Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?

Posted on August 24, 2010 by admin

தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?

என்ன இவர்களுடைய நோக்கம்? இஸ்லாத்தை தூய வழியில் போதிகின்றவர்கள் என்று இவர்கள் போடும் சண்டைகள் என்று ஓயும்? மார்கத்திற்கு கூட்டத்தை அழைப்பதை விட மாநாடுகளுக்கும் தங்கள் சொந்த பயான்ன்களுக்கும் கூட்டத்தை சேர்ப்பதில் மும்முரமாக செயல் படும் இவர்களுது நிய்யத்து தான் என்ன?

அரசியல் வாதிகளிடம் தங்களுக்கு உண்டான மக்கள் செல்வாக்குகளை காட்டி சீட் பேரமோ. பொட்டி பேரமோ நடத்துவதுதான் இவர்களது நோக்கமா?

தௌஹீது என்ற பெயரில் இவர்களது தொண்டுகள் அனைத்தும் வியாபாரமா? இல்ல நீயா நானா என்ற அஹங்கார சண்டையா? எதற்காக இத்தனை சண்டை பேச்சுக்கள்? 25 வருடங்கள் முன்பு தௌஹீது என்ற உன்னத இறைகொள்கையை மறந்த தமிழக முஸ்லிம்களுக்கு எத்தி வைக்க வேண்டிய மிக பெரிய பொறுப்புடன் ஆரம்பம் செய்யப்பட்ட நோக்கத்தில் தான் இன்றும் அவர்கள் இருகின்றார்களா?

அவர்களுடைய மேடை பேசுகளில் மௌலீதையும், தர்காகளையும், மற்ற பிற பிட்’அத் களையும் ஒழிப்பது பற்றிய பிரசாரங்கள் குறைந்து மற்ற இயக்கத்தவர்களின் குறைகளை மாறி மாறி ஆராய்வதன் நோக்கம் என்ன? 

எங்கே இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு அணியின் கீழ் ஒன்று பட்டால் இஸ்லாமிய எதிரிகளான RSS , அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவர்கள் தோற்துவிட கூடும் என்ற பயத்தால் முஸ்லிம் உம்மாஹ் ஒன்று பட கூடாது என்ற நோக்கத்தில் செய்யும் சதிகளுக்கு இவர்கள் ஆளாகின்றார்களா? அல்லது அவர்களுடன் இவர்களும் கூட்டு வைத்து கொண்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்களா? உங்களுடைய நோக்கங்கள் தான் என்ன? அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையுடன் பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லும் வார்த்தைக்கு உங்கள் மரியாதை தான் என்ன?

தர்கா வாதிகளுடனும், தரிக்கா வாதிகளுடனும், ஷியா, காதியானி, பை-அத் கோஷ்டிகளுடனும் உங்களை கை குலுக்கி ஒற்றுமை பட கேட்கவில்லை.. அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்.. திருந்தாவிட்டால் தண்டிக்க பட வேண்டியவர்கள்.. ஆனால் மற்றவர்கள் யாரும்மையா உங்களுக்கு? உங்களைப் போன்று ஷிர்க் மற்றும் பித்தத்களை குரான் மற்றும் சுன்னாஹ் வழி மூலம் எதிர்க்கும் அல்லாஹ்வின் கயிற்றை பிரச்சாரிக்கும் உன் சகோதரன் தானே..

பல கொள்கையை உடைய அரசியல் கட்ச்சிகளே அரசியல் நோகதுக்காகவும் தங்கள் சொந்த லாபதுகாகவும் குறைந்த பட்ச செயல் திட்டம் தீற்றி ஒற்றுமையாக ஐந்து வருடம் ஆட்சி நடத்தும் போது தன் வாழ்வியல் நெறியாக வணக்கம் முதல் குடும்பம் வரை ஒற்றுமையை வழியுறுத்தும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் நம்மவர்களுக்கு குரானை ஒற்றுமையாக பற்றி பிடித்து கொள்வது எப்படி என்று தெரிய வில்லையா?

கருத்து வேற்பாடுகள் தான் நீங்க பிரிந்து கிடப்பதன் உண்மை காரணமா? அல்லது பிரிந்து கிடந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பது உங்கள் நோக்கமா?

மார்க்கத்தை நிலை நிறுத்து வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நபிகளாரின் சுன்னாஹ் உங்களுக்கு கற்று தர தவறிவிட்டதா?

தெரிந்தோ தெரியாமலோ, மார்க்கம் அனுமதித்ததோ அனுமதிகவில்லையோ அரசியல் காட்சிகளுக்கு ஆதரவு என்ற விசயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருகிறீர்கள்.. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று பிரச்சாரம் செய்த பேர்(?) ஆசிரியர்கள் இன்று ஜன நாயக முறையில் தேர்தலில் போடி இடுகிறீர்கள்.. எங்களுக்கு அரசியல் வேணாம்(?) என்றும் தௌஹீது மட்டும்தான் (?) எங்கள் பணி என்று இயக்கத்தை பிரித்த அண்ணன்கள் இன்று மாறி மாறி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பண்ணுகிறார்கள்..

நாங்கள் கிலாபாத் ஆட்சி முறையை கொண்டு வருவோம் என்று இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஈரானிய இஸ்லாமிய புரட்சியை உதரணமாக எடுத்து செயல் பட்டு வந்த இயக்கங்களும் இன்று சுதந்திர தினத்தை டெல்லி இல் நடந்ததை விட மிக சிறப்பாக கேரளத்தில் நடத்தி அரசியல் கட்சி திறந்து தேர்தலில் போட்டி இடவும் செய்கிறார்கள்..

ஒவ்வொருவரும் எதாவது ஒரு விசயத்தில் ஜனநாயகத்தை ஆதரித்து கொண்டிருகிறார்கள்.. ஜனநாயகத்தை ஆதரிக்கும் நீங்கள் அதை ஆதரிக்கும் முறையிலும் ஒன்று பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தேசிய முஸ்லிம் லீகும் DMK மற்றும் ADMK வை மாறி மாறி ஆதரித்து தான் அழிந்தது மட்டுமில்லாமல் தமிழக முஸ்லிம்களை இட ஒதுக்கீடு பிச்சைக்காரர்களாக ஆகிய கதைகள் நீங்கள் சொல்லி தான்யா எங்களுக்கு தெரியும்..

எங்கள் இரத்தங்களையும் உழைப்புகளை பொருளாக அளித்து உங்கள் இயக்கங்களை வளர்த்து இருக்கிறோம். எங்கள் உணர்ச்சிகள் எம்முடைய சமுதாயம் அழிந்து விட கூடாதென்பதில் இருக்கின்றது.. அதை கேலி கூத்தாக்கி விடாதிர்கள்.. அம்மாவோ அய்யாவோ இந்த சமுதாயத்துக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்.. அவர்களால் முடிவது எல்லாம் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவோ அல்லது திரும்ப மீளவோ உங்களை மாறி இயக்கங்களுக்கு பொட்டி பொட்டியாக பணம் தள்ளுவது மட்டும்தான்.. அந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்டியை முஸ்லிம்களின் சவ பொட்டியாக ஆக்கிவிடாதீர்கள்.

பத்து சதவிகித இட ஒதுக்கீடு எல்லா இயக்கத்தவர்களின் ஒரே நிலைப்பாடு.. அதை குறைந்தபட்ச செயல் திட்டமாக கொண்டு பிறை, ஜகாத், அரசியல், பண பங்கீடு, இஸ்லாமிய ஆட்சி இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் சண்டை போட்டு கொண்டு சிதறி கிடக்கும் இயக்கங்களே சிந்தித்து செயல் படுங்கள்..

இந்த ஒரு சட்டமன்ற தேர்தலை முஸ்லிம்களின் சக்த்தியை இந்த இந்திய அரசாங்கத்திற்கு புரிய வைக்க கூடிய கடைசி வாய்ப்பாக பயன் படுத்துங்கள்.. தவறினால் தக்லீது செய்யும் முட்டாள் இளைஞர்களை தவிர அறிவு கொண்டு சிந்திக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் உங்களை ஆதரிக்க மாட்டான்.. ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம்களின் பல தேவைகளை உங்களால் தீர்க்க முடியும்..

அரசியல் ரீதியிலான அந்த மாற்றம் இஸ்லாமிய இயக்கங்களுக்கான ஒரு கூட்டமைப்பில் மட்டுமே உள்ளது.. அக்கூட்டமைப்பு இல்லாத வரை மாறி மாறி ஆதரவு கொடுத்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.. கரசேவையை ஆதரிப்பதை ஜெ நிறுத்தபோவதுமில்லை தேவை பட்டால் முஸ்லிம்களை தொல்லை கொடுத்துகொண்டிருபதை கலைஞரும் நிருத்தபோவதில்லை.. நமக்கான வாழ்வு யாரை ஆதரிகின்றோம் என்பதில் இல்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் தயவு தேவை பட வேண்டும்.. காயிதமிள்ளத் உருவாகியதை போல..

posted by: Ibnu Sulaiman

source: http://fewormore.blogspot.com/2010/08/blog-post_23.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 + = 60

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb