு 94 பிரிவுகளில் உள்ள பொலீஸ் நிலையங்களில் துன்புறுத்தல் பற்றிய முறையீடுகள் செய்யப்பட்டு ள்ளன. இக் கணிப்பீட்டின் படி எல்லா குடும்ப வன்முறைகளிலும் 62 வீத்மான வன்முறைகள் கணவன் மனைவி அல்லது கூடி வாழும் துணைவர்களினால் தாக்கப் பட்டதாகும். இதில் கூடியளவு பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. இதில் 85 வீதமான பெண்களும், 15 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர் என பொலீஸ் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றது.

சாதாரணமாக கணவன் மனைவியரிடையே அடிக்கடி இடம் பெறும் தாக்குதல் அல்லது அடிபிடி நிகழ்வு 73 வீதமாகவும், இவற்றைத் தொடர்ந்து இடம் பெற்ற பாரதூரமான தாக்குதல்கள் 16 வீதமாகவும், முன்னைய கணவன் மனைவி யினரால் இடம் பெற்ற பொதுவான தாக்குதல் நிகழ்வுகள் 43 வீதமாகவும் மிரட்டுதல் அல்லது கொலைப் பயமுறுத்தல் 25 வீதமாகவும் பாரதூரமான துன்புறுத்தல் 20 வீதமாகவும் கனடாவில் உள்ள 94 பொலிஸ் பிரிவுகளிலும் முறையிடப்பட்டுள்ளன என பொலிஸ் அறிக்கைகள் காட்டுகின்றன. (கோட்டன் 2001, யோன்சன் 1996) இவற்றை யோடி ஆன் பிறிசோசோவஸ்க்கி என்பவர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.

2002-இல் இங்குள்ள பொலீஸ் நிலையங்களில் வன்முறை பாதிப்புக் குள்ளான 205,000 பேரின் முறையீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 103,001 பெண்களும் 102,447 ஆண்களுமாவர். குடும்ப வன்முறைப் பாதிப்புக்குள்ளான வர்களில் 62 வீதமானவர்கள் கணவன் மனைவி அல்லது துணையாகவுள்ள வர்களின் வன்முறைக் குள்ளானவர்கள் என்பது புலனாகின்றது. எனவே குடும்பவன்முறை என்பது நெருங்கிய குடும்ப உறவினரிடையே அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்வுகளாகவும் அதன் பலனாக பொலீஸ் நிலையங்களில் முறையீடு செய்யும் நிலையும் அதிகரித்து வருவதனையும் எடுத்துக் காட்டுகின்றது.

முறையீடு செய்வதிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் முறையீடு செய்கின்றனர். 85 வீதபெண்களும், 15 % ஆண்களும் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். பொதுவான தாக்குதலுக்கு 64 வீத பெண்களும் 60 % பெண்களும் உட்படுகிறார்கள். கணவன் மனைவிய ரிடையே ஆன பிணக்குக்களில் வன்முறைகளில் முன்னைய கணவன், மனைவியரிடையேயான தாக்குதல்களே அதிகமாகும். குணவன் மனைவியாக உள்ளவர்களிடையே 73 வீதம் அடிக்கடி இடம்பெறும் குற்றங்களாகும். இதில் 16 % பாரதூரமான தாக்குதலாக முறையிடப்பட்டுள்ளன. முன்னைய துணைவரின் தாக்குதல் 43 வீதம் மிரட்டுதல் 25 வீதம் குற்றவியல் சார்ந்த துன்புறுத்துதல் 20 வீதம் என்பன அடிக்கடி முறையிடப்படும் குற்றங்களாகக் காணப்படுகின்றன.

இளம் தம்பதியினரிடையேயே கூடியளவு குடும்ப வன்முறை காணப்படுகின்றது. 25க்கும் 34 வயதுக்குமிடையேயான துணைவர்களிடையேயான வன்முறைகளில் ஒவ்வொரு 100,000 பெண்களிலும் 678 பேரும். 45க்கும் 54வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 217பேரும், 55க்கு மேற்பட்டவர்களில் 43பேரும் ஆளாகிறார்கள். ஆண்களில் 45க்கும் 54க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் 55பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மேற் கூறிய குடும்ப வன்முறைகளை விட பெண்கள் பாலியல் ரீதியாக பாதிப்பிற் குள்ளாக்கப் படுகின்றனர். எடுத்துக் காட்டாக தொடர்ந்து பாலியல் வன்முறை, கற்பழிப்பு, பாலியல் அடிமைமுறை, விருப்பினடியிலான சிறை, துன்புறுத்துதல், ஏசதல், வசை மொழிதல், உறுப்பை நீக்குதல், உருச்சிதைவு செய்தல், கொலைப் பயமுறுத்தல், கொலை செய்தல் என்பன அவர்கள் பெண் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதனால் மேற்கொள்பபடுகின்றன எனப்படுகி ன்றது. இது தவிர வீடுகள், வேலை இடங்கள், பாடசாலை வகுப்பறைகள், காட்சி அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், வணக்கத் தலங்கள், நாடக அரங்கங்கள் போன்றனவற்றில் பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிப்பிற்குள்ளா கின்றனர். அமைப்பு ரீதியான இன ஒதுக்கற் கொள்கைகள் நடமுறைகள், அவமானப்படுத்துதல், உதாசீனம் செய்தல் போன்றன இளம் வயதினரிடையே அதிகமாகவுள்ளது.

பிள்ளைகளைப் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல், பாலியற் படத்திற்கு, அல்லது இழிநிலைப் படமாக்கலுக்குக் குழந்தைகளைப் பாவித்தல், பிள்ளைகளை விலை மாதர்களாகப் பயன்படுத்துதல், கற்பழிக்கப்படுதல் என்பன ஒப்பீட்டளவில் பெண் பிள்ளைகளே கூடியளவில் பாதிக்கப்படுகின்றார்கள். எனினும் ஆண் பிள்ளைகளும் இன்று இவ்வித பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள் என்பதனை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பாலியல் முறைகேடு அல்லது தாக்குதல் என்பதனை உலக நாடுகள் அனைத்தும் சட்டப்படி குற்றமாக குற்றவியல் சட்டக் கோப்பில் பதிந்து நடை முறைப்படுத்துகின்றன எனினும் இது நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. பொதுவாக பாலியல் குற்றமிழைத்தல் என்பதனைக் கனடிய குற்றவியற் கோவை பின்வருமாறு வரையறுக்கின்றது.

1. பாலியல் வன்முறை (1ம் நிலை): பாதிக்கப்பட்டவருக்கு உடலில் சாதாரண காயங்களை ஏற்படுத்துவது. இது அதிகூடியளவு 10 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைத் தருகின்றது.

2. பாலியல் வன்முறை(2ம் நிலை): ஒரு ஆயதத்துடன் தொடர்புடையது, பயமுறுத்தல் அல்லது உடலுக்கு ஊறு விளைத்தல். இது அதிகூடியளவு 14 வருடங்கள் வரையான சிறைத் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது.

3. மிகமோசமான பாலியல் வன்முறை(நிலை 3): காயமாகுதல், ஊனமாகுதல், வாழ்வு ஆபத்தாகுதல் அல்லது உருக் குலைதல் போன்றன பாலியல் வன் முறையின் விளைவால் ஏற்படுதல். இக் குற்றச் செயலுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையினை மிகக் கூடுதலாகப் பெற்றுத் தருகின்றது. 

ஆரம்பத்தில் கனடாவில் பெண்கள் கணவனின் சொத்தாகவும் அவள் கற்பழிக்கப்பட்டால் அது கணவனிடமிருந்து திருடப்பட்ட ஒன்றாகவும் கருதப்பட்டது. பெண்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாகவே கருதப்பட்டனர். ஆனால் கனேடிய மனித உரிமைப் பட்டயத்தின்படி பெண்கள் சமமானவர் களாகச் சட்டப்படி கணிக்கப்பட்டார்கள். அதற்கு முன்னர் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. பெண்கள் கற்பளிப்பினால் பாதிக்கப் பட்டவர்களானாலும் அவர்கள் உடலுறவுக்கு ஆளாக வேண்டியவர்களாகவே காணப்பட்டனர்.

ஆண்கள் விருப்புக் கேற்ற உடைகளை அணிவதும், அவர்களின் விருந்தினர்களை வரவேற்று மகிழவைப்பது, உணவு வழங்குவது போன்ற இன்னோரன்ன சேவைகளையும், பணிகளையும் அவர்கள் செய்யவேண்டிய கட்டாயக் கடப்பாட்டிற்கு உள்ளாகி இருந்தனர். 1983க்கு முன்னர் கற்பழிப்பு அல்லது பாலியல் வன்முறை என்பது ஆண் பெண் உடலுறவை மட்டும் கருதுவதாகும். ஆதாவது பெண்ணின் விருப்பமின்றி ஒரு ஆண் பெண்ணைப் புணர்வதினையே பாலியல் வன்முறை எனக்கருதப்பட்டது. ஆனால் இன்று மேற்கூறிய மூன்று அம்சங்களில் இதனை நோக்குவதனைக் காணலாம்.

கனேடியப் புள்ளி விபரவியலின் (1999) படி 1997ல் 30,735 பாலியற் குற்றங்கள் பொலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 85 மூ 1ம் நிலையைச் சார்ந்தது. இது 1983 இலிருந்து குறைவானதாகும். 1996ல் 5100 பாலியல் வன்முறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது 1987இல் பதிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க 6 விதம் குறைவானது.

கனடாவில் முறையீடு செய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களில் பாலியற் துன்புறுத்துதல் அல்லது பாலியல் வன்முறை மிகக் குறைந்தளவே என்பதும் கருத்திற் கொள்ளத் தக்கது. கொலை, களவு, ஏமாற்றுதல், ஆட் கடத்துதல் போன்ற குற்றச் செயல்களோடு ஒப்பீட்டு நோக்கும் போது பாலியல் வன்முறைகள், அல்லது தீங்கிழைத்தல் குறைவானதாகும். பாலியல் வன்முறைகள், பாலியற் தொல்லைகள் என்பன பல மூடி மறைக்கப் படுவதனால் பொலீசில் முறையிடுவது இல்லை என்ற கருத்தும் உண்டு.

பாலியல் வன்முறைகள் நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபடுவதனைக் காணலாம். சில நாடுகளில் பாலியல் வன்முறை பாரதூரமான குற்றமாகக் கணிக்கப்பட சில நாடுகளில் அவை சாதாரணமானவையாகக் கருதப்படுகின்றன.

நன்றி சத்தியா. நிலா முற்றம்

  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

75 + = 76

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb