கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்
கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம் உம்மத் தாம் உலகின் பற்திசைகளிலும் எவ்வாறு அதிகாரத்துடனும், கண்ணியத்துடனும் இருந்தோம் என்பதை விரிவாகவும், ஆழமாகவும் புரிவது இன்றியமையாததாகும்.
மேலும் கிலாஃபத்தின் வரலாறு குறித்தும் அது எவ்வாறு படிப்படியாக மறைய ஆரம்பித்து பின்னர் முற்றாக வீழ்த்தப்பட்டது தொடர்பாகவும் ஆராய வேண்டியதும் முக்கியமானதாகும். மேலும் சிலர் தவறாகக்கூறுவதைப்போல கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போது அப்போதிருந்த மார்க்க அறிஞர்களும் முஸ்லிம்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற கருத்தின் உண்மைநிலை குறித்தும் நாம் முற்றாக ஆராய வேண்டும்.
உண்மையில் அந்தக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனெனில் து}ய்மையான முஸ்லிம்கள் பலர் கிலாஃபத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையையும், அது தமது கண்முன்னால் அழிக்கப்படும்போது அதனால் அவர்கள் அடைந்த வேதனைகளையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. இதற்கொரு சிறந்த சான்றே இந்திய முஸ்லிம்களும், இந்தியாவில் உருவான கிலாஃபத் இயக்கமுமாகும்.
கிலாஃபத் அழிக்கப்பட்டபோது இந்திய முஸ்லிம்களின் எதிர்நடவடிக்கை எவ்வாறிருந்தது என்பதை ஆராய முன் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தை வந்தடைந்தது என்பதை ஆராய்வது அவசியமாகும்.
இன்று முஸ்லிம்களின் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய அரைப்பகுதியை அதாவது அரை பில்லியன் பேரை இன்றைய இந்தியாவின் 250 மில்லியன் முஸ்லிம்கள், பாகிஸ்தானின் 160 மில்லியன் முஸ்லிம்கள், பங்களாதேஸின் 120 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளடக்குகின்றனர் என்பதும், இன்றைய முஸ்லிம் உம்மத்தின் பெரும்பான்மையோரின் மொழியாக (அரபைவிடவும்) உருது மொழி மாறிவிட்டது என்பதும் இங்கே கவனத்திற்கொள்ளத்தக்கது.
இந்தியாவில் கிலாபத்தின் சுருக்க வரலாறு
முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் கி.பி 711ம் ஆண்டு சிந்து நதிக்கரை ஓரமாக இந்து சமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இதன்போது இவர்கள் பயணம் செய்த கப்பல் கடத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டு பின் பயணம் செய்த அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி இஸ்லாமியக் கிலாபத்தின் தலைமையகத்தை எட்டியது.
அன்றைய கலிஃபா அல் வலித் இப்னு அப்துல் மலிக்; இதுபற்றி அறிந்து இடம்பெற்ற அநீதிக்காக சிந்தின் ஆட்சியாளர்களை மன்னிப்புக்கேட்குமாறும் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை விடுவிக்குமாறும் கோரும்படி, பக்தாத்திலே தனது ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுபிற்கு பணித்தார்கள். இப்பாரிய பணிக்காக முஸ்லிம்களின் படையொன்றும் சிந்து பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கியபடி வெறுமனவே 17 வயதே நிரம்பிய முஹம்மது பின் காஷிம் அல் தகாபி தனது படையுடன் சிந்திற்கு புறப்பட்டார்.
இஸ்லாமியப்படை சிந்துப்பிரந்தியமான தபெலை (தற்போதைய கராச்சி) அடைந்தவுடன் படைத் தளபதி கலீஃபாவின் கோரிக்கையை சி;ந்தை ஆட்சி செய்துகொண்டிருந்த ராஜா தாஹிரிடம் முன்வைத்தார். எனினும்; இந்த நியாயமான கோரிக்கையை ராஜா தாஹிர் அடாத்தாக மறுத்தார். எனவே முஸ்லிம் படையினர் ராஜா தாஹிரை எதிர்த்து தோற்கடித்ததுடன் சிந்தை கைபற்றி கிலாஃபத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
அல்லாஹ்வின் கட்டளையை மேலொங்கச் செய்யும் நோக்குடன் முஹம்மது பின் காஸிம் முஸ்லிம்கள் சிந்தில் பெற்ற வெற்றியை மேலும் விரிவுபடுத்தினார். இஸ்லாமிய அகிதாவால் உந்தப்பட்ட இந்த இராணுவம் முன்;றே ஆண்டுகளில் முல்தான் வரை படையெடுத்து சிந்தை முழுமையாக கைபற்றியதுடன் பஞ்சாப்பின் கீழ்ப்பகுதியையும் கிலாஃபத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்திய உபகண்டத்தின் வடமேற்கு பிரதேசத்தையும் கைபற்றிய இஸ்லாமிய இராணுவம் அங்கு சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து அவர்களை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தது. முஹம்மது பின் காஸிமின் நிர்வாகம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒரே விதமாகவே பரிபாலித்ததுடன் கைபற்றப்பட்ட பகுதிகளின்; அதிகாரிகளாக முன்பு கடமையாற்றிய முஸ்லிம் அல்லாதவர்களையே மீண்டும் அவர்களின் பதவிகளில் அமர்த்தியது. முஹம்மது பின் காஸிம் “மக்களுடனும், அரசுடனும் நேர்மையாக இருங்கள். மக்களின் இயலுமைக்கேற்ப வரிகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என கிலாஃபத்தின் அதிகாரிகளிடம் பணித்தார்.
கலிஃபா இசாம் பின் அப்துல் மாலிக்கி;ன் ஆட்சிக் காலத்தில் (கிபி 724 – கிபி 743) முஸ்லிம்கள் காஷ்மிரையும் கங்ராவையும் கைபற்றினர். கிபி 754 கிபி – 775 காலப்பகுதியில் ஆட்;சி செய்த அப்பாசிய கலிஃபா அபு ஜாஃபர் அல் மன்சூரின் ஆட்சிக் காலத்தில் கந்தஹாரும் கைப்பற்றப்பட்;டதுடன் இந்திய உபகண்டம் முழுவதையும்; இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பு தீவிரம் பெற்றது.
கிபி 786 – கிபி 809 காலப்பகுதியில்; ஆட்சி செய்த கலீஃபா ஹாரூன் அர் ரஷீத்தின் காலப் பகுதியில் முஸ்லிம்கள் தமது எல்லையை சிந்துவின் மேற்கு பகுதியிலிருந்து குஜாராத் வரை விரிவடையச் செய்தனர். இக்காலப் பகுதியில் இஸ்லாமிய இராணுத்தினரும் அங்கே குடியமர ஆரம்பித்ததுடன் புதிய நகரங்களும் தோற்றம் பெற்றன. இக்காலப்பகுதியில் சாதி முரண்பாடுகளில் சிக்குண்டு குப்ருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த பெரும்பான்மை இந்தியர்கள் உலகச்சகோதரத்துவ இயக்கமான இஸ்லாமிய உம்மத்துடன் கோர்க்ப்பட்டனர்.
குஃப்ரின் காரிருளில் மூழ்கியிருந்தவர்கள் இஸ்லாத்தின் தூய பரகாசத்திற்குள் நுழைந்தனர். சிலை வணக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டு ஏக இறைவனான அல்லாஹ்வை அடிபணிய ஆரம்பித்தனர். இவ்வாறு இன்று மேற்குலகின் திட்டமிட்ட சதியால் பிரிக்கபட்டு இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், பங்களாதேஷ் என இப்போது அழைக்கப்படும் அனைத்துப்பகுதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய கிலாஃபத்தின் கீழ் ஆளப்பட்டன. எனவே இந்திய வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்களுக்கு மத்தியில் இந்தியா இஸ்லாமிய கிலாபத்தின் ஓரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும்.
சில கலிஃபாக்களின் கவனயீனத்தால் இந்தியா இஸ்லாமிய ஆட்சியின் மேற்பார்வையிலிருந்து சிறுகச் சிறுக விலகத் தொடங்கினாலும் அங்கு ஷாப்ஆ நிலைநாட்டப்பட்டு வந்ததுடன் பிரித்தானியர்கள்; இந்தியாவை கைபற்றும் வரை அது கிலாபத்தின் கீழே இருந்து வந்தது. முஸ்லிம் வரலாற்றாசிரியரான இப்னு கதிர் அல் திமிஷ்கி தமது புகழ் பெற்ற நூலான அல் பதாயா வன்நிஹாயாவில் இந்தியா தாருள் இஸ்லாத்தின் ஒரு பகுதி எனக்குறிப்பிடுவதுடன் இந்தியாவின் கைப்பற்றுகை குறித்த பின்வரும் ஹதீஸையும் குறிப்பிடுகிறார்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள.
“இந்த உம்மத்தின் படை சிந்துக்கும், இந்தியாவுக்கும் அனுப்பபடும். அப்படையில் பங்கு பெற எனக்கு வாய்ப்பு கிடைத்து, நான் ஷஹீதானால் அது வெற்றியாகும். நான் இங்கு மீண்டும் திரும்பி வந்தால், நான் விடுதலைபெற்ற அபூ ஹுரைராவாவேன். அல்லாஹ் எனக்கு நரகிலிருந்து விடுதலை அழிப்பான்” (அஹ்மத்)
கிபி 1556 – கிபி 1605 வரையான அக்பரின் (அக்பர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கிறானார்) காலப்பகுதி தவிர கிபி1205 – கிபி 1526 வரை டெல்லி சுல்தானியக் காலப் பகுதியிலும் கிபி 1526 – 1557 முகலாயக் காலப்பகுதியிலும் இந்தியா கிலாஃபத்தின் ஒரு மாகாணமாகவே இருந்தது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதி காலப்பகுதியில் கஸ்னி, முல்தான், சிந்து லாஹூர், டெல்லி என பல பகுதிகளை முஹ்மது கஹ்ர்; வரிசையாக கைபற்றத் தொடங்கினார். இவரின் ஜெனர்ல்களில் ஒருவரான குதுபுத்தீன் அய்பக் டெல்லியின் சுல்தானாக பதவியேறறார்.
பின்பு 13ம் நு}ற்றாண்டின் சம்சுதீன் இல்துமிஷ் கிபி1211 – கிபி 1236 என்ற முன்னால் துர்க்கி போராளி டெல்லியின் அதிகாரத்துக்கு வந்தார். இவரின் வருகை பின்னை நாள்; சுல்தான்கள் அனைவருக்கும் மற்றைய பகுதிகளையும் கைபற்ற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது
source: http://sindhanai.org/?p=21