Rasmin M.I.Sc
மலேசியா அசராங்கம் அன்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை மிக மிக ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது.
அதாவது படிக்கும் காலத்திலேயே கற்பமாகும் இளம் பெண்களுக்கு தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மலேசியாவின் மலாக்கா மாநில அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தி ஸ்டார் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே படிக்கும் காலத்தில் பல இளம் பெண்கள் விபச்சாரத்தின் மூலம் கற்பமாவதாகவும் அப்படி கற்பமடைபவர்கள் பல கஷ்டங்களை சந்திப்பதாகவும் அதனால்த்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் வரும் 16ம் தேதி குறிப்பிட்ட பள்ளி திறக்கப்படும் என்றும் அதனை மலாக்கா மாநில இஸ்லாமிய விவகாரத்துறை நிர்வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் இஸ்லாமிய நிலை என்ன?
மலேசியாவைப் பொருத்தமட்டில் இஸ்லாமிய நாடாக தன்னை அந்த நாடு வெளியுலகத்திற்கு காட்டிக் கொண்டாலும் அந்த நாட்டிற்கும் இஸ்லாமிய விழுமியங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அதாவது பெயரளவில் தான் தன்னை இஸ்லாமிய நாடு என அந்த நாடு அறிமுகம் செய்துள்ளதே தவிர இஸ்லாமிய சட்டங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அங்கு செயல்படுத்தப் படுவதில்லை.
மலேசியாவும் மத்ஹபுகளும்
மலேசியாவில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஷாஃபி மத்ஹபை பின்பற்றுபவர்கள் அங்குள்ள சட்ட திட்டங்களில் பெரும்பாலானவை ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றித்தான் அமைக்கப் பட்டுள்ளன.
ஆண்மீகத்திலிருந்து அரசியல் வரை பெரும்பாலும் ஷாஃபி மத்கபின் ஆதிக்கமே அங்குள்ளது.
குர்ஆன் ஹதீஸ் மாத்திரம்தான் மார்க்கத்தின் ஆதாரங்கள் இவை இரண்டையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என யாராவது தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கெதிராக அரசாங்க சட்டங்கள் பாயும்.
விபச்சாரத்தை கவனிக்க இஸ்லாமிய விவகார அமைச்சு
மலேசியா அரசு விபச்சாரத்தை கவனிக்க இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சைப் பயன்படுத்துவது மிக மிக கண்டிக்கத்தக்க செயலாகும்.
அத்தோடு இந்தச் செய்தி வெளியிடப் பட்டதை இது வரைக்கும் அந்நாட்டு உலமாக்கள்(?) என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் மாத்திரம் சென்ற வருடம் திருமணம் செய்யாமலேயே குழந்தைக்கு தாயானவர்கள் எண்ணிக்கை 170 அவர்களில் 70 பேர்கள் டீன் ஏஜ் மாணவர்களாகும்.
இப்படி திருமணமாகாமலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
For read more please click: http://www.rasminmisc.tk/