[“”எ ஜர்னி” என்ற பெயரில் தான் எழுதிய நூலிலிருந்து கிடைக்கும் தொகை முழுவதையும் போரில் காயம் அடைந்த வீரர்களின் மருத்துவச் செலவுக்கு அளிக்கிறேன் என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள் விமர்சகர்கள்.
அந்தப் பணம் பாவப்பணம்; பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் ரத்தப் பணம் என்று சாடியிருக்கிறார்கள். அதோடு மட்டும் அல்ல. உண்மைக்கு மாறான விஷயங்களைக் கூறி மக்களை நம்பவைத்து இராக் மீது படையெடுத்ததற்காக போர்க் குற்றவாளியாகவே டோனி பிளேரைக் கருதி அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
இராக் போருக்கும் லட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் வாழ்க்கைச் சீர்குலைவுக்கும் காரணமான அரசியல் தலைவர்கள் அடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்து காணாமல் போனார்கள் அல்லது ஆயுத பேரத்தில் கிடைத்த கோடிக்கணக்கான பணங்களுடன் சுகபோக வாழ்க்கையில் ஒதுங்கிக் கொண்டார்கள்.]
அமெரிக்காவின் அந்நாளைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் “”பொய்யான” உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிப் படை எடுத்தனர். அந்த நாள் முதல் இன்று வரை அப்பாவிகளான எத்தனை இராக்கியர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் யாரேனும் கணக்கு எடுத்துக்கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.
உளவுத்துறைகள் அளித்த அந்தத் தகவல்கள் உண்மையானவையோ நம்பகமானவையோ அல்ல என்று அப்போது கூறியவர்கள் ஓரம் கட்டப்பட்டார்கள்; பழிவாங்கப்பட்டார்கள்; அச்சுறுத்தி மெüனிகளாக்கப்பட்டார்கள். இராக்கில் போரைத் தொடங்க வேண்டும், அந்த நாட்டின் வளங்களைக் கைப்பற்ற வேண்டும், தங்களுடைய ஆயுதங்களுக்குத் தீனி வேண்டும் என்று கருதிய ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணமே பலித்தது.
நீதி, தர்மம் பற்றியெல்லாம் நாம் பேசுகிறோம்; ஜனநாயகத்தைப் போல உயர்ந்ததொரு ஆட்சி முறை கிடையாது என்று கொட்டி முழக்குகிறோம். இராக்கில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் நுழைந்த நாள் முதல் அந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். கடந்த ஓராண்டில் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சாதித்தது என்ன?
அவ்விரு நாடுகளிலும் போர் இன்னமும் ஓய்ந்தபாடில்லை; இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானம் செய்துவைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாகிவிட்டன.
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இப்போது நிலைமை முற்றி வெகு மோசமாகிவிட்டது.
“”எ ஜர்னி” என்ற பெயரில் தான் எழுதிய நூலிலிருந்து கிடைக்கும் தொகை முழுவதையும் போரில் காயம் அடைந்த வீரர்களின் மருத்துவச் செலவுக்கு அளிக்கிறேன் என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள் விமர்சகர்கள். அந்தப் பணம் பாவப்பணம்; பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் ரத்தப் பணம் என்று சாடியிருக்கிறார்கள்.
அதோடு மட்டும் அல்ல. உண்மைக்கு மாறான விஷயங்களைக் கூறி மக்களை நம்பவைத்து இராக் மீது படையெடுத்ததற்காக போர்க் குற்றவாளியாகவே டோனி பிளேரைக் கருதி அவர் மீது விசாரணை நடத்தி தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
இராக் போருக்கும் லட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் வாழ்க்கைச் சீர்குலைவுக்கும் காரணமான அரசியல் தலைவர்கள் அடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்து காணாமல் போனார்கள் அல்லது ஆயுத பேரத்தில் கிடைத்த கோடிக்கணக்கான பணங்களுடன் சுகபோக வாழ்க்கையில் ஒதுங்கிக் கொண்டார்கள்.
சர்வதேச அரங்கில் எழுதப்படாத சட்டம் என்னவென்றால், முறையாகவோ, முறைகேடாகவோ அணுகுண்டு தயாரித்து கையில் வைத்துக் கொண்டால் உங்கள் நாட்டை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பதாகும். வட கொரியா, பாகிஸ்தான் இரண்டுமே இதற்கு நல்ல உதாரணங்கள். அதிலும், பாகிஸ்தான் பெரும்பாலும் சர்வாதிகாரிகளின் ஆட்சியில்தான் இருக்கிறது.
அரசியல் அறிவியல் என்ற பாடத்தைப் படித்த மாணவனான எனக்கு இராக் யுத்தம் என்பது பெருந் துயரமாகவே மனதில் பதிந்துவிட்டது. காரணம், ஜனநாயக நாடுகளின் ஆட்சி நிர்வாக முறைகளைப் பற்றி நாம் படிக்கும் போதெல்லாம், பெரும்பான்மை மக்களின் ஆட்சி, சட்டத்துக்கு உள்பட்ட ஆட்சி, தவறே நடக்காத ஆட்சி, ஆட்சியாளர்கள் தவறு செய்தாலும் தடுத்து நிறுத்த ஏராளமான நெறியமைப்புகளும் கட்டுப்பாடுகளும் உள்ள ஆட்சி என்றெல்லாம் படித்திருந்தேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள மக்கள் ஆட்சி, போர் வேண்டும் என்ற ஆயுத வியாபாரிகளின் வெறித்தனமான முடிவுகள் முன் எப்படி நொறுங்கி விழுந்தன என்று நினைத்து நினைத்து நான் மாய்ந்து போகிறேன்.
ஏராளமான கனிமவளங்கள் நிறைந்து அதே சமயத்தில் தன்னை தற்காத்துக்கொள்ளக்கூடிய ராணுவ வலிமை இல்லாத இன்னொரு நாடும் இப்படித்தான் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றே என் உள் மனது எச்சரிக்கிறது.
அருண் நேரு
நன்றி: தினமணி