அன்புடன் மலிக்கா
[ பெண்கள் அலங்காரம் செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.
அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு. குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை.
நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?]
இறையடியார்களே உங்களைத்தான்..
உலகில் படைக்கப்பட்ட அனைத்தும். அனைத்தும் இறைவனை நினைத்து அன்புடனும். அச்சத்துடனும் வணங்கும். இதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால் மனிதர்கள் மட்டுமே. அதை பொழுதுபோக்கிற்காக பொடுபோக்குதனமாக வெரும் கடமைக்காக செய்வது. அது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்..
சில பொடுபோக்கு தொழுகையாளர்களை பார்த்ததால் மனம் நொந்தது அதனால் இதை எழுதும்படியானது.
இறைவனை வணங்கவேண்டும் இது கட்டாயக்கடமை. எப்படி? அது ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்த விசயம். அறியாதவர்களும் உண்டு. ஆனால் அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்யும்போது மனம் ரணப்படுகிறது.
இறைவனை நினைத்து தொழுகைக்கு தயாரகும் ஒருவர் முதலில் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒழுவின் மூலம்.
ஒழுவை (சில இடங்களில் உளு என்பார்கள்) சரியாக முடிக்கவேண்டும் ஒழு என்றால் இருகைகள் கழுவுதல். நாசிக்கு நீர்விடுதல்.முகம் கழுவுதல். முட்டுக்கைகள்வரை கழுவுதல்.தலையை தண்ணீரால் தடவுதல். காதுகளையும் தண்ணீர்கொண்டு தடவுதல். இருகாள்களையும் கழுவுதல்.இது ஒழு செய்யும் முறை. இதுசெய்யும்போதும் செய்தபின்னும் இறைவன் சொன்னதுபோல் இருக்கவேண்டும்.
விரல்களில் நெயில்பாலிஸ் போட்டிருத்தல் அதன் தடிமன் தனம் ஒழுச்செய்யும்போது தண்ணீர் சேரவேண்டிய இடத்துக்கு சேராது அதனால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் சிலர் ஒழுசெய்துவிட்டு துணிகொண்டு நன்றாக துடைத்துவிட்டு பவுடர்பூசி மேக்கப்போட்டு. உதட்டுச்சாயம் அதுவும் திருமணவிழாவிற்கு செல்வதுபோல் இட்டுக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு (சுர்மா அல்ல) மஸ்காரா ஐபிரோ செய்துகொண்டு தராவீஹ் தொழுகைக்கு வருகிறார்கள் இது தொழுகைக்கு கூடுமா?
பெண்கள் அலங்காரம் செய்வதில் தவறில்லை. அதுவும் தன் கணவருக்காக! தன் கணவர் மட்டுமே ரசிப்பதற்காக பெண்கள் அலங்கரித்துகொள்வதில் தவறேயில்லை. பிறருக்காக அலங்கரிப்பது பேராபத்தில் முடியும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.
தொழுகைக்கு வரும்போது தூய்மையான ஆடையணிந்து தொழுமாரு சொல்லப்பட்டிருக்கிறதே தவிர. சில இடங்களில் நடப்பதுபோல் திருமண விழாக்களுக்கு செல்வதுபோல் மேக்கப்பிட்டு, மைபூசி, வண்ணமிட்டு.அதிக அலங்கரதோடு தொழச்சொல்லவில்லை. ஏனெனில். இறைவன்முன் நாம் நிற்கும்போது அச்சம் அச்சமென்னும் தக்வா பயபக்தி மனதில் தோன்றவேண்டும்.
அதுமட்டுமல்லாது தொழுகையில்லாதவர்களுக்கும் தொழும் நேரத்தில் வருகிறார்கள் இதே அலங்கலங்களோடு. சரி வரட்டும் வந்து தொழுபவர்களுக்கு இடையூரு செய்யாமலிருக்கவேண்டுமல்லவா. அதுமில்லை. தொணதொணவென பேச்சு. குழந்தைகள் போடும் சவுண்டையாவது இவர்கள் சொல்லி அதட்டவேண்டும் அதுமில்லை. அல்லது தான் கொண்டுவந்திருக்கும் மொபைல்போனில் ரிங்டோனாவது மாற்றிவைக்கவேண்டும் அல்லது சைலன்டில் போடவேண்டும் அதுமில்லை.
ரிங்டோனில் ஒலிக்கும் பாட்டின் சப்தம் பிறர் தொழும்போது அவர்களுக்கு எந்தளவு கவனத்தை சிதறடிக்கும் என்பதை யாரும் நினைத்துப்பார்பதில்லை. இறைவனைத் தொழும் இடம் என்றால் எவ்வளவு பயபக்தியிருக்கவேண்டும். அல்லது சிறு அச்சமாவது இருக்கவேண்டாமா?
இறைவனுக்கு செய்யவேண்டிய கட்டாயக் கடமைகளில் தொழுகை மிக மிக முக்கியமானது அதை பேணுதலுடல் தொழுவதே சாலச்சிறந்தது.
இறையடியார்களான நாம் அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது
இறைவனுக்கும். நமக்கும். எவ்வித தடையுமில்லாது அவனிடம் நாம் நம்மை நிறைவான முறையில் ஒப்படைக்கவேண்டாமா?
இந்த நோன்புக்கு இருக்கும் நாம் அடுத்த நோன்புவரை ஏன் அடுத்த நாள்வரை இருப்போமா என்பது நமக்குத்தெரியுமா?
அனைத்தும் அறிந்துகொண்டே பிழைசெய்வது சரியா?
நாம் இம்மையில் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. நாளை மறுமையில் கேள்விகேட்கப்படுவோம். எனக்காக நின்று வணங்கினாயா பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக நின்று வணங்கினாயா? என. நாம் அலங்கரித்துக்கொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு. சமயங்களும் இருக்கு. நம்மை படைத்து நமக்காக பூமியிலுள்ள அனைத்தையும் அனுபவிக்க வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அந்நேரத்திலாவது நம்மை அவனிடம் முழுமையான மனதுடன் தூய்மையான உடலுடன். உள்ளச்சத்துடன். அவன்முன் நிற்கவேண்டாமா?
அழகு சாதனங்களில் தொழுகைக்கு, ஒழுவுக்கு கூடாதவைகள் கலக்கப்படிருக்கா என நாம் அறியோம். சில சொல்கிறார்கள் இது ஹலாலாக செய்யப்பட்ட லிஃப்ஸ்டிக் அதனால் தடவுகிறோம் என. இருந்துவிட்டுபோகட்டும். அதையேன் இறைவனின் சன்னிதானத்தில்
அழுது தொழும் அந்நேரத்தில் இட்டு வரவேண்டும் அங்கே பயபக்தியிருக்குமா? பொடுபோக்குதனம் இருக்குமா? அல்லது இறைவனின் மீது சிறு அச்சம்தானிருக்குமா?
இறைவனின்முன் ஓர் அச்சமின்றி நாளை அவன்வசம் மீழ்வோம் என பயமின்றி நடப்பதுதான் அதுவும் அனைத்தும் அறிந்தவர்கள் நடப்பதுதான் வேதனையான விசயம்..
இதை அவரவர் வீட்டு ஆண்களும் தன் அறியாப்பெண்களுக்கு நிச்சயம் சொல்லித்தரவேண்டும். அன்புப் பெண்களும் இதையறிந்து இறைவனுக்கு பயந்து நடக்கவேண்டும் நாளை நிச்சயம் கேள்விக்கேட்கப்படுவோம்.
அதற்கான கூலியை அடையப்பெறுவோம் .
அதனால்
நல்லவற்றை கேட்டும். பார்த்தும். படித்தும். அறிந்துகொள்ளுங்கள்.
அப்படியில்லையாயின் நாளை நஷ்டவாளர்களில் நாமும் ஒருவராகிவிடுவோம். அப்படியொரு நிலை வராமல் நம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து நம்மை சுவர்கவாசிகளாக ஆக்குவானாக ஆமீன்…
எவர் ஒருவர் தொழுகையை பேணி அதன் பர்ளுகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் இறைவனின் நேசத்திற்க்குறியவர்கள்
எவர் ஒருவர் தொழுகையில் அலச்சியமுடனும் பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காகவும் தொழுகிறார்களோ அவர்கள் அவனின் வெருப்புக்குள்ளானவர்கள்.
நான் அனைத்தும் அறிந்தவளல்ல. அறிந்தவரை இதுதவறென்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.
இறைவனின்மேல் நேசம் வைத்ததால்
இதை என்மன வருத்துடன் எழுதுகிறேன்
பிறரின் மனம் வருந்துவதற்க்காக அல்ல
அப்படி என் எழுத்துக்களில் வருந்துபடியாக இருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்..
-அன்புடன் மலிக்கா
source: http://fmalikka.blogspot.com/