Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தேங்காய் தீங்கானதா?

Posted on August 17, 2010 by admin

டாக்டர் இராம. பத்மப்ரியா (சித்த மருத்துவர்), சென்னை

பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் தேங்காய் எண்ணெயில்தான் செய்யப்பட்டு வந்தன. இன்று நம் சமையலிலும், துவையல், அவியல், மோர்க்குழம்பு, கூட்டு, பொறியல் என தாராளமாகத் தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றோம். இப்படி நம் வாழ்விலும், சமையலிலும் தேங்காய் இரண்டறக் கலந்துவிட்டது.

ஆனால், சமீபகாலமாக நம் உணவில் தேங்காய் சேர்ப்பதையே மிகவும் குறைத்துவிட்டோம். இதற்குக் காரணம், தேங்காய் எண்ணெயில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாகச் சொல்லப்பட்டதுதான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புக்கள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையவை அல்ல.

இதில் மூன்று வகைகள் உள்ளன.

1. நீள வகையான கொழுப்பு அமிலங்கள் (Long Chain Fatty Acids LCFA)

2. மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் (Medium Chain Fatty Acids MCFA) 

3. குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் (Short Chain Fatty Acids SCFA)

பொதுவாக பூரிதக் கொழுப்புக்கள் நீள வகை கொண்ட கொழுப்பு அமிலங்களால் (LCFA) ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணணெயில் உள்ள மத்திம வகை கொழுப்பில் (MCFA) ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள்தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணம¡வதற்கு அதிக நேரம் ஆகும். அதனால், அவை உடலில் சேமித்து வைத்துக்கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்தப் படிந்து விடுகிறது. (SATURATED FAT). இந்த வகையான கொழுப்பைக் கரைப்பது மிகவும் கடினம்.

ஆனால் தேங்காய் எண்ணெயில் உள்ள MCFA ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பப்பட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது. மற்ற கொழுப்புக்களைப் போல சேமிக்கப்படுவதில்லை.

தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள ஆரம்பிக்கும் பொழுது கொழுப்புகள் விரைவில் சக்தியாக வெளியாக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையைக் குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை (Thermogenisis) அதிகரிக்கச் செய்கிறது. மற்றொரு அருமையான விஷயம் தாய்ப்பாலில் மட்டுமே உள்ள லோரிக் அமிலம் (Lauric Acid) தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை.

லோரிக் அமிலம் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி இருமல், அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டீரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்திபேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றது.

தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

0 உறையும் வகை கொழுப்பு வகையைச் சார்ந்ததாய் இருந்தால்கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.

0 தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதற்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்குச் சாப்பிட்டபின் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை. இது புற்றுநோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் எதிராகச் செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  

0 உடல் இளைக்க விரும்புபவர்கள், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து உடல் பருமனைக் குறைக்கிறது.

உடல் எடை கூடுவதற்கு கொழுப்பு சார்ந்த உணவுகள்தான் காரணம் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக அமைவது தீட்டப்பட்ட மாவுப்பொருட்களும் மற்றும் சர்க்கரை சார்ந்த பொருட்களுமே.

ஹைட்ரோஜினேஷன் செய்யப்படாத சுத்தமான செக்கு எண்ணெய் மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணெயின் வாழ்நாள் அதிகரிக்கப்படுகிறது. இந்த முறையில் எண்ணெயில் கொடிய கொழுப்பு உருவாகிறது. இவை இரத்தில் உள்ள தீமை செய்யும் கொலெஸ்டிரோலை அதிகரித்து (LDL) நன்மை செய்யும் கெ¡லெஸ்டிரோலை (HDL) குறைத்து விடுகின்றன.

சுத்தமான செக்கு எண்ணெயில் கொடிய கொழுப்புக்கள் உருவாவதில்லை.

மேலும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெயை விட அதிக சூடு தாங்கும் திறன் கொண்டது.

சூடுபடுத்தும்பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது. 450 0F (230 0C) வரை திடமாக சூட்டைத் தாங்கும்.

மற்ற தாவர எண்ணெய்கள் இந்த அளவுக்கு சூடு தாங்காது.  

உதாரணத்துக்கு ஆலிவ் எண்ணெய் 3750F (1900F) வரைதான் சூடு தாங்கும். அதிக சூடுபடுத்தும்பொழுது கொடிய கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளதால் இதை வறுப்பது, பொறிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாது.

தேங்காய் எண்ணெயை அதிகம் சூடு செய்யும்பொழுது கொடிய கொழுப்புக்கள் உண்டாவதில்லை. அதனால் இவை வறுப்பது, பொறிப்பது போன்ற சமையல்களுக்கு ஏற்றது.

அலட்சியமாகக் கருதப்பட்ட பல விஷயங்களில் நல்ல குணங்கள் நிரூபிக்கப்பட்ட பின், அதை முக்கியமாகக் கருதுவதை காலம் திரும்பத் திரும்ப நமக்கு நிரூபித்து வருகிறது. இது தேங்காய்க்கும் மிகப் பொருந்தும்.

Thanks regards: Ruknudeen

 source: http://tamilchuvai.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb