Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காலத்தின் பிடிக்குள் நாம்!

Posted on September 11, 2010 by admin

சிறுவயது அனுபவத்தை அசை போட எவருக்கு கசக்கும்!

காலத்தின் பிடியில் நாம்

நாம் கடந்து செல்கிறோமா? அல்லது காலம் தான் கடந்து செல்கிறதா?நடப்பவைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலவற்றை நல்லது என்றும் சிலவற்றை தீயவை என்றும் நாம்தான் தீர்மனிக்கின்றோம் என்று நாம் நினைகின்றோம்.ஆனால் அது உண்மையல்ல.

எது எப்பிடி ஆனாலும் அதை சந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு வந்து சேர்க்கிறது.அலைகள்எப்பிடி எதை பற்றியும் கவலை படாமல் வந்து வந்து செல்கிறதோ அது போலத்தான் மனிதர்கள் வாழ்க்கையும்.காரியம் மட்டும்தான் நம் கையில். முடிவோ அவன் கையில்.

சிறு வயது ஞாபகம்

சிறு வயதில் அப்பாவுடன் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சாலையின் போக்குவரத்துகளை வேடிக்கை பார்த்தவண்ணம் பள்ளி சென்ற ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் மனதிற்குள் ஒரு சந்தோசம் வருமே அதை என்னெவென்று சொல்வது.

விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். காலை உணவு முடிக்கும் வரைதான் வீட்டில் பின்பு மாலைவரை நண்பர்களுடன் எங்காவது விளையாட சென்றுவிடுவேன்.

அனால் இப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்கள்தான் சோம்பலுடன் விடிகிறது!.

கடைவீதிகளில் எதிர்ப்படும் தெரிந்தவர்களைப் பார்த்து அப்பா சிநேகத்துடன் புன்னகைக்கும் பொழுது ஏன் என்று தெரியாமல் நானும் புன்னகைத்திருக்கிறேன்.

மாலைப் பொழுதுகள் எப்பொழுதும் மனதிற்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது ஆனால் அதை அனுபவிக்கத்தான் நேரம் கிடைப்பதில்லை இன்று. அந்த வயதில் மாலைப்பொழுதும் நேரமும் கிடைத்தும் அதுபற்றி கவலைப்படாமல் விளையாடி தீர்த்திருக்கிறேன். அதைப் பற்றி சிந்திக்கக்கூடிய வயதும் அல்ல அது.

அன்று எனது ஊருக்குள் அடிக்கடி பார்த்த பல முகங்கள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவர்களையெல்லாம் இப்பொழுது மீண்டும் பார்க்க வாய்ப்பும் இல்லை அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

ஊருக்குள் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் ஒருவரை தினமும் பார்ப்பேன். அவரைப்பற்றி பள்ளி நண்பர்கள் “அவுரு சாதாரண ஆள் இல்ல! கொலைகாரன பிடிக்கறதுக்காக வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்கிற CID” என்று சொல்லக் கேட்டு பயத்தோடு பார்த்திருக்கிறேன். அதுமட்டுமின்றி வீட்டில் பெரியவர்களிடம் அந்த விஷயத்தைச் சொல்லி அதிசயித்திருக்கிறேன். இதுபோல் பலபேர், இப்பொழுது அவர்கள் எல்லாம் ஊரில்தான் இருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை.

நீச்சல் கற்றுக்கொடுக்க தாத்தா கிணற்றுக்கு அழைத்துச்செல்லும் பொழுது பயந்துகொண்டு பாதி வழியிலேயே ஓடி வந்துவிடுவேன். கடைசியில் எப்படியோ ஒரு வழியாக கற்றுக்கொண்டபின், காலையில் எழுந்தவுடன் சீக்கிரம் நீச்சலடிக்கப் போகலாம் என்று நச்சரிப்பு ஆரம்பமாகிவிடும். நேரம் போவது கூட தெரியாமல் எந்த கவலையும் இல்லாமல் கிணற்றில் குதித்து விளையாடிய அந்த நாட்கள் எவ்வளவு அற்புதமானது.

அன்று நான் பார்த்த பாதைகள் இன்று தார்ச் சாலையாகி முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும் எப்பொழுதாவது அந்த சாலைகளில் செல்லும் பொழுது பழைய பாதையின் தோற்றம் ஒரு நொடியாவது கண்முன் தோன்றி மறைவதை தவிர்க்கமுடியவில்லை.

பால்ய வயதில் இருளைக்கண்டு பயப்படாமல் இருந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பொழுதெல்லாம் எட்டு மணியானால் ஊர் அடங்கிவிடும். அதுவும் என் வீடோ சற்று தள்ளி தோட்டத்திற்குள். வீட்டைவிட்டு வெளியே வரவே பயமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மனதில், வெளியே கொட்டகையில் கட்டியிருக்கும் ஆட்டுக்குட்டி எப்படி பயம் இல்லாமல் இருளில் இருக்கிறது என்று ஒவ்வொரு இரவும் வியப்பு மேலிடும்.

மழை. அந்த வயது மழையை மட்டும் இரசிப்பதில்லை, மழை நின்றபின் வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் விளையாட வைக்கிறது. வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மேல் குதித்து சிதறும் தண்ணீரை பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம். ஆனால் இப்பொழுது ஒதுங்கிச் செல்லச் சொல்கிறது மனசு.

வயது ஏற ஏற எண்ணங்கள் மாறுவதும், காலத்திற்க்கேற்ப ஊர் மாறுவதும் இயற்க்கை. ஆனாலும் மனது சட்டென்று அதை ஏற்றுக்கொள்வதில்லை.

காரணம்,

காலத்தின் பிடிக்குள் நாம்.

பாலமுருகன்

நன்றி: ஏகாந்த பூமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

68 + = 69

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb