முதன்மையாக
இருப்பதல்ல வெற்றி
முன்னேறிக் கொண்டே
இருப்பதுதான் வெற்றி!
வீழாமல்
இருப்பதல்ல வெற்றி
வீழும் போது
எழுவதுதான் வெற்றி!!
பதவியை
அடைவதல்ல வெற்றி
இலட்சியத்தின் மூலம்
இலட்சியவாதிகளை
உருவாக்குவதே வெற்றி!
புகழைப்
பெறுவதல்ல வெற்றி
பூமியைப்
புதுப்பிப்பதுதான் வெற்றி!
பொருளைப்
பெருக்குவதல்ல வெற்றி
பொருளின் குவியலில்
ஏழையின் புன்னகையை ரசிப்பதுதான் வெற்றி!
கப்பலை
உருவாக்குவதல்ல வெற்றி
கப்பலின் மூலம்
கரையை அடைவதுதான் வெற்றி!
அறிவை
விரிப்பதல்ல வெற்றி
அறிவின் மூலம்
அறியாமையை விலக்குவதுதான் வெற்றி!
கருத்துக்களை
நெஞ்சில் சுமப்பதல்ல வெற்றி!
கருத்துக்களின் ஒளியில்
காலத்தை வெல்வதே வெற்றி!!
முதன்மையாக
இருப்பதல்ல வெற்றி
முன்னேறிக் கொண்டே
இருப்பதுதான் வெற்றி!
கவிதாசன் – முனைவர் கவிதாசன்