உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும்
கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும்
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும்
புறப்படச் செய்ய வேண்டுமெனவும்
நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்.
பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள்.
அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்ப்பார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 13, எண் 971)
இன்ஷா அல்லாஹ் இந்த ஹதீஸின் படி பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு அழைத்து செல்லுங்கள். உங்கள் ஐமாத்தில் அறியாதிருந்தால் அறியச் செய்யுங்கள். அறிந்தும் அனுமதிக்காதிருந்தால் அனுமதிக்கும் பள்ளிகளுக்கு (பெருநாள் திடலுக்கு) அழைத்து செல்லுங்கள்.