டெஹ்ரான்: அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் இஸ்ராயிலின் எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி, ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது.
தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ரஷ்ய அதிகாரிகளின் முன்னிலையில் இப்பணித் துவங்கியது. ரஷ்யாவின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத்திட்டத்திற்கு எரிபொருள் அளிப்பதும், கழிவுகளை சேகரிப்பதும் ரஷ்யாவாகும்.
அணுசக்தி செறிவூட்டுதல் திட்டத்தின் பெயரால் ஐ.நா நான்குமுறை ஈரானின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் செலவிட்டு புஷஹர் அணுசக்தி நிலைய நிர்மாணம் பூர்த்தியானது.
எல்லாவித நிர்பந்தங்களையும், தடைகளையும் தாங்கிக் கொண்டு ஈரானின் அமைதியான அணுசக்தித்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்திப்பிரிவு தலைவர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்தார்.
இஸ்லாமிக் குடியரசின் எதிரிகளுக்கெதிரான வெற்றியாக சிறப்பிக்கப்படும் இத்திட்டத்தின் துவக்கத்தை தேசிய திருவிழாவாகக் கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு மாதத்திற்குள் அணுசக்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ள ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதனை பயன்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகள் பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஆனால், புஷஹரில் யுரேனியம் மூன்று சதவீதம் மட்டுமே செறிவூட்டப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சி ரியாக்டருக்காக 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தையும் ஈரான் துவக்கியுள்ளது. நதான்ஸ் ப்ளாண்டில் தேவையான செண்ட்ரிஃப்யூஜ்கள் நிறுவிவிட்டால் 30 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்திச் செய்யலாம் என ஸாலிஹி தெரிவிக்கிறார்.
அமெரிக்க மார்க்கெட் குறித்து அடுத்த பகீர்!
அடுத்த மாதம் இன்னொரு ‘அடி’ விழலாம்!
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.
பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.
அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
“இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்” என்கிறார் ஜிம்.