எம்.ஏ. ஹபீழ் ஸலபி
அண்மையில் பிபிசியில் ‘ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்’ என்ற பெட்டக நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இது இஸ்லாமிய உலகில் குறிப்பாக ஒழுக்க வாழ்வை நேசிப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி யில் ஒலிபரப்பப்பட்ட அந்த பெட்டக நிகழ்ச்சியின் துவக்கத்தில் ‘ஒரு பால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.’ என்று துவங்குகிறது.
இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்ற ஒரு தீமை இது என்பதை பிபிசி நன்கு உணர்ந்துள்ளது. அதே போல் தூய்மையான இஸ்லாமிய உம்மத்தும் இந்த ஒழுக்கச் சீர்கேட்டு நடவடிக்கையை அங்கீகரிக்காது என்பதை அது உணர்த்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.
எனினும்,ஒரு பிரபலமான செய்தி நிறுவனம் இந்த பெட்டக நிகழ்ச்சியில் பல்வேறு தவறுகளைவிட்டுள்ளது. ஒரு சில தனிமனிதர்களின் தவறுகளை அவர்கள் சார்ந்த மதத்துடன் தொடர்பு படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இஸ்லாத்தை அறியாத முஸ்லிம்களின் நடவடிக்கைகளுடன் இஸ்லாத்தையும் விமர்சனம் செய்வது இன்று சில மீடியாக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.இஸ்லாத்தில் ஒரு பால் உறவுக்கு தடையும் கடுமையான தண்டனையும் உண்டு என்று அறிந்துகொண்டே பிபிசி இதை செய்தியாக்குவது இஸ்லாத்தின் மீது அதற்குள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.
பெட்டக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களை ஈரானியர் என்று அறிமுகப்படுத்துகின்றனர். இன்றைய ஈரானிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில், அவர்களின் கொள்கை யூத மதத்திற்கு ஒப்பானது. இஸ்லாமிய சமூகம் ஷீயாயிஸத்தை அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், அது இஸ்லாமிய அகீதாவை விட்டு வெளியேறிவிட்ட ஒரு தனி மதம். பொதுவாக ஈரானியர்களிடத்தில் வாடகைத்திருமணம் கூட நடைமுறையிலுள்ளது. இதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இந்த நடைமுறையை விபச்சாரமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.
நாளை லண்டனில் கூடும் ஈரானிய விபச்சாரிகளிடம் பேட்டி கண்டுவிட்டு, ‘இஸ்லாமிய சமூகத்தில் விபச்சாரம், வாடகைத் திருமணம்’ என்று பிபிசி செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. ஏனெனில், யூத கிறிஸ்தவ சக்திகள் கடந்த 1431 ஆண்டுகளாக இதனையே செய்து வருகின்றன.
இதே வேளை, பிபிசி இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யூதர்கள் பிறப்பால் தான் யூதனாக இருக்க முடியும். அவர்கள் தான் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் – கிறிஸ்தவர்கள் உட்பட – அவர்களின் அடிமை என்று தான் யூதர்கள் கருதுகிறார்கள். இதற்கு நிகரான சிந்தனையே ஷீஆக்களிடமும் உள்ளது.
ஷீஆக் குழந்கைதளைத் தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளே என ராபிழா(ஷீஆ)க்கள் கருதுகின்றனர். இந்த செய்தியை வெளியிட்ட பிபிசி செய்தியாளர்கள் உட்பட.
புர்கான் எனும் தப்ஸீரில் ஹாஸிம் அல் பஹ்ரானி என்பவர் ஜஃபர் பின் முஹம்மது சொன்னதாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்கிறார்.
‘எந்தக் குழந்தை பிறப்பினும் ஷைத்தான் அதன் அருகில் இருக்கிறான். அக்குழந்தை ஷீஆக் குழந்தை என்பதை அவன் அறிந்தால் ஷைத்தான் அதனைத் தீண்டமாட்டான். ஏனைய குழந்தைகளானால் தனது ஆட்காட்டி விரலை ஆண்குழந்தையின் பின்புறத்திலும்,பெண் குழந்தையாயின் அதன் பிறப்புறுப்பிலும் நுழைப்பான். ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு முகவடிவிலும் பெண் குழந்தை விபச்சாரியாகவும் ஆகிவிடும். இதனால் தான் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் போது கடுமையாக அழுகின்றது” என்கிறார்.
‘ஒரு விடுத்தம் முத்ஆ திருமணம் செய்தால் மூன்றில் ஒரு பகுதி நரகத்திலிருந்தும், இரண்டு விடுத்தம் செய்தால், மூன்றில் இரண்டு பகுதி நரகத்திலிருந்தும், மூன்று விடுத்தம் செய்தால், முழமையாக நரகத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுவார்’ என்று ‘மன்ஹஜூஸ் ஸாதிகீன்’ எனும் தப்ஸீரில் பத்ஹூல்லாஹ் கஸானி எனபவர் கூறுகின்றார்.
அதேபோல், ‘ஒரு முறை முத்ஆத் திருமணம் செய்தவர் ஹூஸைனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். இரண்டு விடுத்தம் செய்தால் ஹஸனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். மூன்று விடுத்தம் செய்தால், அவருடைய அந்தஸ்து என்னுடைய அந்தஸ்தைப் போன்றது’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாகவும் அதில் உள்ளது.
ராபிழாக்களிடம் ‘முத்ஆ’ திருமணத்திற்கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை.
‘அபூ அப்துல்லாஹ் என்பவரின் முத்ஆத் திருமணம் நான்காகும் எனக் கேட்டேன். அதற்கு அவர் அவர்களில் 1000 பேரை வேண்டுமானாலும் முடி, ஏனெனில், அவர்கள் வாடகைப் பெண்களே!’ என்றார் என்று புரூவுல் காபி, அத் தஹ்தீப், அல் இஸ்திப்ஸார் போன்ற நூல்களில் உள்ளது.
‘அது நான்குடன் மட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தலாக் சொல்லப்படவோ, அனந்தரக்காரர்களாக்கப்படவோ முடியாது. அவர்கள் வாடகைப் பெண்களே’ என்று ஜஃபர் சொன்னதாக முஸ்லிம் சொல்லுகிறார்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. வாடகைத் திருமணம் என்ற விபச்சாரத்தை சட்டமாக அங்கீகரித்துள்ள ஈரானை இஸ்லாமிய எழுச்சியின், கிலாபத்தின் முன்மாதிரியாக சில இயக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரசாரம் செய்து வருகின்றன. கொள்கை ரீதியாக யூத வழிமுறையைப் பின்பற்றும் ஈரான் எவ்வாறு இஸ்லாமிய எழுச்சியின் முன்மாதிரியாக ஆக முடியும் என்று கண்ணை விற்று ஓவியம் வாங்க நினைக்கும் இந்த சுயநல இயக்கங்கள் சிந்திக்க வேண்டும்.
ஈரானில வாடகைத் திருமணத்தை அங்கீகரித்தவர்கள்;, இன்று அவர்கள் லண்டனில் ஒருபால் உறவுக்காரர்களாக தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். கிறிஸ்தவ மத குருமார் பாலியல் சேட்டை நடாத்துவது போன்று ஷீஆ மதப் பிரிவிலும் இத்தகையவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான் இமாம்கள் என்று அறிமுகமாகி இந்த ஒருபால் உறவுத் திருமணத்தையும் செய்து வைக்கின்றார்கள்.
இந்தக் கயவர் கும்பலை இஸ்லாமிய உம்மத் ஒருபோதும் அங்கீகரிக்காது.
இந்த ஷீஆ இமாம்கள் போன்று ஜூப்பா, பெரிய தாடியுடன் அலையும் சில மூத்திரம் குடித்த கயவர்களின் நடவடிக்கையும் பிபிசியின் விமர்சனத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் மக்களை ஏமாற்றும் சுயமரியாயையற்ற சிலர் பெரிய தாடி, ஜூப்பாவுடன் அலைகின்றனர். தாங்கள் தஃவா செய்வதாகவும் சீன் காட்டுகின்றனர்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அடுத்தவனின் சிறு நீரைக் குடித்ததாக முகம் பார்க்காமலே மூர்க்கத்தனமாக காம வெறியாட்டம் ஆடும் கபோதிகள் எல்லாம் தஃவாவில் வெற்றி பெறப்போகின்றார்களாம்.கேட்பதற்கே அசிங்கமாக உள்ளது.
இத்தகைய மனநோயாளிகளுக்கு காமவெறி முற்றிப்போய் உடன் பிறந்த சகோதரி என்ற வேறுபாடுகள் கூடத்தெரிவதில்லை. உடன் பிறந்த சகோதரியை தன் காமவெறிக்கு ஆளாக்கும் சந்தர்ப்பம் தவறிவிட்டதாக இணையத்தில் காம வெறியாட்டம் புரியும் இத்தகைய கபோதிகள்தான் இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கின்றனர். இத்தகைய முஸ்லிம் சமூகத்திலுள்ள பிரேமானந்தாக்களை மோப்பம் பிடித்துத் தான் பிபிசி இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறது என்பது வேதனையான விடயமாக உள்ளது.
முஸ்லிம் உம்மத் இத்தகைய ஜுப்பா, பெரிய தாடியுடன் அலையும் போலிப் பக்கீர்களை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
mahsalafi@gmail.com source: http://kadayanalluraqsha.com/?p=4716